கோட்டூர்:
கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி மாணவர்கள், பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடத்தினர்.கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி, நேற்று பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரெட்டியாரூரில் இருந்து, அர்த்தநாரிபாளையம் வரை பேரணியாக சென்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பறவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம், பறவைகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் வழங்கினர்.இப்பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே சட்டியில், உணவு மற்றும் நீர் வைத்து பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், &'சூழலை பாதுகாப்பதில் பறவைகள் பெரும்பங்கு உள்ளது. பறவைகள் உட்கொள்ளும் பழங்களின் விதைகள், அதன் கழிவின் வழியாக பரவி சூழல் மேம்படுகிறது. காடுகள், மரங்கள், நீர் நிலைகள் அழிந்து வருவதால், பறவைகளின் வாழ்விடம் பறிக்கப்பட்டு, அவைகள் அழிந்து வருகிறது. பறவைகளை பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்,&' என்றனர்.
No comments:
Post a Comment