திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, February 5, 2019

நியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்

அணுவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ‘ரஷ்யன் ஸ்டேட் அடாமிக் எனர்ஜி கார்ப்ரேஷன்’ எனப்படும் ரோஸ்டாம் நிறுவனத்தால் வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் இது!

பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு, அணுவுலை சார்ந்த உபகரணங்களை தயாரித்து வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று இந்த ரோஸ்டாம் நிறுவனம். அணு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் முழு உதவித்தொகையுடன் உயர்கல்வி வழங்குவதன் மூலம் அத்துறை சார்ந்த வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

தகுதிகள்:

இந்தியாவை சேர்ந்த இளநிலை அல்லது முதுநிலை படிக்கும் மாணவராக இருக்க வேண்டும். ரஷ்யாவில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் ‘நியூக்லியர்-எனர்ஜி’ சார்ந்த படிப்பை தேர்வு செய்து விண்ணப்பித்து அந்த கல்வி நிறுவனத்திடமிருந்து அழைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

துறைகள்:

 நியூக்லியர் பவர் இன்ஜினியரிங் அண்ட் தெர்மல் பிசிக்ஸ்
 நியூக்லியர் ரியாக்டர்ஸ் அண்ட் மெட்டீரியல்ஸ்
 நியூக்லியர் பவர் பிளாண்ட்ஸ்: டிசைன், ஆப்ரேஷன் அண்ட் இன்ஜினியரிங்
 நியூகிலியர் பவர் இன்ஸ்டாலேஷன்ஸ் அண்ட் ஆப்ரேஷன்
 நியூக்லியர் மெடிசன்
 நியூக்லியர், தெர்மல் அண்ட் ரெனவபில் எனர்ஜி அண்ட் ரிலேடட்                        டெக்னாலஜீஸ்

உதவித்தொகைகள்:

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு வழங்கப்படும். மேலும், ரஷ்ய மொழிப் பயிற்சியுடன் தங்கும் வசதிகளும் செய்து தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த உதவித்தொகை திட்டத்திற்கென அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள வலைத்தளத்தின் மூலம் மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 15

விபரங்களுக்கு: https://russia.study/en

பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு: மாணவர்களுக்கு நகல் வழங்க உத்தரவு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பை, மாணவர்களுக்கு நகல் எடுத்து வழங்கும்படி, பள்ளிகளுக்கு தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது.

        பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அடுத்த மாதம் பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 வுக்கு, புதிய தேர்வு முறை அறிமுகமாகிறது. இதன்படி, ஒவ்வொரு பாடத்திற்கும், இதுவரை, 200 மதிப்பெண்ணிற்கு நடந்த தேர்வு, இந்தாண்டு முதல், 100 மதிப்பெண்ணிற்கு நடத்தப்படுகிறது. 

       இணையதளம்மொழி பாடம், முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கான தேர்வு, இந்தாண்டு முதல், ஒரே தாளாக நடத்தப்படுகிறது.பிளஸ் 1 வகுப்பை பொறுத்தவரை, புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு மாற்றங்களுடன் இந்த ஆண்டு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், புதிய வினாத்தாள் எப்படி இருக்கும் என, ஜன., 3ல் தேர்வு துறை இயக்குனரகம், வினாத்தாள் வடிவமைப்பை வெளியிட்டது.

        தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், வினாத்தாள் முறை பதிவேற்றம் செய்யப்பட்டது. இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, தேர்வு வடிவமைப்பை தெரிவிக்க, தேர்வு துறை உத்தரவிட்டது. ஆனால், பல பள்ளிகளின் மாணவர்களுக்கு, தேர்வு வடிவமைப்பு முறை தெரியவில்லை என, பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

      இது குறித்து, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், +1 & +2 புதிய வடிவமைப்பு வினாத்தாள், தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை, ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களுக்கு நகல் எடுத்து கொடுத்து, உரிய பயிற்சியை அளிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

கீழடியில் மீண்டும் அகழாய்வு ; மத்திய அரசு அனுமதி

புதுடில்லி: தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மீண்டும் அகழாய்வு நடந்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

   சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய 2015-ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன.இதில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.இதையடுத்து 2016-ல் இரண்டாம் கட்டமாகவும் 2017-ல் 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் பளிங்கு கற்கள் உட்பட 1600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

    இதற்கிடையே &'கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்&' என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கியது.இந்நிலையில் கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார். இதனால் கீழடியில் அகழாய்வு பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எச்டி., மாணவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்! மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை

புதுச்சேரியில், பி.எச்டி., மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவதற்கு, புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., படிப்பவர்களுக்கு, கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு கல்லுாரிகளில் படிக்கும் பி.எச்டி., மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் இருந்தது.

