வேலூர் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், போக்குவரத்து நெரிசலை தீர்க்க, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நெரிசல் அதிகமுள்ள அண்ணா சாலை, கோட்டை சுற்றுச்சாலை, பழைய மீன் மார்க்கெட், கிரீன் சர்க்கிள், மெயின் பஜார், காட்பாடி சில்க் மில், சித்தூர் பஸ் ஸ்டாண்ட் என, 45 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில், ஆளில்லா குட்டி விமானம் மூலம், போக்குவரத்து நெரிசலை வீடியோ படம் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வேலூர் உள்பட, ஒன்பது நகரங்களில், 500 கி.மீ., தூரத்திற்கு சாலை போக்குவரத்தை சீராக்க, 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு தனித்தனி பாதை அமைக்கப்படும். இதன் மூலம், நெரிசல் குறைந்து விபத்து தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment