திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, December 23, 2018

கேபிள் டிவியில் படம் பார்க்க கட்டணம் உயருகிறது!

கேபிள் டிவி, டிடிஹெச் உள்ளிட்ட டிவி சேனல்களுக்கு கட்டணம் குறைக்கப்படுகின்றது. தங்களது சேனல்களுக்கு கட்டணங்களும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 100 டிவி சேனல்களும் தற்போது இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிராய் அறிவிப்பு :

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி வரும் 29ம் தேதி முதல் அனைத்து கேபிள், டிடிஹெச் உள்ளிட்ட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெ
ரிவித்துள்ளது.

100 சேனல்கள் இலவசம்:

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக 130 ரூபாயும், 18 சதவிகித GST வரியான 23 ரூபாய் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் 153 ரூபாய் 40 பைசா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அடிப்படை பேக்கேஜாக தூர்தர்ஷன் உள்பட 100 இலவச சேனல்கள் வழங்கப்படும்.

ஜிஎஸ்டி அமலில் இருக்கின்றது:
மேலும், கட்டணமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சேனல்களின் பட்டியலில் இருந்து, கூடுதலாக வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு 25 சேனல்களுக்கும், 20 ரூபாய் கட்டணத்தையும் அதற்கான 18 சதவிகித GST வரியாக 3 ரூபாய் 60 பைசா சேர்த்து மொத்தம் 23 ரூபாய் 60 பைசா செலுத்த வேண்டும்.

விலை விவரம் அறிவிப்பு:

இந்த 25 சேனல்களில் ஏதாவது கட்டண சேனல்களாக இருந்தால், இந்த 23 ரூபாய் 60 பைசாவுடன் சேர்த்து, அந்த கட்டண சேனலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை தனித்தனியாக ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். ஒவ்வொரு கட்டண சேனலுக்குமான விலை விவரங்கள், அந்தந்த சேனல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன.

மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு:

கேபிள், DTH, ஐபிடிவி உள்ளிட்ட எந்த இயங்குதளமாக இருந்தாலும், மாற்றங்களின்றி ஒரே மாதிரியாகவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக தங்களது விருப்ப சேனல்களை மாதந்தோறும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

கட்டணம் குறைப்பு:

ஏற்கனவே பார்வையாளர்களின் விருப்பத்தை கேட்காமலேயே அனைத்து வீடுகளுக்கும் கட்டண சேனல்கள் சென்றடைந்தன. ஆனால், தற்போது வாடிக்கையாளர் விரும்பும் கட்டண சேனல்களுக்கு மட்டுமே அதற்குரிய தொகையை செலுத்தி பார்க்க முடியும் என்பதால், அந்த கட்டண சேனல்கள் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும், விளம்பர வருமானத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் கட்டண சேனல்கள், தங்கள் கட்டணத்தை குறைக்கவோ அல்லது கட்டணம் இல்லா சேனலாக மாறவோ வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

செட் ஆப் பாக்ஸில் மாற்றம்:

இம்மாதம் வருகிற 28 ந்தேதி இரவுடன் அனைத்து கட்டண சேனல்களும் நிறுத்தப்பட்டு, 29ந் தேதி முதல் வாடிக்கையாளர்கள் விரும்பும் கட்டண சேனல்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதால் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் இப்போதே தங்கள் கேபிள் ஆபரேட்டர்களை தொடர்பு கொண்டு, தேவையான கட்டண சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில் செட் ஆப் பாக்சில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

அனலாக்கில் சேனல்கள் வழங்க தடை:

மேலும் செட் ஆப் பாக்ஸ் இல்லாத அனலாக் கேபிள் இணைப்புகளில் சேனல்கள் வழங்க ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment