தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
விண்ணப்பதிவு தொடங்கிய ஏப்ரல் 22-ம் தேதி முதல் தற்போது வரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1.43 இடங்களுக்கு விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் மே 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் இலவச கட்டாய கல்வி வழங்க மத்திய அரசின் சட்டம் வழிவகுக்கிறது.
மேலும சி.பி.எஸ்.இ. பள்ளிகளை இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைக்கப்பட்ட உடன் அதிலும் விருப்பம் உள்ளவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நேரில் சென்றும், கல்வி அலுவலகம் மூலமாகவும், ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்றும், தனியார் பள்ளிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 25% ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க கட்டாய கல்வி சட்டம் வழிவகுக்கிறது.
No comments:
Post a Comment