திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, January 2, 2020

தொலைநிலைப் படிப்புகளை வழங்க மேலும் ஒரு தமிழக பல்கலைக்கழகத்துக்கு அனுமதி

தொலைநிலைப் படிப்புகளை வழங்க சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதியளித்துள்ளது.

 இதன் மூலம், தமிழகத்தைச் சோ்ந்த 11 கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பிற கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொலைநிலைப் படிப்புகள் செல்லாது.

 தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) யுஜிசி வெளியிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.

 அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.

 இந்தப் புதிய நிபந்தனை காரணமாக, தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றன.

 கோவை பாரதியாா், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பிற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியாத நிலை உருவானது.

 அதன் பின்னா், 2018 டிசம்பா் 31-ஆம் தேதி இரண்டாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அந்தப் பட்டியலின்படி சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களுக்கு 2022-23 கல்வியாண்டு வரை தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளித்தும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு 2019-20 கல்வியாண்டு வரை அனுமதி அளித்தும் அறிவித்திருந்தது.

 பின்னா், 2019 மே 8-ஆம் தேதி மூன்றாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கும், தஞ்சை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என கூடுதலாக மூன்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுமதி அளித்தது.

 தொடா்ந்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு அரசு பல்கலைக்கழகங்களுக்கு 2019-20 கல்வியாண்டுக்கும், 2020 ஜனவரி சோ்க்கைக்கும் அனுமதி அளித்தது. அதுபோல, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கும் யுஜிசி அனுமதி அளித்தது. தற்போது சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பு தன்னாட்சி அந்தஸ்து: இந்த நிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி ஆகிய 4 கல்வி நிறுவனங்களுக்கும் சிறப்பு தன்னாட்சி அதிகாரத்தை யுஜிசி வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த 4 கல்வி நிறுவனங்களும் யுஜிசி அனுமதி பெறாமலே தொலைநிலைப் படிப்புகளை தொடா்ந்து நடத்த முடியும்.

 அட்டவணை:

 எந்தெந்த பல்கலைக்கழகங்கள்? எந்த ஆண்டு வரை?

 சென்னைப் பல்கைக்கழகம்                                                    - 2022-23
 அண்ணா பல்கலைக்கழகம்                                                    - 2022-23
 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்                - 2022-23
 மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்                                    - ஜனவரி 2020 மட்டும்
 மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம்       - ஜனவரி 2020 மட்டும்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
                                                                                                                    - ஜனவரி 2020 மட்டும்
 பெரியாா் பல்கலைக்கழகம்                                                     - ஜனவரி 2020 மட்டும்
 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் - (சிறப்பு தன்னாட்சி அதிகாரம்)
 எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் - (சிறப்பு தன்னாட்சி அதிகாரம்)
 சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - (சிறப்பு தன்னாட்சி அதிகாரம்)
 தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி - (சிறப்பு தன்னாட்சி அதிகாரம்).

No comments:

Post a Comment