திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Thursday, February 28, 2019
நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வினை மொத்தம் 8.87 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. வரும் 19-ஆம் தேதி வரை இந்தப் பொதுத்தேர்வு நடைபெறும்.இதனை மொத்தம் 7, 082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107மாணவ, மாணவிகள், பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்) 25,741 தனித்தேர்வர்கள், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள்) 1,144 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதவுள்ளனர்.இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள்; 4 லட்சத்து ஆயிரத்து 101 பேர் மாணவிகள் ஆவர்.
மேலும் இரு திருநங்கைகளும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ளனர்.150 புதிய தேர்வு மையங்கள்: சென்னை மாநகரில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 49 ஆயிரத்து 419 மாணவ, மாணவிகள் 158 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15,408 பேர் தேர்வெழுதவுள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 2,944 தேர்வு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 150 புதிய தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
சிறைவாசிகளுக்காக...
நிகழாண்டு வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று பிளஸ் 2 தேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 884 ஆகும்.தேர்வுக்காக சுமார் 44 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.பொதுத் தேர்வில் 2,400 மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம் உள்பட அவர்கள் கோரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
செல்லிடப்பேசிக்கு தடை:
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மைய வளாகத்துக்குள் செல்லிடப்பேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.தேர்வர்களின் செல்லிடப்பேசி பராமரிப்புக்குத்தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை:
பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டுஅறை அமைக்கப்பட்டுள்ளது.தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கட்டுப்பாட்டுஅறை செயல்படும்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்:
9385494105, 9385494115, 9385494120, 9385494125
Wednesday, February 27, 2019
வெளிநாடுகளில் பொறியியல் படிக்க விரும்புவோருக்கு, பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாடும், வெவ்வேறு விதமான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன. எனவே, வெளிநாட்டிற்கு சென்று பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், இவற்றைப் பற்றி அறிந்துகொண்டால், மிகுந்த நன்மையைப் பெறலாம்.
குறிப்பிட்ட நாடுகளில் வழங்கப்படும் சில வகையான உதவித்தொகை திட்டங்கள் பற்றிய விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.
HEINRICH BOLL SCHOLARSHIPS IN GERMANY FOR INTERNATIONAL STUDENTS
ஜெர்மனியிலுள்ள ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஹென்ரிக் போல் பவுண்டேஷன் என்ற அமைப்பால் இது வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், மொத்தம் 950 உதவித்தொகைகள், ஜெர்மனியை சேர்ந்தவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதில் 6ல் 5 பங்கு எண்ணிக்கையிலான உதவித்தொகைகள், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கும், 6ல் 1 பங்கு எண்ணிக்கையிலான உதவித்தொகைகள், பிஎச்.டி., படிப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.
மதிப்பு - முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 750 யூரோக்களும், பிஎச்.டி., மாணவர்களுக்கு மாதம் 1000 யூரோக்களும் வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: www.boell.de/scholarships/scholarships.html
GHENT SCHOLARSHIPS IN BELGIUM FOR DEVELOPING COUNTRIES
பெல்ஜியம் நாட்டின் கென்ட்(Ghent) பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கென்ட் பல்கலை இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
உதவித்தொகைகளின் மொத்த எண்ணிக்கை 10.
மதிப்பு - மாதத்திற்கு 1000 யூரோக்கள் மற்றும் வருடாந்திர கல்விக் கட்டணம் போன்றவை இதில் அடங்கும்.
MONBUKAGAKUSHO SCHOLARSHIP
இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள ஏதேனுமொரு ஜப்பானிய பல்கலையில் இளநிலைப் பட்டப் படிப்பு பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஜப்பானிய அரசின், கல்வி, கலாச்சார, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
மதிப்பு - மாதத்திற்கு 1 லட்சத்து 17 ஆயிரம் யென் மதிப்பைக் கொண்டது.
விபரங்களுக்கு: www.in.emb-japan.go.jp/Education/Technology_Student.html
THE IDB SCHOLARSHIP PROGRAMME
உறுப்பினரல்லாத நாடுகளின் முஸ்லீம் சமூகத்திலிருந்து, இளநிலைப் படிப்பை மேற்கொள்ள வரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முஸ்லீம் மேம்பாட்டு வங்கி இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
மதிப்பு - கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கை செலவினங்கள்.
விபரங்களுக்கு: www.isdb.org
FACULTY FOR THE FUTURE DOCTORAL FELLOWSHIPS FOR WOMEN IN SCIENCE
வளரும் நாடுகளிலிருந்து பிஎச்.டி., அல்லது போஸ்ட் டாக்டோரல் படிப்புகளுக்கு வரும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வாங்கப்படுகிறது.
