திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, April 30, 2019

மாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதிகளை பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித்தகுதிகளை அவரவர் பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றுபள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

 கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 2011 -ம் ஆண்டு முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதிகளை படித்த பள்ளிகள் மூலம் நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டன.அதேபோல், இந்த ஆண்டும் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதிகளை படித்த பள்ளிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 

கல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்

கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கையின் போது, மாணவர்கள், பிளஸ் 1ல் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என, கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள், வழங்கப்படுகின்றன. பிளஸ் 2வில் முக்கிய பாடங்களில், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், அனைத்து கல்லுாரிகளுக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர், சாருமதி அனுப்பியுள்ளசுற்றறிக்கை:பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு,பிளஸ் 1 பாடம், பொது தேர்வாக அறிமுகமாகி உள்ளது.

அதன்படி, பிளஸ் 1ல் அனைத்து பாடங்களிலும், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்ச்சி செல்லும். எனவே, இந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்தவர்கள், சென்ற கல்வி ஆண்டில், பிளஸ் 1ல் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 வரையான காலிப் பணியிடங்கள் !

தமிழகத்தில் 2,699 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 40 ஆயிரத் துக்கும் அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

எனினும், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 வரையான காலிப் பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவர அறிக்கையை தமிழக அரசிடம் அளித்து ஒப்புதல் பெற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

அரசு ஒப்புதல் கிடைத்த பின் அதன் விவரம் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்படும். இதனால் விரைவில் போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Monday, April 29, 2019

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு கோடை விடுமுறைக்குபின் நடத்த கல்வித்துறை முடிவு.

பள்ளி திறந்த பின் கவுன்சிலிங்!

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், நடப்பாண்டும் ஆசிரியர் கவுன்சிலிங் பள்ளி திறந்த பின் நடக்குமென தெரிகிறது. இதனால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர், பணி மாறுதல் பெற, ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறுவது வழக்கம்

ஆசிரியர் மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம், பட்டதாரி, முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் இட மாறுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் கவுன்சிலிங் நடக்கும்

ஆசிரியர் இடமாறுதலுக்கு வழிவகையாக அமைவதால், கவுன்சிலிங்கை ஆசிரியர்கள் ஒரு மாத ' திருவிழா ' வாக கருதுகின்றனர். எதிர்பார்த்து காத்திருப்பவருக்கு தங்களுக்கான இடம் கிடைக்காமல் போவதும், வேண்டா வெறுப்பாக சிலருக்கு இடம் மாற்றம் கிடைப்பதும் ஒவ்வொரு கவுன்சிலிங்கிலும் வாடிக்கையாக உள்ளது.வழக்கமாக, மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படும்*

கடந்தாண்டு முதன் முறையாக பிளஸ் 1 பொதுத்தேர்வு என்பதுடன், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மே இரண்டாவது வாரம் வரை நடந்ததால், கவுன்சிலிங் தேதி கோடை விடுமுறை நிறைவு பெறும் வரை அறிவிக்கவில்லை.தேர்வு முடிவு வெளியீடு, அட்மிஷன், பள்ளி திறப்பு என தொடர்ந்து கவுன்சிலிங் தள்ளி போனது

நடப்பாண்டு லோக்சபா தேர்தலால் முன்கூட்டியே பொதுத்தேர்வு, அனைத்து வகுப்புக்கான ஆண்டுத்தேர்வுகள்நடத்தி முடிக்கப்பட்டன

ஏப்ரல், 13 ம் தேதி முதல், மே, 31 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல், 18ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும், மே, 23 தான் தேர்தல் முடிவு என்பதால், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படாமல் உள்ளது*

இதனால், நடப்பாண்டுக்கான கவுன்சிலிங் மே மாதம் நடக்குமா என்ற கேள்வி ஆசிரியர் மத்தியில் எழுந்துள்ளது.தேர்தல் முடிவுக்கு முன் வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத்திற்கு மேலாகிவிட்டால் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு பெறுவதற்கு பதிலாக இனி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பெற வேண்டும்.



10th - Public Exam March 2019 Result - Official Link [ Result on 29.04.2019 AT 9.30 AM ]

TN BOARD RESULT - 2019 SSLC | 10th STD OFFICIAL LINK TO CHECK YOUR RESULT

Results  - Published  on 29.04.2019 at 9.30am
For Student




School office   Level only

Friday, April 26, 2019

வட தமிழக கரையை நோக்கி புயல் நகரக் கூடும்; கடலோர தமிழகம், புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’: அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற்று, வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்பதால், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வுமையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை செய்திக்குறிப்பு:

இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (ஏப்.25) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. தற்போது வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று,அதே பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.மேலும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று, 30-ம் தேதி, இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதி வழியாக வட தமிழகக் கரையைக் கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.

இந்த புயல் சின்னம் காரணமாக, 28-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-ம் தேதி பெரும்பாலான பகுதிகளில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி பெரும்பாலான பகுதிகளில் மழை, சில இடங்களில் கன முதல் மிககனமழை, ஓரிரு இடங்களில் அதிகனமழை (20 செமீ-க்கு மேல்) பெய்யக்கூடும்.பலத்த காற்றுகாற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வருவதன் காரண மாக தென்கிழக்கு வங்கக் கடல்பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கும். 28-ம் தேதி இலங்கை கடலோரப்பகுதியில் சுமார் 100 கிமீ வேகத்திலும், 29-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் 115கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலச்சந் திரன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று வட தமிழக கரையைநோக்கி நகரக்கூடும். அதனால் மீனவர்கள், 26-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 27மற்றும் 28-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

தன்னார்வ அடிப்படையில் வானிலையை கணித்து கூறி வரும் வானிலை ஆர்வலர் ந.செல்வகுமார் கூறியதாவது:இந்தப் புயல் வட தமிழக பகுதியில் கரையைக் கடந்து, ஆந்திரா நோக்கிச் சென்று, மீண்டும் கடலில்இறங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்குமென எதிர் பார்க்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் ஒடிசா கரையோரம் நிலவும் எதிர் புயல் தாக்கத்தால், புயல் கரையைக் கடக்கும் இடம் மாறவும் வாய்ப்புள்ளது.இந்தப் புயலால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும். இது தமிழகத்துக்குள் நுழைந்து மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என்பதால், திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைஆணையர் சத்யகோபால், புயலை எதிர்கொள்ள அனைத்துஏற்பாடுகளையும் செய்ய வேண்டும், நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கியுள்ளதாக அத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 29ம் தேதி காலை 9;30க்கு வெளியீடு


ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 29ம் தேதி காலை 9;30க்கு வெளியீடு.

dge.tn.nic.in , dge.tn.gov.in என்ற முகவரிகளில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறியலாம்.


Thursday, April 25, 2019

தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்க்மேன் (டிரெய்னி) பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துக்கள்.

பணி: கேங்க்மேன் (பயிற்சி)
காலியிடங்கள்: 5000
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf  என்ற வலைத்தளத்தில் அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.06.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2019

பி.எட்., அட்மிஷன்

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தில் பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: பேச்சுலர் ஆப் எஜுகேஷன் (பி.எட்.,) 

படிப்பு காலம்: 2 ஆண்டுகள்

தகுதிகள்: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், வரலாறு, புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோ-பிசிக்ஸ், பயோ-பிசிக்ஸ் , எலக்ட்ரானிக்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, பயோ-டெக்னாலஜி, மைரோ-பயாலஜி உட்பட ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி குறித்த தகவல்களுக்கு பல்கலைக்கழக இணைய தளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 14

விபரங்களுக்கு: http://mkuniversity.ac.in

2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!


முதுநிலை ஆசிரியர்கள் காலியிடம் விவரம் சேகரிப்பு: விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு

அரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் காலியிடம் விவரம் சேகரிப்பு: விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதனால் விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:வரும் 2019-20-ம் கல்விஆண்டில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய அறிக்கை தயார் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் விவரங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் தயார் செய்து ஏப்.26 (நாளை)க்குள் jdhssed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதுதொடர்பான தகவல் அறிக்கையை அரசுக்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டி இருப்பதால் காலதாமதமின்றி சரியான விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு முடிவு

இதற்கிடையே போட்டித்தேர்வின் மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இப்போது நடைபெற்று வரும் சூழலில், விரைவில் போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் 2,000 நர்சிங் கல்லூரிகள்: திடுக் தகவல் அம்பலம்!

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்க தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்க தலைவர் பாலாஜி வேலூரில் நேற்று கூறியதாவது: 

தமிழகத்தில் புதிதாக ஒரு நர்சிங் கல்லூரி தொடங்க வேண்டும் என்றால், இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதி பெறவேண்டும். அதன்பிறகு மாநில அரசின் அனுமதி பெற்றுதான் கல்லூரி தொடங்க முடியும். ஆனால் தமிழகத்தில் சுமார் 2000 போலி நர்சிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஓராண்டு, 2 ஆண்டு பயிற்சி எனக்கூறி மாணவ, மாணவிகளிடம் பல லட்சம் பறித்து மோசடி செய்து வருகின்றனர். இவற்றில் படித்த சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இவர்கள் முறையாக பதிவு செய்யவும் முடியாது. எனவே அங்கீகாரம் பெறாத நர்சிங் கல்லூரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக நர்சிங் படிக்க விரும்புவோர் நர்சிங் கவுன்சில் வெப்சைட்டுக்கு சென்று அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகள் குறித்து அறிந்து அதன்பின்னர் நர்சிங் பயிற்சி பள்ளியில் சேர வேண்டும். உரிய பதிவு பெற்ற நர்சிங் நிறுவனங்களில் 3 ஆண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, April 24, 2019

மாதிரி பள்ளிகள் குறித்து ஆலோசனை

தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், பள்ளிக்கல்வி துறை செயலர், திருச்சியில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில், ஏதேனும் ஓர் அரசு பள்ளியை தேர்வு செய்து, 50 லட்சம் ரூபாய் செலவில், மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.தகுதி வாய்ந்த சிறப்பான ஆசிரியர்கள், வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட மாதிரி பள்ளிகளிள், தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம், திருச்சியில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குனர் முருகன் ஆகியோர், 32 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாதிரி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினர்.மாதிரி பள்ளிகளின் செயல்பாடுகள், மாதிரி பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கேட்டறிந்தனர். தொடர்ந்து, அடுத்த ஆண்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி,ஆலோசனை வழங்கினர்.

Tuesday, April 23, 2019

10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை சிறப்பு தேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, சிறப்பு துணை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கும், ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், ஜூனில் சிறப்பு துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு, பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு, ஜூன், 6ல் துவங்கி, 13ல் முடியும். 10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு, ஜூன், 14ல் துவங்கி, 22ல் முடியும்.பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு, ஜூன், 14ல் துவங்கி, 21ல் முடியும். 

அனைத்து நாட்களும், காலை, 10:00 மணி முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். இதில், பிளஸ் 2 பழைய பாட திட்ட மாணவர்களுக்கு மட்டும், 1:15 மணி வரை நடக்கும்.பாட வாரியான தேர்வு தேதி விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்கின. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் கடந்த 19-இல் வெளியிடப்பட்டன. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளும் கடந்த வாரம் முடிந்துவிட்டது. தொடர்ந்து, தேர்வு முகாம்களில் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன. மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

பெரும்பாலான தேர்வு முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை நிறைவு பெற்றன. வேலுர் உள்ளிட்ட சில மாவட்ட மையங்களில் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது.
இதையடுத்து மதிப்பெண்கள் பதிவேற்றம் மற்றும் தற்காலிக சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 8-இல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 22, 2019

தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு ஜூன் 14ல் தொடக்கம் ~ தனித்தேர்வர்கள் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு...


வேளாண்துறை படிப்புக்கு ஜீலை 1ல் நுழைவுத்தேர்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


வேளாண் படிப்புக்கு ஜூலை 1ல் அகில இந்திய நுழைவு தேர்வு

கோவை: வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, வரும், ஜூலை, 1ல் நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பை தமிழக மாணவர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.வேளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, கடந்தாண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வாயிலாக நடத்தப்பட்டது. நடப்பாண்டு முதல், தேசிய நுழைவுத்தேர்வுகள் ஒருங்கிணைப்பு ஆணையமான, என்.டி.ஏ.,விடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏப்., 1 முதல் 30ம் தேதி வரை, ஆன்லை' மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம், 700 ரூபாய். எஸ்.சி.,- எஸ்.டி., - திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, 350 ரூபாய்.விண்ணப்பங்களில் பிழைகளை திருத்த, மே 7 முதல், 14 வரை, வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும்போது, இ--மெயில்&' மற்றும் தொலைபேசி எண்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும்; இவற்றின்வாயிலாகவே மாணவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.வேளாண் படிப்பிற்கு, ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆனால், தமிழக மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிற மாநில மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவதாக, வேளாண் பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் அவசியம் எழுத வேண்டும். மாதம், 3,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கலாம். நாடு முழுவதும், 75 வேளாண் பல்கலைகள் உள்ளன.பல்கலையின் மொத்த இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

வேளாண் படிப்பில் சேர திட்டமிட்டுள்ள தகுதியான மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதலாம்.விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விபரங்களை, www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி?

பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் உயர்கல்வி படிப்பதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பிளஸ் டூ தேர்வு முடித்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காத்திருக்கும் மாணவர்கள் உயர்கல்வி படிப்புச் செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்கலாம். அந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெறுவது எப்படி என்கிற விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. வரும் கல்வி ஆண்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கி விடுவது நல்லது. இதுகுறித்து மாணவர்களுக்கு இயல்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் இதோ…

எந்தெந்தப் படிப்புகளில் சேருவதற்குக் கல்விக்கடன் வழங்கப்படுகிறது?
—————————————————————————————
பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் போன்ற அரசு அமைப்புகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்புகளிலும் சேர்ந்துள்ளவர்கள் கல்விக் கடன் கேட்டு பொதுத் துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். ஐசிடபிள்யூஏ, சிஏ, சிஎஃப்ஏ போன்ற படிப்புகளில் சேருபவர்களும் ஐஐஎம், ஐஐடி, ஐஐஎஸ்சி, எக்ஸ்எல்ஆர்ஐ, நிப்ட், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் போன்ற கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்திய நர்சிங் கவுன்சில், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் போன்ற அரசு அங்கீகார அமைப்புகளின் அனுமதியுடன் நடத்தப்படும் நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப் படிப்பு, பைலட் டிரெயினிங், ஷிப்பிங் போன்ற பட்ட மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் அங்கீகாரம் பெற்ற படிப்புகளில் சேருபவர்களுக்கும் கல்விக் கடன் கிடைக்கும். இதுதவிர, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலனை செய்யும். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களும் தங்களது படிப்புச் செலவுகளுக்காக வங்கிகளில் கல்விக் கடன் பெறலாம்.

பத்தாம் வகுப்பு படித்து விட்டு தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்குமா?
பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்கும். அதாவது, பத்தாம் வகுப்பு படித்து விட்டு தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் வங்கிகளில் கல்விக் கடன் பெறத் தனித்திட்டம் உள்ளது. இந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி சலுகை மட்டும் கிடைக்காது.

தேவையான ஆவணங்கள்
———————————-
*  கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
*  கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
*  பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
*  இருப்பிடச் சான்றிதழ்.
*  பள்ளி மாற்று சான்றிதழ்.
*  10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

கல்விக் கடனாக எவ்வளவு வழங்கப்படும்?
—————————————————–
இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் பெறலாம். வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நூலகம் மற்றும் லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், லேப்டாப், புராஜக்ட், ஸ்டடி டூர் போன்ற பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்குக் கல்விக் கடன் பெறலாம். வெளிநாடு செல்லும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கும் கல்விக் கடன் பெறலாம். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற்றவர்களுக்கு அரசு அமைப்புகள் நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தின்படியே கல்விக் கடன் பெற முடியும்.

கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன் பணம் செலுத்த வேண்டுமா?
————————————————————————————–
ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் கடன் தொகையில் 5 சதவீதமும் வெளிநாடுகளில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் கடன் தொகையில் 15 சதவீதமும் முன்பணமாக மாணவர்கள் செலுத்த வேண்டியதிருக்கும்.

கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டுமா?
—————————————————————————————–
ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீனோ, உத்தரவாதமோ தேவையில்லை. ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை கடன் வாங்கினால் மூன்றாம் நபர் ஜாமீன் தேவைப்படும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற்றால், சொத்து உத்தரவாதம் தேவைப்படும். அனைத்துக் கடன் ஆவணங்களிலும் மாணவருடன் பெற்றோர் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட வேண்டியதிருக்கும்.

கல்விக் கடனுக்கு வட்டி எவ்வளவு வசூலிக்கப்படும்?
—————————————————————-
‘பேஸ் ரேட்’ அடிப்படையில் வங்கிகள் கல்விக் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. வங்கிகளைப் பொருத்து வட்டி விகிதம் வேறுபடும். சுமார் 12 சதவீதத்திலிருந்து 14 சதவீதம் வரை வட்டி இருக்கும். கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வட்டியைச் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. படித்து முடிக்கும் வரை வட்டியை செலுத்த இயலாது என்பது குறித்து மாணவர்களே வங்கிகளிடம் எழுதிக் கொடுத்து விடலாம்.

