திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, April 22, 2019

வேளாண்துறை படிப்புக்கு ஜீலை 1ல் நுழைவுத்தேர்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


வேளாண் படிப்புக்கு ஜூலை 1ல் அகில இந்திய நுழைவு தேர்வு

கோவை: வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, வரும், ஜூலை, 1ல் நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பை தமிழக மாணவர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.வேளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, கடந்தாண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வாயிலாக நடத்தப்பட்டது. நடப்பாண்டு முதல், தேசிய நுழைவுத்தேர்வுகள் ஒருங்கிணைப்பு ஆணையமான, என்.டி.ஏ.,விடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏப்., 1 முதல் 30ம் தேதி வரை, ஆன்லை' மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம், 700 ரூபாய். எஸ்.சி.,- எஸ்.டி., - திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, 350 ரூபாய்.விண்ணப்பங்களில் பிழைகளை திருத்த, மே 7 முதல், 14 வரை, வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும்போது, இ--மெயில்&' மற்றும் தொலைபேசி எண்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும்; இவற்றின்வாயிலாகவே மாணவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.வேளாண் படிப்பிற்கு, ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆனால், தமிழக மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிற மாநில மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவதாக, வேளாண் பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் அவசியம் எழுத வேண்டும். மாதம், 3,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கலாம். நாடு முழுவதும், 75 வேளாண் பல்கலைகள் உள்ளன.பல்கலையின் மொத்த இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

வேளாண் படிப்பில் சேர திட்டமிட்டுள்ள தகுதியான மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதலாம்.விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விபரங்களை, www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment