திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, May 31, 2019

RAILWAY RECRUITMENT CELL RECRUIT CONTRACT BASIS Executive Assistants & Digital Office Assistants





Official Website : http://rrcmas.in/
Click here to apply           :  https://iroams.com/RRCSteno/applicationIndex

பள்ளி திறக்கும் நாள் அன்றே உறுதி.! பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு.? மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.!

பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறை முடிந்து 2019-20-ம் கல்வியாண்டில் ஜூன் 3-ந்தேதி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும். இந்த சூழலில் ஜூன் 3-ந்தேதியன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது பள்ளி வளாகம் தூய்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும் கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளி வளாகத்தினை தயார்படுத்திடுமாறு உரிய அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* 3.6.2019 அன்று அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

* பள்ளி திறப்பதற்கு முன் தினம் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* அனைத்து பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை பள்ளி திறக்கும் முன் தினமே உறுதி செய்து கொள்ள வேண்டும். கழிப்பறைகளில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதனை சரி செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும்.

* பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது அவர்களை அன்புடன் வரவேற்று நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவை அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட வேண்டும்.

* பேருந்து பயண அட்ைட தேவைப்படும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் காலதாமதமின்றி பேருந்து பயண அட்டைகள் பெற்றுத் தருவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் ெதாட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரித்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

* பள்ளி மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கித் தரும் பொருட்டு வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் மின் விசிறி, மின் விளக்கு மற்றும் மின் இணைப்பு ஏதேனும் இருப்பின் அவற்றை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.

* பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர்மின்னழுத்த மின் கம்பிகள், மின் கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல் புதர்கள், குழிகள் போன்றவை பள்ளி வளாகத்தில் இருந்தால் அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 29, 2019

LIC ADO Recruitment 2019 – Apply Online for 8581 Various Vacancies

Name of the Post       : LIC Apprentice Development Officer Online Form 2019

Post Date                    20-05-2019

Total Vacancy             : 8581


Brief Information: Life Insurance Corporation of India (LIC) has published notification for the recruitment of Apprentice Development Officer vacancies in Various Zones. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

Life Insurance Corporation of India
Apprentice Development Officer Vacancies 2019

Application Fee
  • For Others: Rs.600/- plus Transaction Charges
  • For SC/ST/PWD candidates: Rs. 50/- plus Transaction Charges
  • Payment Mode (Online): Debit/ Credit Card, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets.
Important Dates
  • Starting Date for Apply Online & Payment of Fee: 20-05-2019
  • Last Date to Apply Online & Payment of Fee: 09-06-2019
  • Last Date for Editing Application Details: 09-06-2019
  • Last Date for Printing Your Application: 24-06-2019
  • Date for Download of Online Exam Call Letter: 29-06-2019 On wards
  • Dates of Online Examination-Preliminary (Tentative): 06 & 13-07-2019 
  • Dates of Online Examination-Main (Tentative): 10-08-2019
Age Limit (as on 01-05-2019)
  • Minimum Age: 21 Years
  • Maximum Age: 30 Years
  • Age relaxation is admissible for SC/ST/OBC/ PH/ Ex-servicemen candidates as per rules.
Educational Qualification
  • Candidates should possess Bachelors Degree from a recognised University.
Vacancy Details
Apprentice Development Officer
Sl NoZonal NameTotal
1Central Zonal Office, Bhopal525
2Eastern Zonal Office, Kolkata922
3East Central Zonal Office, Patna701
4South Central Zonal Office, Hyderabad1251
5Northern Zonal Office, New Delhi1130
6North Central Zonal Office, Kanpur1042
7Southern Zonal Office, Chennai1257
8Western Zonal Office, Mumbai1753
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Apply OnlineRegistrationLogin

Tuesday, May 28, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: ஆன்லைனில் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்:

ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புநிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன்இணைந்து அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதைத் தவிர, கரூரில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு  தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு நிலவரப்படி பெருந்துறை கல்லூரியையும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. மீதமுள்ளவை தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிய கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது. அதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மொத்தம் உள்ள 3,350 இடங்களுக்கான கலந்தாய்வை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களுக்கும், தேர்வுக் குழுவினருக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின்ஜோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இதுவரை ஒற்றைச் சாளர முறையே பின்பற்றுப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை மாற்றி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டது.

அதன் தொடக்கமாக இணையதளங்களின் வாயிலாகவே முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது.கடந்த மாதம் நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வினை ஆன்லைன் முறையில்நடத்தவே முயற்சி செய்தோம். ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.

அதேவேளையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைன் வாயிலாக நடத்த தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான சோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பொறியியல் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உறுதுணையுடன் அப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே, நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்றார் அவர்.

Sunday, May 26, 2019

புதிய பாடப்புத்தகம் - ஆசிரியர்களுக்கு ஜூன் 2 வது வாரத்தில் பயிற்சி !


தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு ஜூன் 2 வது வாரத்தில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளி கல்வி பாட திட்டத்தை 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் மாற்றியமைக்கும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி கடந்த கல்வியாண்டு தொடக்கத்தில் முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.  அந்தந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகள் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்கி நடத்தப்பட்டது. 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அப்போது பயிற்சி அளிக்கப்பட்டது. பகுதி வாரியாக மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளிகளில் வகுப்புகள் ஜூன் மாதமே தொடங்கப்பட்ட நிலையில் பயிற்சி ஜூலையில் நடத்தப்பட்டதால் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில் வரும் 2019-2020ம் கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் இந்த பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

புதிய பாட திட்டத்தின்படி கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், புதிய பாட புத்தகங்கள் குறித்து கருத்தாக்க பயிற்சியை மாவட்ட கருத்தாளர்களை கொண்டு ஆசிரியர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களை கொண்டு ஜூன் மாதம் 2 வது வாரத்தில் 10, 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இதற்காக உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியும் ஆசிரியர்கள் பாட வாரியாக ஒரு பாடத்திற்கு மூன்று பேர் வீதம் மாவட்ட கருத்தாளர்களாக செயல்பட தகுந்த வகையில் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

TRB TET Hall Ticket 2019


Saturday, May 25, 2019

வேளாண்மையில் டிப்ளமா படிப்பு

வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாணமை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
படிப்பு காலம்: 2 ஆண்டுகள்

மொத்த இடங்கள்: வேளாண் பட்டயப்படிப்பிற்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 290 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 460 இடங்களும் உள்ளன. தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கு உறுப்புக் கல்லூரியில் 40 இடங்களும்,  இணைப்புக் கல்லூரியில் 70 இடங்களும் உள்ளன. 

தகுதி: 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnau.ac.in எனும் பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்துடன் பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 28

பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜூலை 3

விபரங்களுக்கு: www.tnau.ac.in , 0422 - 6611345 / 6611346  அல்லது ugadmissions@tnau.ac.in 

Sunday, May 19, 2019

இலவச, 'லேப் டாப்'கள் விற்கப்பட்டதா? விபரம் கேட்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு வழங்கிய இலவச, 'லேப் டாப்'களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா; விற்று விட்டனரா' என, கணக்கெடுக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

     தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 14 வகையான நலத்திட்ட உதவிகளை, தமிழக அரசு வழங்குகிறது.அதில் ஒன்றாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவ - மாணவியர் மற்றும் பாலிடெக்னிக் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப் டாப் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு முடிந்த பிறகும், பாலிடெக்னிக்குகளில் செமஸ்டர் தேர்வு முடிந்த பின்பும், லேப் டாப்கள் வழங்கப்படுகின்றன. 

      இதன் வினியோகத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.லேப் டாப் பெறும் மாணவ - மாணவியரின் சுய விபரங்கள், ஆதார் எண், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தள சிறப்பு எண் போன்றவை பெறப்படுகின்றன.இந்த லேப் டாப்களை, மாணவர்களை தவிர, வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.எட்டு ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால், மாணவர்களுக்கு ஏதாவது பயன் கிடைத்துள்ளதா என்பதை, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, லேப் டாப் வாங்கிய மாணவர்களிடம், 15 வகையான தகவல்களை பெற, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

        மாணவர்களின் பெயர், பள்ளி விபரங்கள், லேப் டாப் வாங்கிய ஆண்டு, மாணவர் தற்போது படிக்கிறாரா, சுய தொழில் செய்கிறாரா, வேலை செய்கிறாரா என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது.பள்ளியில் எப்போது, லேப் டாப் வழங்கப்பட்டது; பள்ளியில் படிக்கும் போது வழங்கப்பட்டதா அல்லது படிப்பு முடிந்த பின் வழங்கப்பட்டதா என, கேட்கப்பட்டு உள்ளது.லேப் டாப்பை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா; படிப்புக்கு தேவையான சாப்ட்வேர் வழங்கப்பட்டதா; லேப் டாப்பில் உள்ள தகவல்கள் படிப்புக்கு பயன்பட்டதா என்பதையும், மாணவர்கள் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.ஓராண்டுக்குள், லேப் டாப்பில் பழுது ஏற்பட்டதா; மாணவர்கள் தற்போது லேப் டாப்பை வைத்துள்ளனரா; வேறு யாருக்கும் விற்று விட்டனரா அல்லது பழுதாகியுள்ளதா என்ற விபரங்களையும், பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Friday, May 17, 2019

சட்டக்கல்லூரி விண்ணப்பம் வினியோகம் துவங்கியது

சட்ட கல்லுாரிகளில் 2952 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் சென்னையில் சீர்மிகு சட்ட பள்ளியும், 10 அரசு கல்லுாரிகளும், இரண்டு தனியார் கல்லுாரிகளும் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் மூன்றாண்டு படிப்புக்கு 1541 இடங்களுக்கும் ஐந்தாண்டு படிப்புக்கு 1411 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

ஐந்தாண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது; வரும் 31ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மாணவர்கள் தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் அரசு சட்ட கல்லுாரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெறலாம்.மேலும் tndalu.ac.inஎன்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு ஜூன் 28 முதல் ஜூலை 26 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, May 9, 2019

Flash News : TET - தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு!


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பாதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்குமாறு  கடந்த மே 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க கூடாது என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத காரணத்தை கூறி, தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசின் சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின்படியும், கல்வி உரிமைச் சட்டத்தின்படியும், 2011 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2012, 2013, 2014, 2017ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்க மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியது. அதன் பின் காலக்கெடுவை நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஆசிரியர் தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tuesday, May 7, 2019

FACT Recruitment 2019 – Apply Online for 274 Asst Manager, Officer & Other Posts

Name of the Post     : FACT Various Vacancies Online Form 2019
Post Date                  : 01-05-2019
Latest Update           : 06-05-2019
Total Vacancy           : 274

Brief Information: Fertilisers And Chemicals Travancore Ltd (FACT) has announced a notification for the recruitment of Asst General Manager, Sr Manager, Asst Company Secretary, Medical Officer, Deputy Manager, Asst Manager, Officer, Management Trainee & Other vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

Fertilisers And Chemicals Travancore Ltd (FACT)
Advt.No.7/2019 
 Various Vacancies 2019
Application Fee
  • For S.No. 1 to 8: Rs. 1000/-
  • For S.No. 9 to 21: Rs. 500/-
  • For SC/ ST/ PWBD/ ES: Nil
  • Payment Mode: Online Payment
Important Dates
  • Starting Date to Apply Online: 06-05-2019
  • Last Date to Apply Online: 20-05-2019
Vacancy Details
S.NoPost NameTotalAge Limit (as on 01-04-2019)Qualification
1Asst General Manager0148 YDegree (Civil Engg.)
2Sr Manager1045 YDegree (Engg), Degree (Law), PG Degree/ Diploma with Relevant experience
3Asst Company Secretary01Graduation with 09 Years Experience
4Medical Officer0135 YMBBS with Relevant experience
5Deputy Manager0438 YCA/ CMA/ ICWAI with Relevant experience
6Asst Manager0835 Y
7Officer1335 Y/ 26 YB.Sc (Agriculture), PG Degree/ Diploma
8Management Trainee5126 Y/ 28 YDegree (Engg), B.Sc (Agriculture), PG Degree/ Diploma (Relevant Discipline)
9Technician7935 YDiploma (Engg), Degree (Relevant Discipline) with Relevant experience
10Draughtsman03Diploma (Relevant Engg Discipline) with 02 Years Relevant experience
11Craftsman2735 Y/ 38 Y10th Class, National trade Certificate (Relevant Trade) with Relevant experience
12Rigger Helper0835 Y10th Class with Relevant experience
13Heavy Equipment Operator0538 Y10th Class, Heavy Vehicle Driving Licence with Relevant experience
14Asst General1335 YGraduation (Relevant Discipline) with Computer Knowledge
15Asst Finance05Degree (Commerce)
16Depot Asst20Graduation (Relevant Discipline) with Knowledge of Local Language
17Data Processing Asst04Graduation with PG Diploma (Relevant Discipline)
18Stenographer10Graduation with Typing/ Equivalent Short Hand/ Diploma in Commercial Practice
19Sanitary Inspector0110th, Diploma (Sanitary Inspector course) with 05 years experience
20Nurse0610th, Diploma (Nursing) with 03 years experience
21Canteen Supervisor0410th, Diploma/ Catering Certificate with 05 years experience
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Apply OnlineClick here
NotificationClick here
Official WebsiteClick here

Monday, May 6, 2019

எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வுக்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!


எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு மே 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்புக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு தனி பொது நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தது. இதனால், மற்ற கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாணவர்களும் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில், உயர் கல்வித் துறையின் அறிவுரையை ஏற்று இதுவரை இருந்து வந்ததைப் போன்று அனைத்து கல்லூரி களுக்கும் சேர்த்து‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்துவ தாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா 3 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.இதைத்தொடர்ந்து, ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. அதோடு ஏற்கெனவே வெளியிட்டி ருந்த தனி நுழைவுத் தேர்வுக்கானஅறிவிப்பை ரத்து செய் துள்ளது.

தமிழ்நாடு ‘டான்செட்’ செய லாளர் வெளியிட்ட புதிய அறிவிப் பின்படி, எம்சிஏ படிப்புக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு ஜூன் 22-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12மணி வரையிலும், எம்பிஏ நுழைவுத் தேர்வு அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை4.30 மணி வரையிலும், எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் நடைபெறும்.

இதற்கான ஆன்லைன் பதிவு மே 8-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடையும்.மாணவர்கள் www.annauniv.edu/tancet2019 என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி விட வேண்டும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Sunday, May 5, 2019

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,880 தற்காலிக கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி!


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,880 தற்காலிக கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வி திட்டம் செயல்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட 1,880 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு 2019ம் ஆண்டு மார்ச் வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கருத்துரு அனுப்பியிருந்தார். அதுதொடர்பாக சில கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான ஊதியத்தை தர ஆணை வழங்கும்படி பள்ளிக்கல்வி இயக்குனர் அரசைக் கேட்டுள்ளார். அதையேற்று 1,880 தற்காலிக கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் 250 ஆக உயர்கிறது!


நெல்லை: மருத்துவக்கல்விக்கான சீட் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 150ல் இருந்து 250 ஆக வரும் கல்வியாண்டில் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 55 ஆண்டுகள் கடந்த பாரம்பரியம் மிக்கதாகும்.

    நாள்தோறும் ஆயிரக்கணக்கான தென்மாவட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். இங்குள்ள மருத்துவக்கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களும் உயர்கல்வி படிப்புகளும் உள்ளன. நர்சிங் பட்டய மற்றும் பல்வேறு மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு வசதிகளும் உள்ளன. விடுதி, ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

       இங்கு எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கையை 250ஆக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட மக்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வசதியும் மண்டல கேன்சர் மையம் வசதியும் வந்துள்ளது.இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துவருகிறது. இதனால் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள், பார்மசிஸ்டுகள் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகின்றன. மருத்துவக்கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தால் பயிற்சி டாக்டர்கள் மற்றும் நிரந்தர டாக்டர்கள் துறை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வசதிகளும் உயர வாய்ப்புள்ளது. 

   இதனால் மருத்துவக்கல்விக்கான சீட் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என மருத்துவமனை நிர்வாகமும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய மருத்துவக்குழு மருத்துவக்கல்லூரிக்கு கடந்த சில மாதங்களில் இரண்டுமுறை நேரில் வருகை தந்து எம்பிபிஎஸ் சீட் உயர்த்துவதற்காக வாய்ப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினர். பேராசிரியர்கள் எண்ணிக்கை, பரிசோதனை கூடம், வகுப்பறை வசதிகள், விடுதி, கூட்ட அரங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு சமர்பித்துள்ளனர்.

