பள்ளி திறந்த பின் கவுன்சிலிங்!
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், நடப்பாண்டும் ஆசிரியர் கவுன்சிலிங் பள்ளி திறந்த பின் நடக்குமென தெரிகிறது. இதனால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர், பணி மாறுதல் பெற, ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறுவது வழக்கம்
ஆசிரியர் மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம், பட்டதாரி, முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் இட மாறுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் கவுன்சிலிங் நடக்கும்
ஆசிரியர் இடமாறுதலுக்கு வழிவகையாக அமைவதால், கவுன்சிலிங்கை ஆசிரியர்கள் ஒரு மாத ' திருவிழா ' வாக கருதுகின்றனர். எதிர்பார்த்து காத்திருப்பவருக்கு தங்களுக்கான இடம் கிடைக்காமல் போவதும், வேண்டா வெறுப்பாக சிலருக்கு இடம் மாற்றம் கிடைப்பதும் ஒவ்வொரு கவுன்சிலிங்கிலும் வாடிக்கையாக உள்ளது.வழக்கமாக, மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படும்*
கடந்தாண்டு முதன் முறையாக பிளஸ் 1 பொதுத்தேர்வு என்பதுடன், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மே இரண்டாவது வாரம் வரை நடந்ததால், கவுன்சிலிங் தேதி கோடை விடுமுறை நிறைவு பெறும் வரை அறிவிக்கவில்லை.தேர்வு முடிவு வெளியீடு, அட்மிஷன், பள்ளி திறப்பு என தொடர்ந்து கவுன்சிலிங் தள்ளி போனது
நடப்பாண்டு லோக்சபா தேர்தலால் முன்கூட்டியே பொதுத்தேர்வு, அனைத்து வகுப்புக்கான ஆண்டுத்தேர்வுகள்நடத்தி முடிக்கப்பட்டன
ஏப்ரல், 13 ம் தேதி முதல், மே, 31 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல், 18ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும், மே, 23 தான் தேர்தல் முடிவு என்பதால், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படாமல் உள்ளது*
இதனால், நடப்பாண்டுக்கான கவுன்சிலிங் மே மாதம் நடக்குமா என்ற கேள்வி ஆசிரியர் மத்தியில் எழுந்துள்ளது.தேர்தல் முடிவுக்கு முன் வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment