வெயிட்டேஜ் முறை இல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2013, 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளது. இனி எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ, வெயிட்டேஜ் இல்லாமலேயே தேர்வை எழுதி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment