திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, January 29, 2020

பள்ளிக்கல்வி - மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு.

1வது மாநில அளவிலான குடியரசு தின 14 வயதிற்குட்பட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் - 2019 - 2020 

பொது விதிமுறைகள்

* முதலாவது மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் மாணவிகளுக்கு 03.02.2020 காலையில் 7.00 மணியளவில் தொடங்கி 05.02.2020 முற்பகல் 7.00 மணி வரை போட்டிகள் நடைபெறும். மாணவர்களுக்கு 05.02.2020 காலையில் தொடங்கி 07.02.2020 பிற்பகல் வரை நடைபெறும்.

* மாணவ மாணவியர்களுக்கான அனைத்து குழு விளையாட்டு போட்டிகள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும். மாநில அளவிலான குடியரசு தின குழு போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் அணி மேலாளர்களுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அணி மேலாளர்கள் இல்லாத அணிகள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கபடமாட்டார்கள் .

* போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுடன் அணி மேலாளராக உக.இ/உ.க.ஆ மட்டுமே மாணவ மாணவிகளுடன் தங்கும் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள். 02.02.2020 பிற்பகல் 04.00 மணி முதல் இரவு 09. 00 மணிக்குள் வரும் மாணவி அணிகளுக்கு மட்டும் தங்கும் இட வசதி வழங்கப்படும் . அதேபோல் 05.02.2020 காலை 06.00 மணி முதல் அணிகளுக்கு மட்டும் தங்கும் இட வசதி வழங்கப்படும் . இந்நேரத்திற்கு மேல் மாணவ மாணவி அணிகளுக்கு தங்கும் இட வசதி அளிக்கப்படமாட்டாது . 02.02.2020 பிற்பகல் 12.00 மணி முதல் 07.02.2020 பிற்கல் 06.00 மணி வரை மட்டுமே மாணவ மாணவிகளுக்கு இட வசதி வழங்கப்படும் .

* மாணவ மாணவிகள் தங்கும் இடங்களிலேயே வருகை பதிவு செய்ய வேண்டும். மாணவ மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டி நடைபெறும் மையங்களில் வருகை பதிவு செய்ய வேண்டும். தங்கும் இடங்களில் ஒரு அணிக்கு ரூ.1000/- வீதம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். தங்கள் அணிக்கு போட்டிகள் முடிந்தவுடன் அறையை காலி செய்யும்போது வைப்பு தொகை திரும்ப வழங்கப்படும். 03.02.2020 முற்பகல் முதல் 07.02.2020 பிற்பகல் வரை மட்டுமே மாணவ மாணவிகள், அணிமேலாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு உணவு வசதி செய்யப்பட்டுள்ளது .

*  பங்கு பெற்றமைக்கான சான்றிதழ்கள் மற்றும் டி - சர்ட் போட்டி பொருப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். தங்கும் அறைகள் எவ்வித சேதமும் ஏற்படாமல் அணி மேலாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சேதாரமாயிருப்பின் வைப்பு தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது .

* போட்டி நடைபெறும் காலம் குளிர் காலமாக இருப்பதால் போட்டியாளர்கள் தங்குவதற்கு தேவையான கம்பளி, போர்வை, தலையண, கோப்பை மற்றும் பூட்டு சாவி தங்களுடன் எடுத்து வர வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து பள்ளிகளும் பள்ளி நகலான நுழைவு படிவம், மதிப்பெண் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பிறந்த தேதி சான்றிதழ் நகல், தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன் கொண்டு வருதல் வேண்டும் .

* போட்டிகளில் பங்கு பெறும் வீரர் வீராங்களைகள் போட்டிகள் நடைபெறும் மையத்திற்கு போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இருத்தல் வேண்டும். உரிய சீருடைகளுடன் போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்த அணிகள் எக்காரணம் கொண்டும் அன்று இரவு முதல் தங்க அனுமதி இல்லை.

* நடுவர்கள் கூட்டம் 02.02.2020 மாலை 6.00 மணியளவில் அதியமான் பொறியியல் கல்லூரி, ஓசூரில் நடைபெறும்.

* அணிமேலாளர் கூட்டம் இரவு 08.00 மணியளவில் தங்கும் இடங்களிலேயே நடைபெறும் . போட்டி நடைபெறும் நாட்களில் வளாகத்தில் எந்த ஒரு இடையூம் ஏற்படுத்தாமல் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

* போட்டிக்கு ஏற்ற விளையாட்டுச் சீருடையில் மட்டும் மாணவ மாணவியர் அனுமதிக்கப்படுவார்கள் .

* மேற்காண் அனைத்து தகவல்களையும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், விளையாட்டில் பங்கேற்கும் அனைத்து வகை பள்ளிகளில் உள்ள வீரர் வீராங்கனைகளுக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு 03.02.2020 முதல் 05.02.2020 முற்பகல் வரை உணவுகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு 05.02.2020 காலை முதல் 07.02.2020 பிற்பகல் வரை உணவுகள் வழங்கப்படும் .

போட்டி அட்டவணை :




No comments:

Post a Comment