திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, July 19, 2018

கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்?

இந்த 4 அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண்மேட்டூர்அணை ஒன்றே போதும்..  இவர்களை விழுங்க..

Image result for DAM

1. கபினி அணையின் கொள்ளளவு 15.67 டிஎம்சி..

2. ஹேமாவதி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35.76 டிஎம்சி..

3.ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி...

4. கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவு 45.05 டிம்சி..

-என ஆக மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீர்...

இவ்வளவு தண்ணிரையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் கூட (திறக்க வாய்பில்லை என்பது வேறு)

நம்ம மேட்டூர் நீர் தேக்க்கத்தால் சற்றேரக்குறைய 93.4 டிஎம்சி. அதாவது 90 விழுக்காடு தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.

உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கான பதில் இதுதான்..

அதாவது ஒரு #TMC தண்ணீர் என்பது One Thousand Million Cubic Feet அதாவது 100,00,00,00. எளிமையாக சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2,830 கோடி லிட்டர்.

அதாவது ஒரு #டிஎம்சி தண்ணீரை #பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து, லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் என்றால்..

ரூபாய் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை விற்று ஆட்டய போடலாம்..

அடுத்தது அணைகளின் கொள்ளளவை பார்த்தோமெனறால்..

'ஒரே நாளில் 5' உயர்ந்தது..
10' அடி உயர்ந்தது..
80' அடியை தாண்டியது…
100' அடியை தொடப்போகிறது..'

-என்றெல்லாம் டிவி சேனல்களில் பிரேக்கிங் செய்தியை அடுச்சு விடுவார்கள்.

ஆழ்ந்து யோசித்தால் இந்த அடி கணக்கால் ஒரு பயனும் கிடையாது..

கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி.

தண்ணீர் கொள்ளளவு 45.05 டிஎம்சி.

மேட்டூர் அணையின் உயரமோ 120 அடி.

ஆனால் கொள்ளளவு 93.4 டிஎம்சி..

அதாவது மேட்டூரில் இரண்டு கேஆர்எஸ்சை வைத்துவிடலாம்..

மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை.

ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாசர்களை மேட்டூரில் வைக்கலாம்..

நம்ம திருவண்ணாமலை சாத்தனூர் அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க,

'இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது'

-என்று அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பத்தில் முழு பொருள் உள்ளதா?

நமது மேட்டூர் அணைக்கே வருவோம்.

அதில் 50' அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி..

75' அடியை தொட்டால் 37 டிஎம்சி..

100' அடி என்று சொல்வார்களே, அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்..

ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும்.

அதாவது மேட்டூர் அணை 100-லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் தேவை.

.அணை குறித்த செய்தி என்றால், எளியோருக்கும் புரிகிற மாதிரி  இருக்க வேண்டும் அல்லவா?

'எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது' என்பதோடு..

'அணையின் கொள்ளவு,  நீர் எத்தனை விழுக்காடு இருக்கிறது' என்று சொன்னால் எளிதில் புரிந்துவிடும்.

இன்று காலை (ஜூலை 17) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94'.….

நீர் இருப்பு 54 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 57-விழுக்காடு...

அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..

‘’120' அடியில் 100' அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு..

100' தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை.. அவ்வளவே...

No comments:

Post a Comment