திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, May 1, 2019

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவம் மற்றும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர மே 8 - ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்படிப்புகளுக்கு மே 8 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் மே 24-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படிப்புக்கான கலந்தாய்வு ஜீலை 9 ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜுலை 9 ஆம் தேதி பிவிஎஸ்ஸி & ஏஎச் (சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்பிரிவு), பிடெக் (சிறப்பு பிரிவு) கலந்தாய்வும், ஜுலை 10 ஆம் தேதி பிவிஎஸ்ஸி & ஏஎச் (கலையியற் பிரிவு) படிப்புகளுக்கு கலந்தாய்வும், உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜீலை 11 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளில் 360 இடங்களுக்கும், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு 40, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 40 இடங்களுக்கும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்பிடிப்பில் 20 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதர விவரங்களை www.tanuvas.ac.in  மற்றும் www2.tanuvas.ac.in இல் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment