முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான, தனி நுழைவு தேர்வை ரத்து செய்வதாக, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங், மேலாண்மை கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் மாணவர்களை சேர்க்க, நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கு, &'டான்செட்&'என்ற பெயரில், தமிழக அரசு சார்பில், இந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. &'இந்த ஆண்டு, அண்ணா பல்கலையின் நேரடி மற்றும் உறுப்பு கல்லுாரிகளின், மாணவர் சேர்க்கைக்கு மட்டும், தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படும்&' என, அண்ணா பல்கலை பொறுப்பு பதிவாளர், குமார் அறிவித்தார்.
இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் நுழைவு தேர்வு மற்றும் தமிழக அரசின் நுழைவு தேர்வு என, இரண்டு தேர்வுகளை எழுதுவதால் சிக்கல் ஏற்படும் என, கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, அண்ணா பல்கலையின், தனி நுழைவு தேர்வு அறிவிப்பு, ரத்து செய்யப்படுவதாக, துணை வேந்தர் சுரப்பா, நேற்று அறிவித்தார். ஆண்டுதோறும் நடத்தப்படுவது போல, தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வை மட்டுமே, அண்ணா பல்கலை நடத்தும் என, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment