உலக காற்று மாசுபாட்டை கட்டுபடுத்தினால், ஆண்டுக்கு பல கோடி உயிர்களை காப்பாற்ற முடியும். இந்தியா, சீனா மற்றும் ஆப்ரிக்கா உட்பட சர்வதேச அளவில் 30 லட்சம் சிசு உயிரிழப்பையும் தடுக்க முடியும்.
நாம் பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் எரிபொருட்களே, பருவநிலை மாற்றம் மற்றும் சர்வதேச அளவில் 65 சதவீத சிசு மரணத்திற்கு காரணமாக அமைகிறது என்று ஜெர்மனியைச் சேர்ந்த ‘தி மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் ’ கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் காற்று மாசுபாடு மனிதர்களின் இருதய மற்றும் சுவாசக் கோளாறு சம்பந்தமான நோய்களை அதிகரிக்கச் செய்வதோடு, புவி வெப்பமயமாதலுக்கும், கடல் நீர் ஆவியாதலுக்கும் காரணமாக அமைகிறது. எனவே, காற்று மாசுபாட்டை குறைப்பது, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாது, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் உகந்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment