திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, January 6, 2019

உதவித் தொகை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ., ) இந்திய வங்கித்துறை மற்றும் ஆர்.பி.ஐ.,  மீதான ஆர்வத்தையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஆர்.பி.ஐ., இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்.பி.ஐ.,  நாடெங்கிலுமான  போட்டித் தேர்வு வாயிலாக அதிகபட்சம் இளம் மாணவ மாணவிகளை தெரிவுசெய் தேர்வு செய்து மாணவர் உதவி தொகை வழங்க இருக்கிறது.

தகுதி: 
  இந்தியாவில் எந்த அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலும் எந்தப்பாடதிலும் தமது பட்ட படிப்பைத் தொடரும் 18 லிருந்து 23 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போட்டித் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
  தேர்வு ஆர்.பி.ஐ., மற்றும் இந்திய வங்கிகளின் பங்கு மற்றும் செயல்பாடுகளை மையமாக கொள்ளும். இத்தேர்வு ஆங்கிலத்திலும், பிற முக்கிய பிராந்திய மொழிகளிலும் நடைபெறும்.
  தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆர்.பி.ஐ., யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களில் 2 முதல் 3 மாதங்களுக்கு செயல் திட்டங்களில் பணியாற்ற வேண்டும், அந்த காலத்தில் தொகுப்பு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ 7500/- வழங்கப்படும். வெளியூர் நபர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிக்கு ஆர்.பி.ஐ., உதவும்.
      பரிசாளர்களுக்குஆர்.பி.ஐ., யில் பணி நியமனம் கோர எந்தவித உரிமையும் இல்லை . முந்தைய ஆண்டுகள் எதிலும் ஆர்பிஐ இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்று ஆர்.பி.ஐ., யில் பணிபுரிந்தவர்கள் எவரும் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் அல்ல.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிசெயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம்,
செயல் திட்டம் எண் 9277
அஞ்சல் பெட்டி எண் 7639
மலாட்(மேற்கு), மும்பை
    ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசு திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் ஆர்.பி.ஐ., இணைய தளம் www.rbi.org.in , "எம்ப்லாய்மென்ட் நியூஸ்" மற்றும் "ரோஜ்கார் சமாச்சார்" பத்திரிக்கைகளிலும் கிடைக்கிறது.
Scholarship : ரிசர்வ் வங்கி இளம் மாணவர்கள் பரிசுத்திட்டம்
Course : 
Provider Address : செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம், செயல் திட்டம் எண் 9277 அஞ்சல் பெட்டி எண் 7639 மலாட்(மேற்கு, மும்பை www.rbi.org.in

No comments:

Post a Comment