புதுடில்லி: தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மீண்டும் அகழாய்வு நடந்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய 2015-ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன.இதில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.இதையடுத்து 2016-ல் இரண்டாம் கட்டமாகவும் 2017-ல் 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் பளிங்கு கற்கள் உட்பட 1600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
இதற்கிடையே &'கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்&' என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கியது.இந்நிலையில் கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார். இதனால் கீழடியில் அகழாய்வு பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment