திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, June 4, 2018

வேலூர் கோட்டையில் மண்ணில் புதைந்திருந்த பீரங்கி தோண்டி எடுப்பு

வேலூர் கோட்டையில் மண்ணில் புதைந்திருந்த பீரங்கி தோண்டி எடுக்கப்பட்டது.

வேலூர் கோட்டையில் மண்ணில் புதைந்திருந்த பீரங்கி தோண்டி எடுப்பு

வேலூர், 

17-ம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய கம்பெனிகள் பயன்படுத்திய பீரங்கியாக இருக்கலாம் என்று சென்னை மண்டல தொல்லியல்துறை உதவி ஆய்வாளர் கூறினார்.

வேலூர் மாநகரின் மையப்பகுதியில் கோட்டை அமைந்துள்ளது.

இங்கு கடந்த மாதம் 22-ந் தேதி வேலூர் கோட்டையினுள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் இடதுபுறம் அமைந்துள்ள கோசாலை தென்னந்தோப்பில் குப்பை, மாட்டு சாணங்கள் கொட்டுவதற்காக அருகருகே 3 குழிகள் தோண்டப்பட்டது. அப்போது நீளமான குழாய் ஒன்று காணப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த குழாய் பீரங்கி என தெரியவந்தது. பீரங்கி எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பதை கண்டறிய தொல்லியல்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து சென்னை மண்டல தொல்லியல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தொல்லியல்துறை உதவி ஆய்வாளர் வெற்றிச்செல்வி நேற்று காலை வேலூருக்கு வந்தார். வெற்றிச்செல்வி, வேலூர் தொல்லியல்துறை அதிகாரி ஈஸ்வரப்பா மற்றும் அதிகாரிகள் மண்ணில் புதைந்திருந்த பீரங்கியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் மண்ணில் பாதி புதைந்து இருந்த பீரங்கி தோண்டி வெளியே எடுக்கப்பட்டது. பீரங்கியின் நீளம், அகலம், எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சென்னை மண்டல தொல்லியல்துறை உதவி ஆய்வாளர் வெற்றிச்செல்வி கூறுகையில், ‘மண்ணில் புதைந்திருந்த பீரங்கி, கிழக்கு இந்திய கம்பெனிகள் பயன்படுத்தியவையாக இருக்கலாம். 17-ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இந்த பீரங்கி 4 அடி நீளமும், 1½ அடி அகலமும், 1 டன் எடையும் கொண்டது.

இதுதொடர்பான அறிக்கை சென்னையில் உள்ள தொல்லியல்துறைக்கு வழங்கப்படும். மேலும் கோட்டையில் வேறுபகுதியில் பீரங்கி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக உயர் அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள். அதைத்தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment