இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களுக்கு கடும் பஞ்சம் நிலவுவதாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக இருப்பதாகவும், சென்டர் பார் பட்ஜெட் அண்ட் கவர்னன்ஸ் (சி.பி.ஜி.ஏ.,) மற்றும் சைல்டு ரைட்ஸ் அண்ட் யூ (சி.ஆர்.ஒய்.,) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது!
உத்தரபிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சட்டிஸ்கர், மஹாராஷ்ட்ரா மற்றும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தப்படாத அதேநேரம், திறமையும், தகுதியுமிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை.
இன்னும் பல மாநிலங்கள் தகுதியில்லாத மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கும் நிலை தொடர்கிறது. குறிப்பாக, பிகாரில், தகுதியில்லாத ஆசிரியர்கள் ஆரம்ப கல்வி அளவில் 38.7 சதவீதமாகவும், மேல்நிலை கல்வி அளவில் 35.1 சதவீதமாகவும் உள்ளது.
இதுவே, மேற்கு வங்கத்தில் முறையே 31.4 சதவீதம் மற்றும் 23.9 சதவீதமாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment