2019 - 2020 கல்வியாண்டில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 & 10 ஆம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு மதிப்பீடு ஆகும். 'நாட்டமறிதேர்வு' என்று கலைச்சொல்லால் குறிப்பிட்டாலும் - இது தேர்வல்ல. ஒரு பயிற்சியே ஆகும். மாணவர்களின் தன்னிலை அறியும், திறனறி பயிற்சியே ஆகும் .
வளரிளம் பருவ மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வித்திறன்களைப் பகுப்பாய்ந்து, அவர்களது ஆர்வம், தர்க்கசிந்தனை, முடிவெடுக்கும் திறன், உள்ளார்ந்த தகுதிகளை அறிந்து, அளவீடு செய்து, தக்கவர்களைக் கொண்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கி, மேலே படிப்பதற்குண்டான தகுந்த வழிகாட்டுதல்களைத் தருகின்ற முயற்சியே, இப்பயிற்சியின் நோக்கமாகும்.
No comments:
Post a Comment