அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும், அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை இழுத்து மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், தொடக்க கல்வி இயக்குனரகம், பள்ளி கல்வி இயக்குனரகம், மெட்ரிக் இயக்குனரகம் மற்றும் பல்வேறு துறைகள் செயல்படுகின்றன.அவற்றின் சார்பில், பள்ளிகள் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனங்களுக்கு, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.அதேபோல, மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம்; நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகம்; அரசு உதவி பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகமும் அனுமதி வழங்குகின்றன.
இதில், மாவட்ட வாரியாக அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை, பள்ளி கல்வித்துறை சேகரித்துள்ளது. அதில்,அங்கீகாரம் இல்லாமல், நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள், அதிகம் செயல்படுவது கண்டறியப் பட்டுள்ளது.இதையடுத்து, அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி அதிகாரிகள் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அந்த உத்தரவில், 'அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விஜயம் செய்து, அங்கீகாரம் குறித்த ஆவணங்களை, ஆய்வு செய்ய வேண்டும்.அங்கீகாரம் இன்றி செயல்படும், அனைத்து நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளையும், தாமதமின்றி இழுத்து மூட வேண்டும். அவற்றின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment