வாணியம்பாடி: உலகளவில், 1,500 இடங்களில், தமிழக அரசு சார்பில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது, என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறினார். வேலுார் மாவட்டம், வாணியம்பாடியில், முத்தமிழ் மன்றம் சார்பில் தமிழ் திருவிழா நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:உலகளவில் அமெரிக்கா உட்பட, 1,500 இடங்களில், தமிழக அரசு சார்பில், தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அருங்காட்சியகங்களில் உள்ள, 100 காலிப்பணியிடங்கள், முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். அருங்காட்சியகம், தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டு துறை வளர்ச்சிக்கு, இந்தாண்டு, 227 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள, 12 கோட்டைகளை சீரமைத்து பாதுகாக்க, ஆசிய வளர்ச்சி வங்கி, 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. உலகத்தமிழ் சங்கத்தில் உள்ள, தமிழ் பண்பாட்டு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட, 25 கோடி ரூபாய் நிதியில், 16 கோடி ரூபாய் செலவில், தமிழ்த்தாய் சிலை வைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment