திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, February 15, 2019

பிப்ரவரி 23 மற்றும் 24 ~ வாக்காளர் சிறப்பு முகாம்!

வாக்காளர் சிறப்பு முகாம் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில்  வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

Wednesday, February 13, 2019

632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு



உடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், இந்த ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.தமிழகத்தில் காலியாக உள்ள 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான எழுத்துத் தேர்வு 2017, செப்டம்பர் 23 ஆம் தேதி நடந்தது. இதில் தேர்வான 632 பேரின் பெயர்களை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.இந்நிலையில் இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையில் கல்வித்தகுதி குறித்து முறையாக குறிப்பிடப்படவில்லை எனக்கூறி, தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உடற்கல்வி ஆசிரியர் தேர்வுப் பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என நெல்லையைச் சேர்ந்த மலர்விழி உள்பட பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தேர்வுக்காக வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பாணை முறையாக இல்லை எனக்கூறி தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட பலர் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பில், முறையான கல்வித்தகுதி பெற்றவர்கள் தான் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டது.இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு 2018, அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை உறுதி செய்தும், தேர்வு அறிவிப்பை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணைகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

உடற்கல்வி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்டவர்களின் கல்வித்தகுதி குறித்து பரிசீலனை செய்ய குழு அமைத்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

TRB - விரிவுரையாளர் தேர்வு முறைகேடு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!



கடந்த 2017ல் நடந்த அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வுக்கு முன், முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து வரும் 20ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு புலன் விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2017ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக்களில் ஆயிரத்து 58 விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.

இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் முடிவால் நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களும் பாதிக்கப்படுவர் என்பதால், தேர்வை ரத்து செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மோசடியில் ஈடுபட்டவர்களை தனியாக பிரித்து அவர்களின் தேர்வை மட்டும் ரத்து செய்யக்கோரியும் விண்ணப்பதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

 தனியார் நிறுவனம் மூலம் தேர்வு நடத்தப்பட்டதாகவும், அந்த நிறுவனம் விடைத்தாள்களில் திருத்தம் செய்துள்ளதாகவும், பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி, அரசின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கடந்த 2017ல் நடந்த இந்த மோசடி வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு புலன் விசாரணை அதிகாரியை வரும் 20ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதுவரை நடந்த விசாரணையில், விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வுக்கு முன்பே முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: ட்ராய் அறிவிப்பு


கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ட்ராய் அறிவித்துள்ளது.

முன்னதாக கேபிள் டிவி ஒளிபரப்பு தொடர்பாக டிராய் நிறுவனம் புதிய கொள்கை விதிமுறையை அறிவித்தது. இதன்படி, கேபிள் டிவி வழங்கும் அனைத்து சேனல்களை பார்ப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட சேனலை மட்டும் பணம் கொடுத்து பொதுமக்கள் பார்த்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புதிய விதிமுறை தங்களை பாதிப்பதாகவும், இதன்மூலம் பெரிய நிறுவனங்கள் மட்டுமே பலனடைய முடியும் என்றும் கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டிடிஎச் மற்றும் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது. டிராய் உருவாக்கியிருக்கும் பிரத்யேக வலைத்தளத்தில் 5 வழிமுறைகளை கடந்து அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்வு செய்து கொள்வதற்கான கெடுவை பிப்ரவரி 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட நிலையில் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ட்ராய் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி அவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tuesday, February 12, 2019

ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: 

   விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், அனைத்து பள்ளிகளில் செயல்படும் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

     காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரி, வித்யாமந்திர் பள்ளியில் நடந்த முகாமிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வி.இ.டி., கல்விக்குழுமம் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.கல்வி அலுவலர் ரத்தினசெல்வி, தாளாளர் செல்வராஜ், துணை தலைவர்கள் ஜோதி, தனபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி முகாமை துவக்கி வைத்தார்.

  பயிற்றுனர்கள் சின்னப்பன், தண்டபாணி, யோகா பயிற்றுநர் ஆனந்தமூர்த்தி, கலைக்குழு பயிற்சியாளர்கள் சின்னப்பராஜ், ஆல்பர்ட, மரியஜோசப், இணை கன்வீனர்கள் தமிழழகன், சந்தியா, எட்வர்ட் தங்கராஜ், ேஹமலதா, பாஸ்கரன், பிலிப்ஜெயன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காணை போலீசார், சாலை பாதுகாப்பு தலைப்பில் விக்கிரவாண்டி டோல்பிளாசா முதுநிலை மேலாளர் சொர்ணமணி பயிற்சி அளித்தனர்.

           பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாவட்டத்தில் 100 பள்ளிகளில் இருந்து 800 மாணவர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபுசெல்வதுரை, பொருளாளர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், மரியராஜ், நாயகம் செய்திருந்தனர்.

பறவைகளை பாதுகாக்க மாணவர்கள் விழிப்புணர்வு

கோட்டூர்: 
           கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி மாணவர்கள், பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடத்தினர்.கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி, நேற்று பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

        ரெட்டியாரூரில் இருந்து, அர்த்தநாரிபாளையம் வரை பேரணியாக சென்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பறவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம், பறவைகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் வழங்கினர்.இப்பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே சட்டியில், உணவு மற்றும் நீர் வைத்து பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.

       ஆசிரியர்கள் கூறுகையில், &'சூழலை பாதுகாப்பதில் பறவைகள் பெரும்பங்கு உள்ளது. பறவைகள் உட்கொள்ளும் பழங்களின் விதைகள், அதன் கழிவின் வழியாக பரவி சூழல் மேம்படுகிறது. காடுகள், மரங்கள், நீர் நிலைகள் அழிந்து வருவதால், பறவைகளின் வாழ்விடம் பறிக்கப்பட்டு, அவைகள் அழிந்து வருகிறது. பறவைகளை பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்,&' என்றனர்.

கலைத்திறன் இலக்கிய போட்டிகள்

சிவகாசி:

      சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் மாநில அளவில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான &'அய்ய நாடார் ஜானகி அம்மாள் நினைவு கேடம் - கலைத்திறன் சார்ந்த இலக்கிய போட்டிகள்&' நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். 

     தமிழ் ஆய்வு மையம் தலைவர் சிவனேசன் வரவேற்றார். பேச்சு, புதுக்கவிதை, சிறுகதை, கோலம், நாட்டுப்புறநடனம் , நகைச்சுவை துணுக்குகள் போன்ற போட்டிள் நடத்தப்பட்டது. மாநில முழுவதும் இருந்து 16 கல்லுாரிகளிலிருந்து 220 மாணவர்கள் கலந்து கொண்டனர். கலை இலக்கிய போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரி நினைவு கேடயத்தைக் கைபற்றியது. ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

Friday, February 8, 2019

தமிழக பட்ஜெட் 2019 - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அம்சங்கள்!



* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக     உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657     கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள்,          
  கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம்       வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

  பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.1,552 கோடி ரூபாய் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2018-19ம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்த ஓ.பன்னீர்செலவம், 2019-20ம் ஆண்டில் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு, போட்டி தேர்வு - TRB நேற்று வெளியிட்ட அறிவிப்பு!



தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு, முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 128 காலியிடங்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர் பதவிக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், ஏற்கனவே, பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டது. 2009ல், மத்திய அரசின், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தை பின்பற்றி, ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதி தேர்வு நடத்த வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, 2011 முதல், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி நியமனம் வழங்கப்பட்டது. அதிலும் சர்ச்சை எழவே, 'தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், ஆசிரியர் பணியில் சேர, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, 2018 ஜூலையில், தமிழக அரசு அறிவித்தது.அதன்பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட வில்லை. அதனால், போட்டி தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக் கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதை அமல்படுத்தும் வகையில், 128 ஆசிரியர் பணியிடங்களுக்கு, முதல் முறையாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில், பழங்குடியினத்தவருக்கான, 12 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

'டெட்' தேர்ச்சி பெற்றவர் களுக்கு, போட்டி தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் நடைபெறும். போட்டி தேர்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 'ஆன் லைனில்' பதிவு செய்ய வேண்டும்.தேர்வு குறித்த அறிவிப்புகள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும். இதில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, 36 ஆயிரம் முதல், 1.05 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பாசிரியர் நியமனம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பழங்குடியினர் பிரிவில், 17 சிறப்பாசிரியர்கள்; கள்ளர் சீர்திருத்த பள்ளிகளில், பட்டியல் இனத்தவருக்கான, நான்கு முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நான்கு உதவி பேராசிரியர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பையும், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

Thursday, February 7, 2019

இந்திய ராணுவத்தில் 76,500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் ( படை வாரியாக பணியிடங்களின் எண்ணிக்கை வெளியீடு)



துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள 76,578 பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (21,566 காலிப் பணியிடங்கள்), எல்லைப் பாதுகாப்புப் படை (16,984), சஷாஸ்த்ர சீமா பல் (8,546), இந்திய-திபெத் எல்லை காவல் படை (4,126), அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ( 3,076) மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இதர மத்திய ஆயுதப் படைகளில் மொத்தமுள்ள 76,578 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பெரிய அளவிலான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதில் 54,953 இடங்கள் காவலர் பணியிடங்களாகும். பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்கு இடையே எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மொத்த இடங்களில் 7,646 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.