திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, December 22, 2018

கணினி ஆசிரியர் நியமனத்திற்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு


திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவந்தலிங்கபுரத்தை சேர்ந்த ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாகவுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 2017ல் வெளியானது. ஆனால், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை. இதனிடையே,  காலியாகவுள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை டிசம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரையிலான 3 மாதத்திற்கு மட்டும் தற்காலிகம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,500 சம்பளத்திற்கு ஆங்காங்கே நியமித்து கொள்ள அனுமதித்து, கடந்த டிச.7ல் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையிலான நியமனம் என்பது முறைகேட்டிற்கு வழிவகுக்கும். நியமன நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, கணினி ஆசிரியர் தற்காலிக நியமனத்திற்கான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். முறைப்படி விதிகளை பின்பற்றி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், தற்காலிக கணினி ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜன.10க்கு தள்ளி வைத்தனர். 

No comments:

Post a Comment