      தற்போது எம்எம்எசி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே 250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. எனவே நெல்லைக்கு 250 சீட் கிடைத்தால் தமிழகத்தில் அதிக மாணவர்கள் பயிலும் 3வது மருத்துவக்கல்லூரியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு பெறும். சீட் எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் தொடர் முயற்சியால் பிரகாசமாக இருப்பதால் 250 ‘சீட்’ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத்தெரிகிறது. இதுபோல் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியிலும் இந்த ஆண்டு 50 சீட் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Saturday, May 4, 2019

10th,11th,12th - Special Supplementary Exam June 2019 Time Table நடைபெற்று முடிந்த மார்ச் 2019 பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்து வருகைபுரியாதவர்கள் / தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜுன் 2019 - 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை.

CBSE பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு RTE 25% மூலமாக இலவச கல்வி வழங்க நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!


தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

விண்ணப்பதிவு தொடங்கிய ஏப்ரல் 22-ம் தேதி முதல் தற்போது வரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1.43 இடங்களுக்கு விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் மே 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் இலவச கட்டாய கல்வி வழங்க மத்திய அரசின் சட்டம் வழிவகுக்கிறது.

மேலும சி.பி.எஸ்.இ. பள்ளிகளை இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைக்கப்பட்ட உடன் அதிலும் விருப்பம் உள்ளவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நேரில் சென்றும், கல்வி அலுவலகம் மூலமாகவும், ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்றும், தனியார் பள்ளிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 25% ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க கட்டாய கல்வி சட்டம் வழிவகுக்கிறது.

TET தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் - கல்வித்துறை நடவடிக்கை!


டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக் கெடு முடிந்ததை அடுத்து, இதில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் ‘இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம்’, 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறுகிற மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே ஆசிரியராக பணியாற்றுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்ததால், தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற ஆசிரியர்களுக்கு 2016-ம் ஆண்டு வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்அந்த அவகாசம் 2019 மார்ச் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிந்துவிட்ட சூழலில், தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 28 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில், ‘தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மார்ச் மாதத்துடன் கெடு முடிந்துவிட்டது. தேர்ச்சிபெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்டவாரியாகதனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதனால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் பணியில் நீடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.இதுதவிர, அரசுப் பள்ளிகளில் சுமார் 500 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து இத்துறையைச் சார்ந்தவர்கள் கூறியதாவது:தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன்: கல்வி உரிமை சட்டப்படி ஆண்டுக்கு 2 முறை என 8 ஆண்டுகளில் 16 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 4 முறை மட்டுமே நடந்ததால், பல ஆசிரியர் களால் தேர்ச்சிபெற முடியவில்லை. கடைசியாக 2017-ல் டெட் தேர்வு நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் டெட் அறிவிப்பை தேர்வு வாரியம்வெளியிட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, ஆசிரியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதால் அவர்களது குடும்பங்கள் மன உளைச்சலில் தவிக்கின்றன. எனவே, டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

கருணை அடிப்படையில் விலக்கு

தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் நந்தகுமார்: உயர் நீதிமன்ற அறிவிப்பால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 26 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களின் வேலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டெட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற, ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.பல ஆசிரியர்கள் பள்ளிகளில் பல ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி பல மாணவர்களின் வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளனர். வகுப்பறையில் அவர்கள் ஒரே பாடத்தை நடத்திவிட்டு, தகுதித் தேர்வில் அனைத்து பாடங்களையும் எழுதும்போது சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இதை மனதில் வைத்தும், ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதியும் கருணை அடிப்படையில் டெட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்கவேண்டும். விரைவில் நடக்கவுள்ள டெட் தேர்வுவரையேனும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றனர்.

TET தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி துவக்கம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி துவங்கியுள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ல், அமலுக்கு வந்தது. இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பணியில் சேரும் ஆசிரியர்கள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், 2010 ஆகஸ்ட், 23ல் அறிவித்தது.

இந்த அறிவிப்பின்படி, 2010 ஆகஸ்டுக்கு பின், பணியில் சேர்ந்த, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதையடுத்து, தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதி தேர்ச்சி பெற கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச், 31ல், அவகாசம் முடிகிறது.

இடைப்பட்ட ஆண்டுகளில், நான்கு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டதாகவும், அதில், ஏராளமான ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், தமிழக அரசு பட்டியல் தயாரித்துள்ளது. முதற்கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 ஆசிரியர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்; அவர்களின், மார்ச் மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து, 1,500 ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்புமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. ஆசிரியர்களின் விளக்கத்துக்கு ஏற்ப, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

நல்ல கல்வியை கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்கள்


 என்று செய்யாறு அருகே அரசு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 

இந்த 100 சதவீத தேர்ச்சியை பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுவிழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட கல்வி அலுவலர் பி.பொய்யாமொழி, பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி முன்னிலை வகித்தனர். விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்ட குறுகிய காலத்தில், பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் நிஜ ஹீரோக்கள், ஹீரோயின்கள். 100 சதவீதம் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களை வணங்குகின்றேன். உங்களை வேலை வாங்காமலும், வேலைக்கு அனுப்பாமலும் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு தலை வணங்குகின்றேன். நான் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு இந்த ஊரும், இந்த பள்ளியும் தான் காரணம். நல்ல கல்வியை எனக்கு கொடுக்காமல் விட்டிருந்தால் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது.

நல்ல கல்வியை கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்களாக திகழ்கின்றார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக, நீதிபதிகளாக, ஏன் நல்ல அரசியல்வாதிகளாக கூட வரலாம். தமிழ்மொழியும், ஆங்கில அறிவும் நமது இரண்டு கண்களாகும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைவிட கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்று, தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றால் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்பு இருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளில் பங்கேற்று, எளிதில் வெற்றி பெற்று உயர்ந்த பதவியை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் தர வேண்டும் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களின் விவரம் மற்றும் கல்வி பயில்வது தொடர்பான விவரங்கள் அனைத்தும், அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் (இஎம்ஐஎஸ்) அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள்ளிக்கு மாற்றம், நீக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் அனைத்தும் இந்த இணையதளத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அரசு தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பராமரிக்கப்பட்டு, தேர்வு பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தொடக்க, இடைநிலை, மேல்நிலைக்கல்வி மாணவர்கள் இடமாறுதல் மற்றும் கல்வி நிறைவின்போது மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் இந்த ஆண்டு முதல் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். 

அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த நடைமுறையினை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களது மாற்றுச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்க இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கமாகும் மாணவர்களது மாற்றுச்சான்றிதழ் மென்நகலில் அலுவலக முத்திரை மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அசலாக வழங்க வேண்டும். 

எக்காரணம் கொண்டும் மென்நகலில் தலைமையாசிரியரின் கையொப்பமின்றி மாணவர்களுக்கு வழங்கக்கூடாது. இந்த நடைமுறைகளை நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளிலும் மாற்றுச் சான்றிதழ் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை சுற்றறிக்கை மூலம் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, May 3, 2019

வேளாண் படிப்பு விண்ணப்ப பதிவு 8ல் துவக்கம்

இளநிலை வேளாண் மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும், 8ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, 2019 -20ம் கல்வியாண்டில், 10 பட்டப்படிப்புகளை, 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லுாரிகள் மூலம் வழங்குகிறது. கடந்தாண்டு முதல் வேளாண் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால், இணையதள விண்ணப்ப முறையில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேளாண் பல்கலையின், www.tnau.ac.in/admission.html இணையதளத்தில், வரும், 8ம் தேதி முதல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்யலாம். ஜூன் 7ம் தேதி பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவு செய்த பின், விண்ணப்ப கட்டணத்தை இணையதள வங்கி அல்லது டெபிட், கிரெடிட் கார்டு வழியாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய, ஜூன், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 11 முதல், 13 வரை நடைபெறும். தரவரிசை பட்டியல், ஜூன் 20ல் வெளியிடப்படும். இளநிலை சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு, 0422 - 6611345 / 6611346 ஆகிய எண்களில் காலை, 9:00 மணி முதல், 5:00 மணி வரை, அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலம்.

அண்ணா பல்கலையின் தனி நுழைவு தேர்வு ரத்துமே

முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான, தனி நுழைவு தேர்வை ரத்து செய்வதாக, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங், மேலாண்மை கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் மாணவர்களை சேர்க்க, நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 

எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கு, &'டான்செட்&'என்ற பெயரில், தமிழக அரசு சார்பில், இந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. &'இந்த ஆண்டு, அண்ணா பல்கலையின் நேரடி மற்றும் உறுப்பு கல்லுாரிகளின், மாணவர் சேர்க்கைக்கு மட்டும், தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படும்&' என, அண்ணா பல்கலை பொறுப்பு பதிவாளர், குமார் அறிவித்தார்.

இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் நுழைவு தேர்வு மற்றும் தமிழக அரசின் நுழைவு தேர்வு என, இரண்டு தேர்வுகளை எழுதுவதால் சிக்கல் ஏற்படும் என, கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அண்ணா பல்கலையின், தனி நுழைவு தேர்வு அறிவிப்பு, ரத்து செய்யப்படுவதாக, துணை வேந்தர் சுரப்பா, நேற்று அறிவித்தார். ஆண்டுதோறும் நடத்தப்படுவது போல, தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வை மட்டுமே, அண்ணா பல்கலை நடத்தும் என, அவர் கூறியுள்ளார்.

ஆன்-லைனில் மேல்நிலை இரண்டாமாண்டு / மேல்நிலை முதலாமாண்டு ( +1 Arrear) துணைத் தேர்வு விண்ணப்பத்தொகை செலுத்துவதற்கான வழிமுறைகள்.


எம்.பில்., பிஎச்.டி. படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பி.தியாகராஜன் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திறந்த பல்கலைக் கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் முழுநேர, பகுதிநேர எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் ரெகுலர் முறை யில் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.பில். படிப்பில் தமிழ், வரலாறு, புவியியல், மேலாண்மையியல், இயற்பியல், உளவியல், சமூக வியல், மின்னணு ஊடகவியல், கல்வியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன.

 அத்துடன் பிஎச்.டி. படிப்பில் தமிழ், பண்டைய வரலாறு மற் றும் தொல்லியல், புவியியல், மேலாண்மையியல், இயற்பி யல், வேதியியல், விலங்கியல், கல்வியியல், மின்னணு ஊடகவி யல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன. யுஜிசி ஜெஆர்எப் (ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்) தகுதிபெற்ற வர்கள் யுஜிசி நிதியுதவியுடன் பிஎச்டி-யில் ஆய்வு மேற்கொள்ள லாம். 2019-ம் ஆண்டு ஜூலை பருவ எம்.பில்., பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கவுரையை பல் கலைக்கழகத்தின் இணையதளத் தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப் பிக்க கடைசி நாள் மே 29-ம் தேதி ஆகும்.

Thursday, May 2, 2019

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ள, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி துறை திட்டம்


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போல், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ள, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ல், அமலுக்கு வந்தது. இதன்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில், 2010ல், அறிவிப்பு வெளியானது. அதாவது, 2010க்கு பின், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்பவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என, மத்திய அரசு உத்தரவிட்டது

இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை, மத்திய அரசு நீட்டித்து வந்தது

இந்த அவகாசம், ஒன்பது ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டு, மார்ச், 31ல் முடிவுக்கு வந்தது.அதைத் தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய, சம்பள மானியத்தை நிறுத்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மார்ச்சுடன் பணி முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை, 'டிஸ்மிஸ்' செய்வது குறித்து, உரிய முடிவு எடுக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றமும், ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களை கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளது

மத்திய அரசின், கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்

எனவே, தகுதி பெறாத, மெட்ரிக் ஆசிரியர்களை, பணியில் நீட்டிக்க விடுவதா அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் வழங்குவதா என, அதிகாரிகள்ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மறுகூட்டலுக்கு மாணவர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியானது.

  இதையடுத்து வியாழக்கிழமை பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும்,  தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  மேலும் மே 6-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு...:
தேர்வர்கள், எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவிரும்புவோர்  மே 2-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மே 4-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும்,  தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வுமையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?: 
மறுகூட்டலுக்கு மொழிப்பாடத்துக்கு (பகுதி 1)- ரூ.305, ஆங்கிலப் பாடத்துக்கு (பகுதி- 2)- ரூ.305,  கணிதம்,  அறிவியல்,  சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205,  விருப்ப மொழிப் பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.  இந்தக் கட்டணத்தை பள்ளிகளிலும்,  தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வுமையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும். அப்போதுகொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.