கல்விக் கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்?
———————————————————————————
படிப்பை முடித்த ஓராண்டிலிருந்து அல்லது வேலைக்குப் போய் 6 மாதங்களிலிருந்து கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும். ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் வாங்குபவர்கள், பத்து ஆண்டுகளுக்குள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெறுபவர்கள் 15 ஆண்டுகளுக்குள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். வங்கிக் கடன் வாங்கிப் படித்து முடித்த மாணவர்கள், வேலையில் சேர்ந்தாலும்கூட, தொடக்கத்தில் குறைந்த ஊதியம் பெறும் மாணவர்கள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்படுவார்கள். அதனால், ‘டெலஸ்கோப்பிக்’ முறையை இந்திய வங்கிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில், தொடக்கத்தில் குறைந்தபட்சத் தொகையை செலுத்தலாம். பின்னர், படிப்படியாக, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் பேசி மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்குமா?
——————————————————————————————-
ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படித்தாலும்கூட, அவர்கள் அனைவரும் படிக்க வங்கிகளில் கல்விக் கடன் பெறலாம். ஒரு குடும்பத்தில் ஒரு மாணவருக்கு கல்விக் கடன் வாங்கினாலும்கூட, அந்த மாணவரின் சகோதர, சகோதரிகள் படிக்க வங்கிகள் கல்விக் கடன் வழங்கத் தடையில்லை. கல்விக் கடன் பெறுவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. மாணவர் மைனராக இருந்தால் பெற்றோர்கள் உறுதியளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு ரூ. 2 லட்சமும் இரண்டாவது மாணவருக்கு ரூ. 3 லட்சமும் கல்விக் கடன் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்துக்கான மொத்தக் கல்விக் கடன் தொகையைக் கணக்கிட்டு அதற்கேற்ற ஜாமீனை மாணவர்களின் பெற்றோர்கள் அளிக்க வேண்டும். அதேசமயம், அந்த மாணவர்கள் கல்விக் கடன் வட்டி சலுகை பெற தகுதி பெற்றிருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அந்தச் சலுகை கிடைக்கும். அதற்குத் தடை எதுவும் இல்லை.



நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்குமா?
—————————————————————————————–
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கல்விக் கடன் வழங்குவதற்கான விதி. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நேரடியாக சேரும் மாணவர்கள், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின் கீழ் வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற முடியாது. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவர்களும் அரசு ஓதுக்கீட்டின் கீழ் தாங்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதைக் காட்ட வேண்டும். அதனால், அரசு நடத்தும் கவுன்சலிங்கில் பங்கேற்று கிடைக்கின்ற கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்ய வேண்டும். பிறகு, தாங்கள் விரும்பும் கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்காததைக் காரணம் காட்டி, அந்த அட்மிஷனை சரண்டர் செய்து விட வேண்டும். பிறகுதான் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர வேண்டும். அப்போதுதான் இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின் கீழ் கல்விக் கடன் கிடைக்கும். அப்போதுதான் வட்டி சலுகையும் கிடைக்கும். அப்படி இல்லாவிட்டால், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டம் அல்லாத நடைமுறையில் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற முயற்சிக்கலாம். இந்தக் கடனுக்கு மத்திய அரசின் வட்டி சலுகை கிடைக்காது.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு நிர்ணயம் செய்த கட்டணத்தைக் கல்விக் கடனாகப் பெற முடியும். அத்துடன், தங்குமிடம், உணவு, லேப்டாப் போன்ற பல்வேறு செலவுகளுக்கு ஆகும் பணத்தையும் கல்விக் கடனாகப் பெறலாம்.

வங்கிக் கல்விக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
——————————————————————————
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு இந்தியப் பிரஜையாக இருக்க வேண்டியது அவசியம். வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம். இந்த வங்கியில்தான் கல்விக் கடன் பெற முடியும் என்கிற விதி எதுவும் இல்லை. அந்த ஊரில் உள்ள எந்த வங்கியிலும் கல்விக் கடன் பெற அணுகலாம். கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் பெறுவதற்கு முன்னதாக கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது. வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்டக் கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் அட்மிஷன் வாங்கி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து படிப்புக்கு ஆகும் செலவு குறித்த எஸ்டிமேட் தேவை. கல்விக்கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கிகளில் விண்ணப்பங்களைப் பெற்று நேரிலும் சமர்ப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையிலிருந்து பெற வேண்டும். ரேஷன் கார்டு, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். உத்தரவாதம் கொடுக்க வேண்டியதிருந்தால் அதற்கான ஆவணங்களும் தேவைப்படும். வங்கிகளுக்கு நேரில் சென்று எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்பதை நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். வங்கிகளின் இணைய தளத்திலும் இதுகுறித்த விவரங்கள் உள்ளன.



வங்கிகளில் கல்விக் கடன் எத்தனை நாள்களில் கிடைக்கும்?
———————————————————————-
மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு பரிசீலனை செய்ய 15 நாட்கள் முதல் ஒருமாதம் வரை வங்கிக் கிளைகள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். கல்விக் கடன் கிடையாது என்று நிராகரிக்க அந்த வங்கிக் கிளை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. கல்விக் கடன் கேட்டும் மாணவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று எழுத்து மூலம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் கொடுக்கப்படும் கல்விக் கடன் மனுவை நிராகரிக்க வங்கிகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. கல்விக் கடன் வழங்குவதற்கான இலக்கு முடிந்து விட்டது என்பது போன்ற காரணங்களை வங்கி அதிகாரிகள் கூறி வங்கிக் கடன் இல்லை என்று கூற முடியாது. சில வங்கிகளில் கல்விக் கடன் விண்ணப்பம் இல்லை என்று கூறலாம். அது சரியல்ல. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, உரிய காலத்தில் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படவில்லை என்றால் உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம். வங்கித் தலைவருக்குக் கடிதம் எழுதியும் நிவாரணம் பெறலாம். ரிசர்வ் வங்கியிலும் மாணவர் கல்விக் கடன் குறை தீர்ப்புக்குத் தனிப்பிரிவு உள்ளது. அங்கும் முறையிடலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை!
——————————————-
* எக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன் தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும் எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.

ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச் சலுகை
——————
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கடன் தர தயக்கம்
———————-
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி.

இருப்பினும் இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.

‘மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக்  கடன் அதிகரிக்கும்’ என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன.

கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது. படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்” என்கிறார் முன்னணி பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஒருவர்.

RTE - 25% Students Admission Application Form And Details!

இன்று முதல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

RTE - 25% Application Form - Click here

குழந்தைக்களுக்கான இலவச மற்றும்  கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் - 2009-ன் படி ஆண்டுத்தோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தமிழக அரசு சார்பில் இணையதள வழியில் விண்ணப்பங்களை தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (22/04/2019) தொடங்குகிறது. இதற்கான இணையதள முகவரி : http://tnmatricschools.com/rte/rtehome.aspx , http://www.dge.tn.gov.in/  இதில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (Right To Education-2009) மூலம் குழந்தைகளை பள்ளியில் இலவசமாக சேர்க்கலாம்.

அதே போல் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் , சீருடைகள் , பேருந்து வசதி உட்பட அனைத்தும் LKG முதல் 8th வகுப்பு வரை முற்றிலும் இலவசமாகும். எந்தவித கல்வி கட்டணத்தையும் குழந்தைகளின் பெற்றோர்கள் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18/05/2019. இதற்கென தமிழக அரசுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
2. குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
3. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
4. குழந்தையின் ஆதார் அட்டை.
5. குழந்தையின் சாதி சான்றிதழ்.
6. தந்தையின் வருமான சான்றிதழ்.
7. தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை.
8. குழந்தையின் இருப்பிட சான்றிதழ்.


தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் கட்டாயம் 25% இட ஒதுக்கீட்டை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் இல்லத்தில் இருந்து சுமார் 1KM முதல் 3KM வரை உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

B.E பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!


Sunday, April 21, 2019

Flash News : BE - பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தக் கலந்தாய்வு 2017-18 கல்வியாண்டு வரை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பெற்றோருடன் சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களைப் போக்கும் வகையில், கடந்த கல்வியாண்டில் ஆன்-லைன் பி.இ., கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.



இந்த புதிய நடைமுறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்த படியே, கலந்தாய்வில் பங்கேற்கும் வசதி ஏற்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் குறிப்பிட்ட நாளில், வீட்டுக்கு அருகில் இருக்கும் கலந்தாய்வு உதவி மையத்துக்கு மாணவர் சென்றால் போதும் என்ற நிலை உருவானது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அதிவேக வலைதள வசதியுடன் அமைக்கப்பட்டன. இந்தச் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற சூரப்பா, பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.



உயர் கல்வித் துறைச் செயலர் உள்பட பலரின் கார்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பெட்ரோல் நிரப்பப்படுவதை ரத்து செய்தது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை ரத்து செய்தது என பல்வேறு அதிரடி  நடவடிக்கைகளை சூரப்பா எடுத்தார். இது பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், பி.இ., கலந்தாய்வை நடத்தும் கலந்தாய்வுக் குழுவில் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தனைச் சேர்த்தும், மேலும் சில அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தும் உயர் கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



இந்த உத்தரவு, பி.இ., கலந்தாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் தனக்குத் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாக துணைவேந்தர் சூரப்பா புகார் தெரிவித்ததோடு, குழுவின் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக 2019-20 கல்வியாண்டுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.இ. கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைத்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தும் உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.



இதன் காரணமாக 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 42 கலந்தாய்வு உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே 31ம் தேதி கடைசி நாளாகும். 

Wednesday, April 17, 2019

ஏப். 19ல் பிளஸ் 2 ரிசல்ட்; அரசு தேர்வு துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஏப். 19ம் தேதி காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு: நாளை மறுநாள் காலை, 9:30 மணிக்கு, அரசு தேர்வுத்துறை இணையதளத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, 20ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, தங்கள் பள்ளிக்கு சென்று, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தனி தேர்வர்கள், வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தங்கள் பள்ளிகள் வழியாகவும், தனி தேர்வர்கள், தேர்வு மையங்கள் வழியாகவும், வரும், 22 முதல், 24 வரை விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் வேண்டுமா அல்லது மதிப்பெண்ணை மட்டும், மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை, தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டுமென்றால், கட்டாயம் விடைத்தாள் நகல் பெற வேண்டும். 

மறுமதிப்பீடுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் கேட்பவர்கள் மட்டும், தற்போது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. அவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப்பட்ட பின், மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் கட்டணம் உண்டு. மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் பள்ளியில், இந்த கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும். 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த சீட்டில் உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில், மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். விடைத்தாள் நகல் வெளியிடும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.

தேர்வு முடிவுக்கானஇணையதளங்கள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.inwww.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய, மூன்று இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண்களுடன் முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும், தங்களின் பள்ளிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள், ஏற்கனவே வழங்கிய, மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன், 6 முதல், 13 வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.

Tuesday, April 16, 2019

Indian Army 130th TGC Jan 2020 – Apply Online for 40 Vacancies

Name of the Post  : Indian Army 130th TGC Jan 2020 Online Form
Post Date               : 13-04-2019
Total Vacancy        : 40

Brief Information: Indian Army has given a notification for unmarried Male Engineering Graduates for 130th Technical Graduate Course (commencing in Jan 2020 at Indian Military Academy (IMA), Dehradun) for permanent commission in the Indian Army. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

Indian Army
  130th Technical Graduate Course (TGC-130) – Jan 2020
Important Dates
  • Starting Date to Apply Online: 10-04-2019 at 12:00 Hrs
  • Closing Date to Apply Online: 09-05-2019 at 12:00 Hrs
Age Limit (as on 01-01-2020)
  • Minimum: 20 Years
  • Maximum Age: 27 Years
  • Candidates born between 02 Jan 1993 and 01 Jan 2000, both dates inclusive
  • Age relaxation is applicable as per rules.
Qualification
  • Candidates should have Engineering Degree course or in the final year of Engineering Degree course. 
Vacancy Details
130th Technical Graduate Course (TGC-130) – Jan 2020
Name of Engg StreamTotal
Civil10
Architecture01
 Mechanical06
 Electrical/ Electrical & Electronics06
Computer Sc & Engg/ Computer Technology/ Info Tech/ M. Sc Computer Science08
Electronics & Telecom/ Telecommunication/ Electronics & Comn/ Satellite Communication05
Electronics01
Metallurgical01
Electronics & Instrumentation/ Instrumentation01
Micro Electronics and Microwave01
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Apply OnlineRegistration | Login
NotificationClick here
Official WebsiteClick here