சென்னை, தனியார் கல்லுாரிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு நியமித்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, உயர் கல்வித்துறை செயலர், பல்கலை மானிய குழுவுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலையின், தனியார் கல்லுாரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர், டாக்டர் இரா.லட்சுமிபதி தாக்கல் செய்த மனு:கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு நேரடியாக கண்காணிக்கிறது. இந்த கல்லுாரிகளுக்கு, மாதிரி கட்டண அமைப்பை, இதுவரை, யு.ஜி.சி., வகுக்கவில்லை. கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு, யு.ஜி.சி., கொள்கை வகுக்க வேண்டியுள்ளது.குழு முடிவுஇந்நிலையில், தனியார் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் நடத்தப்படும், சுயநிதி வகுப்புகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் குழு அமைத்து, ௨௦௧௮ ஆகஸ்டில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
கல்வி நிறுவனங்கள் உத்தேசித்துள்ள கட்டணத்தை, உரிய ஆவணங்களுடன், குழு முன் சமர்ப்பிக்க வேண்டும். உத்தேசித்துள்ள கட்டணம் நியாயமானதா என்பதை, குழு முடிவு செய்யும். கட்டணத்தை ஏற்கவோ அல்லது வேறு கட்டணத்தை பரிந்துரைக்கவோ, குழு உத்தரவிடும். இந்த கட்டணம், மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். தற்போது, உத்தேசித்துள்ள கல்வி கட்டண விபரங்களை சமர்ப்பிக்கும்படி, கல்லுாரிகளுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பப் பட்டு வருகிறது.
எந்த வழிமுறைகளும், நடைமுறையும் இல்லாமல், அரசு நியமித்த குழுவால், நியாயமான கட்டணத்தை முடிவு செய்ய முடியாது.கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, எந்த நடைமுறையை, வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பது, அரசு உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. கட்டணத்தை வகுக்க, கல்லுாரிகள், எந்த அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும்; எதன் அடிப்படையில், குழு முடிவெடுக்க வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.விசாரணைதனியார் கல்லுாரிகளுக்கு, எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. குழு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய வழி இல்லை. இது, கல்லுாரிகளின் உரிமையை பாதிக்கிறது. அரசு உத்தரவு, தெளிவற்றதாக உள்ளது.
இதனால், கட்டணம் நிர்ணயம் செய்வதில், குழப்பங்கள் ஏற்படலாம். அது, கல்லுாரிகளின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, உயர் கல்வித்துறை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, அரசு உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவையைச் சேர்ந்த, தனியார் கல்லுாரிகள் நிர்வாக சங்கமும், மனு தாக்கல் செய்துள்ளது.
இம்மனுக்கள், நீதிபதி, டி.ராஜா முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, உயர் கல்வித்துறை செயலர், பல்கலை மானிய குழு, கல்லுாரி கல்வி இயக்குனர் மற்றும், கட்டண நிர்ணய குழுவுக்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும், ௩௧க்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment