திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, January 28, 2020

Observation Mobile App ( TNVN ) - வகுப்பறை நோக்கின் என்ற புதிய மொபைல் ஆப் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி - SPD Proceedings!

வகுப்பறைக் கற்றல் விளைவு அடைவு நிலைகளைக் கண்காணித்தலின் ஒரு பகுதியாக வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை உற்றுநோக்கி கற்றலுக்கு உகந்த வகையில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்திடும் நோக்கிலும், அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி பள்ளிக் கல்வித் துறையிலுள்ள அனைத்து ஆய்வு அலுவலர்களும் வகுப்பறை நிகழ்வுகளை உற்றுநோக்கும் வகையிலும் Observation Mobile App - தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு , சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் ( Pilot Study ) செயல்படுத்தப்பட்டு வருகிறது .

தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலியின் மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து முன்னேற்றம் அடையச் செய்ய எளிமையாக உள்ளது என்றும், குறிப்பாக கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த முடிகிறதென்றும், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பார்வை மேற்கொண்ட பெரும்பாலான அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், இந்த வகுப்பறை நோக்கின் செயலியின் உபயோகமானது , ஆசிரியர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களிடத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாலும் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இச்செயலியின் உபயோகத்தை உடனடியாக கொண்டு செல்ல மாநில திட்ட இயக்ககத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பார்வை அலுவலர்களும் மேற்கண்ட செயலியை உடனடியாக உபயோகப்படுத்தும் நோக்கில், அனைத்து அலுவலர்களுக்கும் இந்த வகுப்பறை நோக்கின் செயலி குறித்து பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 30 மாவட்டங்களில் ஒவ்வொரு வட்டார வள மைய அளவிலிருந்தும், கணிணி தொழில் நுட்பத்தில் நன்கு கற்று தெரிந்த அனுபவமுள்ள கைபேசியை நன்றாக பயனுள்ள முறையில் கையாளக்கூடிய ஒரு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட Quality ஒருங்கிணைப்பாளர்கள், EMIS ஒருங்கிணைப்பாளர்களையும் 29.01.2020, 30.01.2020 ஆகிய தேதிகளில் கீழ்க்காணுமாறு அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு நேரிடையாக அழைத்து பயிற்சி அளித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment