திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, May 25, 2019

வேளாண்மையில் டிப்ளமா படிப்பு

வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாணமை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
படிப்பு காலம்: 2 ஆண்டுகள்

மொத்த இடங்கள்: வேளாண் பட்டயப்படிப்பிற்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 290 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 460 இடங்களும் உள்ளன. தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கு உறுப்புக் கல்லூரியில் 40 இடங்களும்,  இணைப்புக் கல்லூரியில் 70 இடங்களும் உள்ளன. 

தகுதி: 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnau.ac.in எனும் பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்துடன் பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 28

பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜூலை 3

விபரங்களுக்கு: www.tnau.ac.in , 0422 - 6611345 / 6611346  அல்லது ugadmissions@tnau.ac.in 

No comments:

Post a Comment