இந்த குறையை போக்கும் வகையில், கடந்த காலத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் பி.எச்டி., படிப்பவர்களுக்கு மட்டும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை, புதுச்சேரி அரசு அறிவித்தது.புதுச்சேரி அரசு கல்லுாரிகளை பொருத்தவரை, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தமிழ் பாடத்துக்கு மட்டுமே பி.எச்டி., படிப்பு அப்போது இருந்தது. இதனால், தமிழ் பாடத்தில் பி.எச்டி., படித்தவர்கள் மட்டும் அரசின் ஊக்கத் தொகையை பெற்று வந்தனர். 

தற்போது, அதிக எண்ணிக்கையிலான மாணவ மாணவிகள் பயனடையும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து, புதிய அரசாணையை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, நடப்பு 2018-19ம் கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது.புதிய திட்டத்தின்படி, அரசு, சொசைட்டி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பி.எச்டி., படிப்பவர்களுக்கு எந்த பாடமாக இருந்தாலும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும். அதாவது, பி.எச்டி., படிப்பவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாயும், ஆராய்ச்சி பணிக்காக புத்தகம், இதழ்கள் வாங்குவது, டேட்டா சேகரிப்பது, படிப்பு தொடர்பான பொருட்கள் வாங்குவது போன்ற செலவுகளுக்காக, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உதவித் தொகையை பெறுவதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், முழுநேரமாக பி.எச்டி., படிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் என்ற அடிப்படையில், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திலும், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியிலும் மட்டுமே தற்போது பி.எச்டி., படிப்புகள் உள்ளன.

பாரதிதாசன் கல்லுாரியில் ேஹாம் சயின்ஸ் பாடத்தில் மட்டும் பி.எச்டி., உள்ளது. இதில் படிக்கும் மாணவிகளுக்கு, புதிய திட்டத்தின் கீழ் கல்வி ஊக்கத் தொகை கிடைக்கும்.பட்ட மேற்படிப்பு மையத்தில் வணிகவியல், கணக்கு, வேதியியல், உயிரியல், விலங்கியல், ஆங்கிலம் உள்ளிட்ட 8 பாடங்களில் பி.எச்டி., படிப்பு நடத்தப்படுகிறது. புதிய திட்டத்தின் மூலமாக, இங்கு படிக்கும் 107 மாணவ மாணவிகள் பயனடைவர்.

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் நேரடி நியமனம் செய்யும் பொருட்டு நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

 தமிழக தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்காக தேர்வு - IV 2015 - 2016, 2016 - 2017 மற்றும் 2017 - 2018ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு 2017 நவம்பர் 14ம் தேதி முதல் விண்ணப்பங்களைக் கொரியிருந்தன. பின்னர் இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2018 பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்று இத்தேர்வு முடிவுகளும் அதே ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் இத்தேர்வில் உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III பதவிக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் நடைபெறவுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் பிப்ரவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தற்காலிகப் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விபரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்விற்கான அழைப்பினை தனியே அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

இதற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் தொழில்நுட்ப கல்வித் தகுதி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இட ஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் 1,500 இடங்களில் தமிழ் கற்று கொடுக்கப்படுகிறது

வாணியம்பாடி: உலகளவில், 1,500 இடங்களில், தமிழக அரசு சார்பில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது, என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறினார். வேலுார் மாவட்டம், வாணியம்பாடியில், முத்தமிழ் மன்றம் சார்பில் தமிழ் திருவிழா நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:உலகளவில் அமெரிக்கா உட்பட, 1,500 இடங்களில், தமிழக அரசு சார்பில், தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அருங்காட்சியகங்களில் உள்ள, 100 காலிப்பணியிடங்கள், முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். அருங்காட்சியகம், தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டு துறை வளர்ச்சிக்கு, இந்தாண்டு, 227 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள, 12 கோட்டைகளை சீரமைத்து பாதுகாக்க, ஆசிய வளர்ச்சி வங்கி, 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. உலகத்தமிழ் சங்கத்தில் உள்ள, தமிழ் பண்பாட்டு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட, 25 கோடி ரூபாய் நிதியில், 16 கோடி ரூபாய் செலவில், தமிழ்த்தாய் சிலை வைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஜிசாட் -- 31 நாளை ஏவப்படுகிறது

பெங்களூரு: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ஜிசாட்-31 செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து, நாளை ஏவப்பட உள்ளது.
   இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில், 40வது செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. ஜிசாட் - 31 என்ற இந்த செயற்கைக்கோள், பிரான்ஸ் நாட்டின், பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

           தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். மொத்தம், 2,535 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், உள்நாட்டில் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாது நாட்டை சுற்றியுள்ள பெருங்கடல்கள் குறித்த தகவல்களையும் அளிக்கும். இதன் ஆயுட்காலம், 15 ஆண்டுகள்.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு

         சென்னை: சென்னை பல்கலையின், நவம்பர் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சென்னை பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், பட்டம் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, நவம்பரில் நடந்த தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. முதுநிலை படிப்பில் மறுமதிப்பீடு தேவைப்படுவோர், தங்களின் கல்லுாரிகள் வழியே, வரும், 6 முதல், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

           இளநிலை பட்டம் படிப்போர், மறுகூட்டலுக்கு, வரும், 6 முதல், 12 வரை, கல்லுாரிகள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை படிப்பை, 2015 - 16 கல்வியாண்டு மற்றும் அதற்கு முன் முடித்தவர்கள், சென்னை பல்கலையின் இணைய தளத்தில் மட்டுமே, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவித்து உள்ளது.

CTET Recruitment 2019 – Apply Online for Central Teacher Eligibility Test

Name of the Post  : CBSE CTET Online Form 2019
Post Date               : 05-02-2019

Brief Information: Central Board of Secondary Education (CBSE) has given a notification for the recruitment of Central Teacher Eligibility Test (CTET) July vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

Central Board of Secondary Education (CBSE)
Central Teacher Eligibility Test July 2019
Application Fee
  • For Gen/ OBC (Only Paper I or II)                                   : Rs. 700/-
  • For Gen/ OBC (Both Paper I & II)                                    Rs. 1200/-
  • For SC/ST/Differently Abled Person (Only Paper I or II)   Rs. 350/
  • For SC/ST/Differently Abled Person (Both Paper I & II)  : Rs. 600/-

  • Payment Mode : Through Syndicate Bank or Canara Bank
  •                              E-challan/ Debit/ Credit Card.
Important Dates
  • Starting Date for Apply Online     : 05-02-2019
  • Last Date to Apply Online            : 05-03-2019
  • Last Date for Fee Payment          : 08-03-2019 (Before 03:30 PM)
  • Period for Correction/ Updation
  • in Details                                      : 14-03-2019 to 20-03-2019
  • Date of Exam                               : 07-07-2019 (Sunday)
Vacancy Details
Post NameQualification
Teacher (for Classes I-V)
Senior Secondary with
50% marks & D.El.Ed/ B.El.Ed/ 
Graduation with B.Ed
Teacher (for Classes VI-VIII)
Senior Secondary with
B.A/B.Sc.Ed or B.A.Ed/B.Sc.Ed/B.A.Ed/
Graduation with D.El.Ed/ B.Ed
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Apply OnlineClick Here
Exam CitiesClick Here
Exam ScheduleClick Here
Short NoticeClick Here
Official WebsiteClick Here

துப்புரவு பணியில் சேர பட்டதாரிகள் ஆர்வம்


          சட்டசபை செயலகத்தில், துப்புரவு பணியாளர் பதவிக்கு, பி.டெக்., - எம்.டெக்., படித்தவர்கள் விண்ணப்பித்திருப்பது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மக்களிடம் இன்னமும், அரசு வேலை மீதான மோகம் குறையவில்லை. அதிகம் படித்தவர்களும், எடுபிடி வேலையாக இருந்தாலும், அரசு வேலையாக இருந்தால் நல்லது என, நினைக்கின்றனர்.


 அதற்கேற்ப, வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது.பொறியியல் உட்பட, தொழிற் கல்வி பயின்றவர்கள் பலர், வேலையின்றி தவித்து வருகின்றனர். படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்பதால், எந்த வேலை கிடைத்தாலும் செய்வதற்கு, பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக உள்ளனர்.சமீபத்தில், சென்னை, சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள, 14 துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இப்பணிக்கு, 3,900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.



              இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள். எம்.டெக்., - பி.டெக்., - எம்.பில்., - எம்.காம்., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.எட்., - பி.ஏ., டிப்ளமா - எம்.சி.ஏ., பட்டதாரிகள் விண்ணப்பித்துஉள்ளனர்.இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:துப்புரவு பணியாளர் பணிக்கு வந்த விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பட்டியலை, சட்டசபை செயலக இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.



 சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின், ஆட்களை நியமிக்க முடிவு செய்திருந்தோம். தற்போது, தேர்தல் முடிந்த பின், நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பட்டதாரிகளுக்கு, வெளியில் எந்த வேலைக்கு சென்றாலும், 10 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும். துப்புரவு பணியாளர் என்றாலும், 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பதால், பட்டதாரிகளும் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.