திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, December 21, 2018

நாடு முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு 

     நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மட்டும் 3,400 பள்ளிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

        இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை இயக்ககத்தின்கீழ் 27,895 ஆரம்பப் பள்ளிகள், 9,134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.12 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 

         தமிழக அரசு சார்பில் பல இலவச திட்டங்கள் அறிவித்தும் ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவில் பயணித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாநிலத்தில் 3,400 தொடக்கப் பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். 

         இதையடுத்து முதல்கட்டமாக 10 மாணவருக்கும் குறைவாக உள்ள 1,324  பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க திட்டமிட்டு பள்ளிக் கல்வித் துறை செயலாற்றி வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

          இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது: சமகிர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு வழங்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டது. 15-க்கும் குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படாது. அதாவது பலவீனமான கட்டிடங்கள் மற்றும் மாணவர், ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பள்ளிகளை, அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது. 

          இதனால் நாடு முழுவதும் 2.8 லட்சம் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழ கத்தில் மட்டும் 3,400 பள்ளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட் டுள்ளது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக முதல்கட்டமாக 10-க் கும் குறைந்த மாணவர்களை கொண்ட 1,324 பள்ளிகளை, அருகே உள்ள மற்ற பள்ளிகளு டன் இணைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

          இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராபர்ட் கூறியது: கல்வித்துறையை சேவை யாகப் பார்க்க மத்திய, மாநில அரசுகள் தவறி வருகின்றன. சேர்க்கை குறைவதற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்யாமல், பள்ளிகளை மூடுவதால் எதிர்காலத்தில் கல்வி முழுவதும் தனியார் வசம் சென்றுவிடும். பள்ளியில் கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத் தினாலே மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். 

          அதற்கு மாறாக இலவச கட்டாய கல்வித் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அரசே சேர்க்கிறது. இதற்காக மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ரூ.200 கோடி செலவாகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் முறையான ஆய்வகம், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள்கூட கிடை யாது. தனியார் பள்ளிக்கு தரும் நிதியை, அரசுப் பள்ளிக்கு பயன்படுத்தினால் சேர்க்கை அதிகரிக்கும். 

          தொடக்கப் பள்ளிகள் மூடப் பட்டால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இது தவிர தொடக்கக் கல்வி இயக்குநர கத்தையும் கலைத்துவிட்டு பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தொடக்கக் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment