விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், அனைத்து பள்ளிகளில் செயல்படும் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரி, வித்யாமந்திர் பள்ளியில் நடந்த முகாமிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வி.இ.டி., கல்விக்குழுமம் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.கல்வி அலுவலர் ரத்தினசெல்வி, தாளாளர் செல்வராஜ், துணை தலைவர்கள் ஜோதி, தனபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி முகாமை துவக்கி வைத்தார்.
பயிற்றுனர்கள் சின்னப்பன், தண்டபாணி, யோகா பயிற்றுநர் ஆனந்தமூர்த்தி, கலைக்குழு பயிற்சியாளர்கள் சின்னப்பராஜ், ஆல்பர்ட, மரியஜோசப், இணை கன்வீனர்கள் தமிழழகன், சந்தியா, எட்வர்ட் தங்கராஜ், ேஹமலதா, பாஸ்கரன், பிலிப்ஜெயன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காணை போலீசார், சாலை பாதுகாப்பு தலைப்பில் விக்கிரவாண்டி டோல்பிளாசா முதுநிலை மேலாளர் சொர்ணமணி பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாவட்டத்தில் 100 பள்ளிகளில் இருந்து 800 மாணவர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபுசெல்வதுரை, பொருளாளர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், மரியராஜ், நாயகம் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment