திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, December 31, 2018

TAMIL NADU FOREST GUARD RESULT DATE ANNOUNCED


காலம்


NEW YEAR EVE


மஞ்சப்பை! தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமல்


        தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பாலித்தீன் பைகள் உட்பட, 14 பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி, துணியால் ஆன, 'மஞ்சப்பை'க்கு மவுசு அதிகரிக்கும்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, இருப்பு வைத்திருப்போர், உள்ளாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்படைக்காதவர்களிடம், பறிமுதல் செய்ய, அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Sunday, December 30, 2018

ரெயில் பயணிகள் ‘கியூ ஆர் கோடு’ மூலம் புகார் செய்யும் வசதி ரெயில்வே போலீசார் துண்டுபிரசுரம் வினியோகம்

ரெயில் பயணிகள் ‘கியூ ஆர் கோடு’ மூலம் புகார் செய்யும் வசதி குறித்த துண்டு பிரசுரங்களை காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் வழங்கினர்.

காட்பாடி, 

        ரெயில் பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள ‘யூ.டி.எஸ். ஆப்’ மூலம் ‘கியூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து அதன்மூலம் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. தற்போது ‘கியூ ஆர் கோடு’ மூலம் பயணிகள் புகார் அளிக்கும் வசதி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

            இந்த திட்டம் மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள பொது தளத்தில் ‘கியூ ஆர் கோடு’ ஒட்டப்பட்டுள்ளது. இதனை ரெயில் பயணிகள் டவுன் லோடு செய்து வைத்து கொள்ள வேண்டும். ரெயில்வே போலீசாரை அணுகுவது குறித்த விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

       இதன் மூலம் பயணிகள் அவசர உதவி பெறலாம். மேலும் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம். ரெயில் பெட்டிகளில் சந்தேகப்படும் படியான பொருட்கள் கிடந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். போதையில் இருப்பவர்கள், ரகளை செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கலாம். ரெயில்வே ஊழியர்கள் பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம்.

         இந்த வசதி குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதில் ‘கியூ ஆர் கோடு’ ஸ்கேன் இடம் பெற்றுள்ளது. காட்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று இந்த துண்டு பிரசுரங்களை பயணிகளுக்கு, போலீசார் வழங்கினர். மேலும் ‘கியூ ஆர் கோடு’ பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்து பயணிகளுக்கு அவர்கள் விளக்கி கூறினர்
.

Thursday, December 27, 2018

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: இன்றுமுதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

            தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

  இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று டிச.27-ஆம் தேதி முதல் ஜன.5-ஆம் தேதி வரையிலான நாள்களில் (டிச.30,ஜன.1 தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர் தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். 

       அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலேயே தேர்வெழுத வேண்டும்.

முறையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும், தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களும் எந்தவித முன்னறிவிப்புமின்றி தானாகவே நிராகரிக்கப்படும். மேலும் இந்தத் தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov என்ற இணையதளத்தில் காணலாம் எனஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BSNL Recruitment 2019 – Apply Online for 150 MT (Telecom Operation) Posts

Post Date              : 12-12-2018
Latest Update       : 26-12-2018
Total Vacancy       : 150
Brief Information : Bharat Sanchar Nigam Limited (BSNL) has given a notification for the recruitment of Management Trainee (Telecom Operation) vacancies from open market (External candidates). Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.
Bharat Sanchar Nigam Limited (BSNL)
 MT (Telecom Operation) Vacancies 2018
Examination Fee
  • For OC/ OBC: Rs. 2200/-
  • For SC/ ST: Rs. 1100/-
  • Pay Fee through online mode only (i.e. Internet Banking, Credit Card, Debit Card only).
Important Dates
  • Starting Date for Online Registration: 26-12-2018
  • Closing Date for Online Registration: 26-01-2019
  • Dates for Application Editing: 03-02-2019 to 05-02-2019
  • Date for Downloading Admit Card: From 05-03-2019
  • Date for On-line Assessment Process: From 17-03-2019
Age Limit (as on 01-08-2019)
  • Candidates age should not exceed 30 years 
  • For relaxation of age refer the notification.
Qualification
  • Candidates should possess BE/ B.Tech or equivalent Engineering degree in Telecommunications, Electronics, Computer/ IT & Electrical with minimum 60% marks (55% for SC/ ST candidates) plus MBA or M.Tech.
Vacancy Details
Post NameOCSCSTOBC
Management Trainee (Telecom Operations) – External76231140
Total = 150
Interested Candidates Can Read the Full Notification Before Apply
Important Links
Apply OnlineClick here
NotificationClick here
Official WebsiteClick here

Wednesday, December 26, 2018

RAILWAY RECRUITMENT BOARD - 2019 (JUNIOR ENGINEER)

Name of the Post    : RRB  JE, Depot Material Superintendent & Asst Online                                                                    Form 2019
Post Date                 : 26-12-2018
Total Vacancy          : 14033

Brief Information   : Railway Recruitment Board (RRB) has given a notification for the recruitment of Junior Engineer, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply.

Railway Recruitment Board (RRB)
Advt No.03/2018
Various  Vacancies 2019
Application Fee
  • For General: Rs.500/-
  • For SC/ ST/ PwD/ Ex-S/ Women/ Transgender/ EBC/ Minorities: Rs.250/-
Important Dates
  • Starting Date to Registration & Applications: 02-01-2019 at 10:00 hrs
  • Last Date to Apply Online: 31-01-2019 at 23:59 Hrs
Age Limit as on 01-01-2019
  • Minimum: 18 Years
  • Maximum: 33 Years
  • Age relaxation is applicable as per rules.
Vacancy Details
Post NameTotalQualification

Junior Engineer

     13034              

Diploma/ Degree in Engineering in relevant Disciplines  

 Junior Engineer (Information Technology)

49

 PGDCA/ B.Sc/ BCA/ B.Tech (IT/ CSE)/ DOEACC ‘B’ Level Course

Depot Material Superintendent

456

Diploma/ Degree in Engg from any discipline

Chemical & Metallurgical Assistant

494

Bachelors Degree in Science with Physics & Chemistry with minimum of 45% marks

Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
NotificationClick here
Official WebsiteClick here

Implications of Cheque Bounce in India


In India, a person issuing a cheque will be committing an criminal offence if the cheque is dishonored (cheque bounce) for insufficiency of funds. Cheque bounce offence is punishable with imprisonment for a term upto two years or with a fine twice the amount of the cheque or both. Therefore, it is important for small & medium sized businesses to understand their rights & responsibilities of a cheque bounce and maintain financial discipline to avoid such instances.


When a cheque is considered bounced?

        A bank under certain conditions may refuse payment of cheque or is bound to dishonor a cheque, in such instances the cheque is considered bounced. When the cheque is dishonored for insufficiency of funds in the account of a customer, that cheque bounce is treated as an offence and action can be taken under Section 138 of The Negotiable Instruments Act.

What are the steps to initiate prosecution for a cheque bounce?

To initiate prosecution under Section 138, three condition precedents need to be fulfilled as below:
  • The cheque should have been presented to the bank within three months of its issue or within the period of its validity. (The validity of cheques were considered to be six months previously; however, Reserve Bank of India vide Reserve Bank of India vide Notification No. RBI/2011-12/251DBOD.AML BC.No.47/14.01.001/2011-12 directed that the validity period of cheques to be reduced from six months to three months with effect from 1st April, 2012.).
  • The payee [Person who receive the money] should have made a demand to the Payor [Person who is liable to pay the money] for payment by registered notice after the cheque is returned unpaid.
  • The Payor should have failed to pay the amount within 30 days of the receipt of notice.
  • If only all the above three conditions are satisfied, prosecution can be launched for the offence under Section 138.

How and when to give notice of dishonor?

The payee has to make a demand for the payment of money to the payor by giving a notice to the payor within 30 days of the receipt of information by him from the bank regarding the return of the cheque as unpaid. Therefore, to protect his rights under Section 138, the payee [affected party] has to make a demand to the payor within 30 days by giving notice that the person has a statutory oblication to make payment. As long as the payee sends a notice to the payor at the correct address, the responsibilities of the payee are considered to be fulfilled.

When prosecution can be launched under Section 138?

Prosecution can be launched against the payor under Section 138, if the payor failed to pay the amount within 30 days of the receipt of notice from the payee. A Cheque Bounce Notice under Section 138 can be found or generated using Make My Deed.

Who can the prosecution under Section 138 be launched against?

Prosecution can be launched against the payor and in the case where a company has committed an offence under Section 138, then not only the company, but also every person who at the time when the offence was committed,  was in charge of and was responsible to the company shall be deemed to be guilty of the offence and be liable to be proceeded against.

What are the other implications of a cheque bounce?

In addition to the criminal offence, bounced cheques can also impact credit worthiness or credit history. Though bounced cheques don’t usually show up on traditional credit reports, they are reported on your bank account statement. Banks both Nationalized & NBFC’s today require the customer to furnish their bank statement for a period of upto 1 year for any loan processing. Occurrence of many cheque bounces in a bank statement can affect loan eligibility and credit worthiness.

How to avoid cheque bounces?

The best policy to avoid a cheque bounce in your account is to NEVER write a cheque without money in your account. Providing a cheque to a person is a firm financial commitment you make to the person which has a lot of responsibilities and implication in case it is not honored. Therefore, it is best not to provide a cheque to a person without money in your account-  just to temporarily avoid financial pressure.


Tuesday, December 25, 2018

ஆசியாவின் 2-வது மிகப்பெரிய ரயில் பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

திப்ருகரா,

வாஜ்பாய் பிரதமரமாக இருந்த போது, 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக, 1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா அதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த டிசம்பர் 3-ம் தேதி இந்தப் பாலத்தில் சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது. 4.94 கிலோ மீட்டர் கொண்ட போகிபீல் பாலம், மூன்று வழி சாலையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் ஆகும் . 16 ஆண்டுகளுக்கு பிறகு முடிக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்.  4.94கிமீ நீளம்கொண்ட போகி பீல் பாலம் வாகனங்கள்,ரயில் செல்லும் வகையில் இரு அடுக்காக கட்டப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதிமேல்கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலம் நாட்டில் ஆறுகள் மேல் செல்லும் 4-வது பெரிய பாலமாகும்.

5,920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எல்லையில் மிகப்பெரிய பாலம் கட்டப்படுள்ளதால் தளவாடங்களை விரைவில் கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

HAPPY CHRISTMAS TO ALL TEACHERSCLUBEVELLORE VIEWERS


RPF Recruitment 2018 – Apply Online 798 Constable & Various Posts

Railway Protection Force (RPF) Constable & Various Recruitment 2018

RPF inviting the Constable & Various job online applications from 01.01.2019 to 31.01.2019. The interested and eligible candidates can able to apply for this job easily. Do not miss the wonderful career opportunity in Railway Protection Force. The detailed information on RPF latest job notification 2018 has been given below. The job hunters are requested to read below the RPF job selection process, eligibility, salary, age limit and applications fee in our Tamilan Jobs website. Aspirants stay tuned in this page for upcoming changes in RPF Constable & Various job 2018. For more accurate information on this RPF job notification, check their official website https://rpfonlinereg.co.in/.

RPF Recruitment 2018 Notification Highlights

OrganizationRailway Protection Force
Starting Date01.01.2019
Job typeCentral Government Jobs
Job LocationAll over India
Vacancies798
Apply modeOnline
Official Websitehttps://rpfonlinereg.co.in/
Last Date31.01.2019

Railway Protection Force (RPF) Job Vacancy Details

Railway Protection Force (RPF) has released the following vacancy details with their recent recruitment. They give huge surprise to the candidates. They invites 798 Candidates to fill their vacancies. You can check their job vacancy details by below.
Total Vacancies: 798

RPF Recruitment 2018 Detailed Vacancies

Railway Protection Force requires following posts to fill their vacancies. Check the latest job vacancy details below RPF 2018.
  1. Constable (Water carrier) – 452
  2. Constable (Safaiwala) – 199
  3. Constable (Washerman) – 49
  4. Constable (Barber) – 49
  5. Constable (Mali) – 07
  6. Tailor Gr. III – 20
  7. Cobbler Gr.III – 22

RPF 798 Constable & Various Eligibility Details

As per the recent Railway Protection Force (RPF) notification 2018, the eligibility details for the Constable & Various job has given below. Its is very important to check you qualification for this opportunity. If you have less qualification, you may not able to apply for this career. Here below you can find age limit and educational qualification required for RPF Constable & Various job 2018.

RPF Notification 2018 Educational Qualification

Candidates are requested to check their education qualification required for various Railway Protection Force (RPF) job opportunities.
SSLC/Matric from a recognized Board

RPF Constable & Various Age limit


To apply Railway Protection Force job, the candidates required to attain following age limit. The notified aged candidates only can able to apply for the job vacancy. check the age limit details below.
 SI NoAge GroupUpper Limit of Date of Birth (Not Earlier than)Upper Limit of Date of Birth (Not later than)
UROBC Non Creamy LayerSC/STFor all Category
118 to 25 Yrs02.01.199402.01.199102.01.198901.01.2001
Age Relaxations
  • SC/ST: 5 Yrs
  • OBC: 3 Yrs
  • Persons with Disabilities: 10 Yrs
  • SC/ST PWD: 15 Yrs
  • OBC PWD: 13 Yrs
For more reference kindly check the RPF official notification 2018.

RPF Application fees, Exam fees, Salary & Selection Process

Application Fees

To apply for the 798 Constable & Various job in Railway Protection Force the candidates requested to pay the application fees by notified mode. The payment mode may be both online/offline. Here below the caste wise application fee payment details are given below.
  • Gen/ OBC – ₹ 500
  • SC/ ST/ Ex-Servicemen – SC/ ST/ Ex-Servicemen
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking or Pay Offline Through E Challan.

Salary details

Railway Protection Force (RPF) 798 Constable & Various Job salary details has been given below. The candidates can check various salary information below.
  1. Water Carrier, Safaiwala, Washerman, Barber and Gardner – Rs.21,700/-
  2. Tailor and Cobbler – Rs.19,900/-

Selection Process

Railway Protection Force (RPF) may follow the following process to select the candidates. For Accurate information check the official website.
  1. Written exam
  2. Personal Interview
  3. Document Verification

How to apply for Railway Protection Force (RPF)  Recruitment for Constable & Various Job?

Step 1: Visit RPF official website – https://rpfonlinereg.co.in/
Step 2: Search for Constable & Various notification link in careers/ Advertisements/ News page.
Step 3: Download or view the official notification in their official website itself.
Step 4: Check and verify your eligibility to RPF Recruitment 2018. If you are not eligible for the job notification, ignore and leave space for others.
Step 5: Go through online application link “Apply Now”
Step 6: Create your registration on RPF and Fill all correct details.
Step 7: Apply for the 798 Constable & Various job by clicking apply button
Step 8: Upload your scanned copy of photo and signature to their application form
Step 9: Ensure the given details are correct and accurate.
Step 10: Submit the application
Step 11: Make the payment, if RPF asks. Others wise ignore this step
Step 12: Take print your application form for future use.

Railway Protection Force (RPF) Important dates for Constable & Various Vacancies

The following important dates need to be remembered by the Railway Protection Force (RPF) candidates.
Starting Date01.01.2019
Last Date31.01.2019

Download Railway Protection Force (RPF) official Notification 2018 and Online Apply

RPF Notification 2018: click here!
RPF Recruitment Apply Online: Click here!

Sunday, December 23, 2018

கேபிள் டிவியில் படம் பார்க்க கட்டணம் உயருகிறது!

கேபிள் டிவி, டிடிஹெச் உள்ளிட்ட டிவி சேனல்களுக்கு கட்டணம் குறைக்கப்படுகின்றது. தங்களது சேனல்களுக்கு கட்டணங்களும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 100 டிவி சேனல்களும் தற்போது இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிராய் அறிவிப்பு :

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி வரும் 29ம் தேதி முதல் அனைத்து கேபிள், டிடிஹெச் உள்ளிட்ட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெ
ரிவித்துள்ளது.

100 சேனல்கள் இலவசம்:

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக 130 ரூபாயும், 18 சதவிகித GST வரியான 23 ரூபாய் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் 153 ரூபாய் 40 பைசா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அடிப்படை பேக்கேஜாக தூர்தர்ஷன் உள்பட 100 இலவச சேனல்கள் வழங்கப்படும்.

ஜிஎஸ்டி அமலில் இருக்கின்றது:
மேலும், கட்டணமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சேனல்களின் பட்டியலில் இருந்து, கூடுதலாக வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு 25 சேனல்களுக்கும், 20 ரூபாய் கட்டணத்தையும் அதற்கான 18 சதவிகித GST வரியாக 3 ரூபாய் 60 பைசா சேர்த்து மொத்தம் 23 ரூபாய் 60 பைசா செலுத்த வேண்டும்.

விலை விவரம் அறிவிப்பு:

இந்த 25 சேனல்களில் ஏதாவது கட்டண சேனல்களாக இருந்தால், இந்த 23 ரூபாய் 60 பைசாவுடன் சேர்த்து, அந்த கட்டண சேனலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை தனித்தனியாக ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். ஒவ்வொரு கட்டண சேனலுக்குமான விலை விவரங்கள், அந்தந்த சேனல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன.

மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு:

கேபிள், DTH, ஐபிடிவி உள்ளிட்ட எந்த இயங்குதளமாக இருந்தாலும், மாற்றங்களின்றி ஒரே மாதிரியாகவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக தங்களது விருப்ப சேனல்களை மாதந்தோறும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

கட்டணம் குறைப்பு:

ஏற்கனவே பார்வையாளர்களின் விருப்பத்தை கேட்காமலேயே அனைத்து வீடுகளுக்கும் கட்டண சேனல்கள் சென்றடைந்தன. ஆனால், தற்போது வாடிக்கையாளர் விரும்பும் கட்டண சேனல்களுக்கு மட்டுமே அதற்குரிய தொகையை செலுத்தி பார்க்க முடியும் என்பதால், அந்த கட்டண சேனல்கள் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும், விளம்பர வருமானத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் கட்டண சேனல்கள், தங்கள் கட்டணத்தை குறைக்கவோ அல்லது கட்டணம் இல்லா சேனலாக மாறவோ வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

செட் ஆப் பாக்ஸில் மாற்றம்:

இம்மாதம் வருகிற 28 ந்தேதி இரவுடன் அனைத்து கட்டண சேனல்களும் நிறுத்தப்பட்டு, 29ந் தேதி முதல் வாடிக்கையாளர்கள் விரும்பும் கட்டண சேனல்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதால் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் இப்போதே தங்கள் கேபிள் ஆபரேட்டர்களை தொடர்பு கொண்டு, தேவையான கட்டண சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில் செட் ஆப் பாக்சில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

அனலாக்கில் சேனல்கள் வழங்க தடை:

மேலும் செட் ஆப் பாக்ஸ் இல்லாத அனலாக் கேபிள் இணைப்புகளில் சேனல்கள் வழங்க ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MCA மற்றும் M.Sc.,(IT) உள்ளிட்ட 33 முதுநிலை பாடப்பிரிவுகள் அரசு பணியைப் பெற 'லாயக்கற்றவை' என்ற UGC-யின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடிவு

**  சில தினங்களுக்கு முன்பு (18-12-2018) AICTE மற்றும் UGC -இவைகளின் கூட்டமைப்பு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது.

** அதில் "அரசு வேலைக்கு லாயக்கற்ற 33 முதுநிலை படிப்புகள்" என்ற வகையில் MCA., மற்றும் M.Sc., (Information Technology) உள்ளிட்ட முதுநிலை படிப்புகள் "M.Sc., (Computer Science)" -க்கு இணையானவை 'கிடையாது' என்றவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

**  சில வாரங்களுக்கு முன்பு "G.O Ms- 770" என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. அதில் 814 கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் (PTA) உதவியுடன் நிரப்பிக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது (தற்போது இந்த அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது)
.

**  தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக அறிவிக்கக்கோரி கணினி ஆசிரியர்கள் கோரிக்கைகள் விடுத்ததால் MCA உள்ளிட்ட 33 முதுநிலை பாடப்பிரிவுகள் அரசு வேலைக்கு லாயக்கற்றவை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மிகவும் கண்டணத்திற்குரியது

**  கணினி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசைதிருப்பும் வகையில் MCA., M.Sc., (IT) உள்ளிட்ட 33 முதுநிலைப் படிப்புகள் அரசு பணிகளைப் பெறுவதற்கு லாயக்கற்றவை  என அறிவித்துள்ளார்கள்.

**  இதனை தடுத்து நிறுத்த 'தமிழக அரசு' எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. இவர்களை நம்பி படித்த இலட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது.

** மேலும், "M.Sc (Computer Science) மற்றும் M.Com.," உள்ளிட்ட இந்த பட்டப் படிப்புகளின் சேர்க்கையை 'அதிகரிக்கும்' நோக்கத்தில் MCA உள்ளிட்ட இந்த 33 பட்டங்களை அறிமுகம் செய்துவிட்டு... இந்த பாடப்பிரிவுகளை விட கல்வி கட்டணங்களை இரு மடங்காக வசூல் செய்துவிட்டு... தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை 'லாபம்' பார்த்து விட்டு... இப்போது இப்படி ஒரு 'அடக்குமுறையான' அறிவிப்பை வெளியிட்டிருப்பது, இந்த 33 முதுநிலை படிப்புகளை முடித்த பட்டதாரிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

**  இப்படி இருந்தால் இந்தியாவின் கல்வித்தரம் எப்படி மேன்மையடையும்?? சில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் முன்னணியில் உள்ள 100 பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில், இந்தியாவிலிருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட அந்த 'பட்டியலில்' இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

**  இந்த 33 முதுநிலை படிப்புகளும் எதற்கும் லாயக்கற்றவை என்பது 10 வருடங்களுக்கு முன்பே இவர்களுக்கு (UGC) தெரியாதா?? அப்போதே இதை அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தால் பல இலட்சம் இளைஞர்கள் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் வீண் விரயம் செய்திருக்க மாட்டார்களே...

**  பல வருடங்கள் மெத்தனமாக இருந்துவிட்டு...  இப்போது இந்த முதுநிலை படிப்புகளெல்லாம் 'செல்லாது' என கூறுவது ஏற்புடையதல்ல.

**  33 முதுநிலைப் படிப்புகள் அரசு பணிகளுக்கு லாயக்கற்றவை, செல்லாதவை என பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்திருப்பது  மாணவர்களுக்கிடையே பெரும் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

**  அப்படியானால்...

**  MCA., மற்றும் M.Sc., (Information Technology) முடித்த பட்டதாரிகள் ஏற்கனவே TNPSC, UPSC, Railway, SSC, Etc. போன்ற மத்திய, மாநில அரசுகள் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று "அரசு பணியில் உள்ளார்கள்." அவர்களையெல்லாம் இப்போது பணியிலிருந்து நீக்குவார்களா??

**  பல்கலைக்கழகங்கள் செய்த தவறுகளுக்கு மாணவர்களை பலி ஆடுகளாக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்??  எங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) பதில் கூற வேண்டும்.

**  இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர முடியாத மத்திய மாநில அரசுகளின் இயலாமையை கல்லூரி மாணவர்களின் மீது திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது இந்த முதுநிலை படிப்புகளை முடித்த & படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் & ஆசிரியர்களின் கனவுகளை நொறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். இந்த அறிவிப்பை  பல்கலைக்கழக மானியக் குழு வாபஸ் பெற வேண்டும்.

**  இன்றுவரையில், அரசு பள்ளிகளில் "கணினி அறிவியல்" பாடப்பிரிவை நிரந்தரமாக பயிற்றுவிக்க தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது பள்ளி கல்வித் துறையின் வளர்ச்சியை ஊனமாக்கும் செயல்.

**  அப்படி பார்க்கப்போனால், 6 முதல் 12 வகுப்புகளில் 'கணினி அறிவியல்' பாடத்தை ஏன் அறிமுகம் செய்து, அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது?? "அரசு பள்ளிகளின் கல்வித்தரம் CBSE -க்கு இணையான கல்வித்தரம்" என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறுவது குழப்பமான ஒரு அறிவிப்பாகவே உள்ளது.

**  இவ்வளவு காலங்கள் தாமதம் செய்து விட்டு இப்படி ஒரு சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் UGC & அதனைச் சார்ந்த கல்வி வாரியங்களும், பல்கலைக்கழகங்களும் தான் நிஜத்தில் லாயக்கற்றவை என எண்ணத்தோன்றுகிறது.

**  இந்த அறிவிப்பின் மூலம் M.Sc.,(Computer Science), MCA., மற்றும் M.Sc.,(Information Technology) உள்ளிட்ட பட்டதாரிகளுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகளையும், பாகுபாடுகளையும், மோதல்களையும் உருவாக்க AICTE & UGC உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்கின்றன.

**  இந்த, விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காப்பது கணினி சார்ந்த முதுநிலைப் படிப்புகளை முடித்த பட்டதாரிகளுக்கிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

**  இத்தனை காலங்கள் அமைதியாக இருந்துவிட்டு திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை 'மறு பரிசீலனை' செய்து இந்த கல்வியாண்டு (2018-19) வரை பயிலும் முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கு இதிலிருந்து 'விலக்களிக்க' உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

**  இல்லையெனில், சம்பத்தப்பட்ட கல்வி அலுவலகங்களிடம் ஒட்டுமொத்த MCA., & IT., பட்டதாரிகள்  "அசல் சான்றிதழ்களை" ஒப்படைப்பதே இறுதி தீர்வாக இருக்கும். அரசு வேலைக்கு லாயக்கற்ற இந்த 'வெற்று பட்டங்கள்' இனிமேல் எதற்கு??

**  தவறும் பட்சத்தில் இந்த படிப்பிற்கான முழு செலவுகளையும் மீண்டும் எங்களுக்கு (படித்து முடித்த வருடத்திலிருந்து இன்றுவரையில்) "இழப்பீட்டுத் தொகையாக" வழங்கிட UGC உத்தரவிட வேண்டும்.

**  மேலும்,

**  இளநிலை & முதுநிலை பட்டங்களுக்கான பி.எட்., படிப்பின் கல்வித்தகுதியை நிர்ணயம் செய்து உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறைகளை உருவாக்கி இவற்றை ஒரு நிரந்தரமான 'சட்டமாக' இயற்ற வேண்டும்.

**  அதனால், இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அதன் பல்கலைக்கழகங்கள் இந்த அறிவிப்பை வாபஸ் பெறாவிட்டால் இந்த 'ஈவு இரக்கமற்ற அறிவிப்பை' ரத்து செய்யக்கோரி சென்னை, மதுரை (உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்ட்) மற்றும் தமிழகமெங்கும் உள்ள நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் 'நஷ்ட ஈடு' கேட்டு விரைவில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.

**  கணினி ஆசிரியர்களின் நலன் கருதி...

*கு.ராஜ்குமார்,MCA., B.Ed., (Cell : 9698339298)*

(மாநில இணையதள ஆசிரியர்)

*தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் (TNBEDCSVIPS)*

Saturday, December 22, 2018

நட்சத்திர பலன்

22.12.2018 முதல் 28.12.2018 வரை

எண்ணங்கள் நிறைவேறும்


1. அஸ்வினி: உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். கிரக சஞ்சாரம் சாதகமாக உள்ளது. புதிய பட்டம், பதவிகள் தேடிவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். பணம், புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆலய வழிபாடு

நிலபுலன்களில் முதலீடு

2. பரணி: வாழ்க்கைத் துணை வழியில் நன்மைகள் பெருகும். பண உதவியும் கிட்டும். வியாபாரிகளுக்கு செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும். நிலபுலன்களில் முதலீடு செய்வீர்கள். வெளிநாட்டு பயணத்தை ஒத்திப் போடுங்கள். புதிய திட்டங்களை தள்ளிப்போடுவது நல்லது. நெடிய பயணம் லாபம் தரும்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு

கனவு நனவாகும்

3. கார்த்திகை: உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். கூட்டுத் தொழில் ஏற்றம் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. எதிலும் கவனம் தேவை.

பரிகாரம்: தியானம் இயற்றுதல்

வேலைவாய்ப்பு பெருகும்

4. ரோகிணி: வேலை தேடும் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் பெருகும். கணவன் - மனைவி உறவு தித்திக்கும். தொழிலாளர்களுக்கு செய்தொழிலில் அனுகூலமானப் போக்கு தென்படும். சேமிப்பு வளரும். பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.

பரிகாரம்: அம்பாள் வழிபாடு

வெளிநாட்டு ஆதாயம்

5. மிருகசீரிஷம்: கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை உருவாகும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். நூதனமானவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். பக்தி மார்க்கத்தில் மன ஈடுபாடு கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

6. திருவாதிரை: மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். சட்டம், காவல், ராணுவத் துறையினர் வெற்றி நடை போடுவார்கள். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள், பெற்றோரின் பேச்சைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.

பரிகாரம்: சனீஸ்வரன் வழிபாடு

எதிர்ப்புகள் அகலும்

7. புனர்பூசம்: உடல்நலம் சிறப்பாக இருந்துவரும். வேற்று மொழி, மதங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சுப காரியங்களில் பங்கு கொள்வீர்கள். எதிர்ப்புகள் விலகும். வெற்றி வாய்ப்புகள் கூடும் வாரம் இது. இல்லத்தில் கணவன்-மனைவி உறவு அமைதியாக நடைபெறும்.

பரிகாரம்: சரபர் வழிபாடு

மன உளைச்சல் நீங்கும்

8. பூசம்: பொருளாதார நிலை உயர்ந்து காணப்படும் இனிய வாரமாகும். மன உளைச்சல், அலைச்சல் தீரும். அரசு வகையில் அனுகூலம் காண்பீர்கள். சிற்பம், ஓவியம், பத்திரிகை, கணிதம், எழுத்துத் துறையினர் ஏற்றம் பெறுவார்கள். இல்லத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் வருமானம் வந்து சேரும்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு

திறமை பளிச்சிடும்

9. ஆயில்யம்: எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். செய்தொழில் எதிர்ப்புகள் அகலும்.  வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். கலைஞர்கள், தங்கள் துறையில் புகழ் பெறுவார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத் திறமை பளிச்சிடும். பயணம் அனுகூலமாகும்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு

பொருளாதார வளர்ச்சி

10. மகம்: மனதில் தெளிவு பிறக்கும். மகிழ்ச்சி பொங்கும் வாரம் இது. உங்களின் பொருளாதார நிலையில் வளர்ச்சி காண்பீர்கள். பேச்சாற்றல் பளிச்சிடும். நல்லவர்கள் பக்க பலமாய் இருப்பார்கள். உடல்நலம் சீராக இருக்கும். கணவன்- மனைவி உறவில் இருந்த இடைவெளி குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: ஜீவ சமாதி வழிபாடு

பணவரவில் திருப்தி

11. பூரம்: வெளிநாட்டுத் தொழில் தொடர்புகள், அரசியல் துறையினர் ஏற்றம் பெறுவார்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். வேற்று மொழி, மத இனங்களைச் சேர்ந்தவர்களால் சில திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். பிள்ளைகளை உங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிரச்சினையை தவிர்க்கும்.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு

வியாபாரத்தில் வளர்ச்சி

12. உத்திரம்: பண நடமாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அலுவலகப் பணியாளர்கள் எண்ணங்கள் நிறைவேறும். சுப காரியங்கள் கூடி வரும். கலைஞர்களுக்கு வெற்றி குவியும். கணவன் - மனைவி உறவு இனிக்கும். பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு

குழப்பங்கள் அகலும்

13. ஹஸ்தம்: நற்பணிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி காணும் இனிய வாரம் இதுவாகும். தொலைதூர தொடர்பு லாபம் தரும். கூட்டுத் தொழில் ஏற்றம் தரும். குடும்ப குழப்பங்கள் எளிதில் தீரும். கையில், பையில் பணம் சரளமாக புழங்கும். கணவன்- மனைவி இருவரும் விட்டுக்கொடுத்துச் செல்வது வாழ்வை வளமாக்கும்.

பரிகாரம்: முருகன் வழிபாடு

பதவிகள் தேடிவரும்

14. சித்திரை: வெற்றி வாய்ப்புகள் கூடும் இனிய வாரம் இது. புதிய பட்டம், பதவிகள் தேடி வரும். உங்களின் செயல் திறனுக்கு பாராட்டுகள் குவியும். பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆலயத்தில் தீபம் ஏற்றுங்கள்

காரியம் வெற்றியாகும்

15. சுவாதி: செய்தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். கணவன் - மனைவி உறவில் ஒற்றுமை வளரும். உடல் நலம் சீராக இருந்து வரும். பணப்புழக்கம் சரளமாகும். அண்டை அயலாளரால் சில காரியங்கள் வெற்றியடையும். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானம் வந்து சேரும். எதிலும் கவனமாக இருங்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு

அதிர்ஷ்ட வாய்ப்பு

16. விசாகம்: எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கணவன்- மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: நந்திக்கு தீபம் ஏற்றுதல்

புதிய நட்பு வேண்டாம்

17. அனுஷம்: மனக் குழப்பங்கள் நீங்கும். அடுத்தவர் விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். கடிதச் செய்தி மகிழ்ச்சி தரும். முகம் தெரியாதவர்களுடன் நட்புறவை தவிர்க்கவும். பணப்புழக்கம் சரளமாகும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். பிள்ளைகளால் மகிழ்வீர்கள்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு

வாகன யோகம்

18. கேட்டை: ஆசிரியர்கள், அரசியல் துறையினர் பொறுப்புடன் செயல்படுதல் நலம் தரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிலபுலன்கள் லாபம் தரும். எழுத்துத் துறையினர் ஏற்றம் பெறுவார்கள். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். பிள்ளைகளின் கல்விக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.

பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு

சிந்தனை வெளிப்படும்

19. மூலம்: சிந்திக்கும் ஆற்றல், அறிவுக்கூர்மை வெளிப்படும். புகழ், கவுரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயர்ந்து காணப்படும். தடைபட்டு வந்த காரியங்களை துரிதமாகச் செய்து வெற்றி காண்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும் இனிய வாரம் இது. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.

பரிகாரம்: ஜீவ சமாதி வழிபாடு

மதிப்பு உயரும்

20. பூராடம்: அறிவாற்றல் பளிச்சிடும். உங்களின் அந்தஸ்தும், மதிப்பும் உயரும். அளவில்லாத ஆனந்தம் அடையும் இனிய வாரம் இது. வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். கலைத்துறையினர் வெற்றி நடை போடுவார்கள். இல்லத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு

ஆரோக்கியம் சீராகும்

21. உத்திராடம்: உடல் ஆரோக்கியம் சீராகும். செய்தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அதிகரிக்கும். பணப்புழக்கம் சரளமாகும். கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக முடியும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். பெயர், புகழ், செல்வாக்கு உயரும். கணவன்- மனைவி உறவு இனிமை தருவதாக அமையும்.

பரிகாரம்: கருடாழ்வார் வழிபாடு

வழக்குகள் சாதகமாகும்

22. திருவோணம்: பணப்புழக்கம் சரளமாகும். புகழ் தரும் இனிக்கும் வாரமாகும். துணிவோடும்,   தன்னம்பிக்கையோடும் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமானப் போக்கு தென்படும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு

தெய்வ அனுக்கிரகம்

23. அவிட்டம்: தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உங்களது எண்ணங்கள் ஈடேறும் இனிக்கும் வாரம் இது. பண நடமாட்டம் திருப்திகரமாக இருந்து வரும். கணவன் - மனைவி உறவு நிலையில் மகிழ்ச்சி கூடும். அலுவலகப் பணியாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

பரிகாரம்: சிவலிங்க வழிபாடு

மகிழ்ச்சி பெருகும்

24. சதயம்: உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகிழ்ச்சி பெருகும் இனிய வாரம் இது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் விழிப்புணர்வு தேவை. செய்தொழில், வியாபாரம் சீராக இருந்து வரும். பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். கணவன்- மனைவி உறவு இனிமையாகும்.

பரிகாரம்: அன்னதானம்

செலவு குறையும்

25. பூரட்டாதி: திட்டமிட்ட காரியங்களில் வெற்றி வாகை சூடி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும். பெண்களுக்கு கணவர் வகையில் மருத்துவ செலவு குறையும். ஆடை, ஆபரணங்கள் விதவிதமாய் சேரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை அமையும்.

பரிகாரம்: தீப வழிபாடு

கற்பனை பெருகும்

26. உத்திரட்டாதி: எடுத்த காரியங்களை சிரமம் இன்றி முடிப்பீர்கள். கணவன் - மனைவி உறவு நிலை சீராக இருந்து வரும். கற்பனை வளம் பெருகும். கலைஞர்கள் மற்றும் பெண்களின் எண்ணங்கள் ஈடேறும். உடன் பிறப்புகள் பக்கபலமாய் இருப்பார்கள். பிள்ளைகளால் மன நிம்மதி கிடைக்கும்.

பரிகாரம்: வீரபத்திரர் வழிபாடு

மனதில் உற்சாகம்

27. ரேவதி: வெற்றி வாய்ப்புகள் கூடும் இனிய வாரமாகும். மனதில் உற்சாகம் உண்டாகும். வியாபாரிகள் லாபம் அதிகரித்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கணவன்- மனைவி உறவில் இனிமை கூடும்.

பரிகாரம்: சக்கரத்தாழ்வார் வழிபாடு