Schlumberger பவுண்டேஷன் இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
மதிப்பு - சுமார் 25000 முதல் 50000 அமெரிக்க டாலர்கள் வரை.
விபரங்களுக்கு: www.facultyforthefuture.net.
வினாத்தாள் அனுப்ப போலீஸ் பாதுகாப்பு
சென்னை: பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. வினாத்தாள், லீக் ஆகாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 6 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச், 14ல் பொது தேர்வு துவங்க உள்ளது. தேர்வில், மாணவர்கள் விடை எழுத வேண்டிய முதன்மை விடை தாள்கள், மாணவர் விபரம் அடங்கிய முகப்பு தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. அரசு தேர்வு துறையில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் வினாத்தாள்கள், அங்கிருந்து, தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
வினாத்தாள்கள் எந்த வகையிலும், லீக் ஆகாமல் இருக்கும் வகையில், கல்வி அதிகாரிகளும், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல, வினாத்தாள் மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை
பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.
பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள், அடுத்த மாதம் நடக்கின்றன. பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வு துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேர்வுத்துறை இணை இயக்குநர், சேதுராம வர்மா விதித்துள்ள அந்தக் கட்டுப்பாடுகள், மாணவர்கள் ஹால் டிக்கெட்களின் பின்பக்கம் அச்சிடப்பட்டு உள்ளது.அதன் விபரம்:
பொது தேர்வில், ஹால் டிக்கெட் இல்லாமல் வந்தால், தேர்வு எழுத அனுமதிகிடையாது
மொபைல் போன், தொலை தொடர்பு மின்னணு சாதனங்களை, தேர்வு மையங்களுக்குள் எடுத்து வர அனுமதியில்லை
மாற்று திறனாளி மாணவர்களுக்கு,அரசின் விதிப்படி, உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன
தேர்வர்கள், தங்கள் விடைத்தாளில், ஸ்கெட்ச் பேனா மற்றும் கிரயான்ஸ்போன்ற, வண்ண பென்சில்கள் பயன்படுத்த அனுமதி இல்லை
தேர்வர்கள், 'பிட்' வைத்திருத்தல், பிற தேர்வர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை பரிமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை தேர்வு விதிகளை மீறும் செயல் தேர்வர்கள், தாங்கள் எழுதிய விடைகளை, தாங்களே அடித்தல் போன்ற நிகழ்வுகள், ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் கூடுதல் அவகாசம்
தேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில் தனது புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது.
பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை யுஜிசி அண்மையில் வெளியிட்டது.
அதில், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்திடம் உதவியாளரைக் கேட்கலாம் அல்லது சொந்த உதவியாளரை தாங்களே அழைத்து வரலாம்.அவ்வாறு அழைத்து வரப்படும் சொந்த உதவியாளர் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளியின் கல்வித் தகுதியைவிட ஒரு படி கீழே இருக்க வேண்டும்.தேர்வறைகளைப் பொருத்தவரை, மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக் கூடிய வகையில் அமைக்க வேண்டும். முடிந்தவரை இவர்களுக்கான தேர்வறை தரைத் தளத்தில் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
மேலும், தேர்வறையில் பேசும் கால்குலேட்டர், பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், பிரெய்லி அளவிடும் டேப் ஆகியவற்றை குறிப்பிட்டமாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகள் இடம்பெற்றிருந்தன.இது மாற்றுத்திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.ஆனால், தேர்வின்போது இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் கால அவகாசத்தை மாற்றி, ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிடங்கள் மட்டும் கூடுதலாக வழங்கும் வகையில் புதிய நடைமுறை இந்த புதிய வழிகாட்டுதலில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்த கூடுதல் கால அவகாசம் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.அதனடிப்படையில், வழிகாட்டுதலில் இடம்பெற்றிருந்த தேர்வுக்கான கூடுதல் கால அவகாசத்தில் தற்போது திருத்தம் மேற்கொண்டு யுஜிசி செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3 மணி நேரம் நடத்தப்படும் தேர்வில் உதவியாளரை பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாதஅனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரு மணி நேரம் கூடுதல் கால அவகாசம் அளிக்கலாம் என யுஜிசி அறிவித்துள்ளது. இது மாற்றுத் திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி மற்றும் இணையதள வசதி விரைவில் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரியில் திருவள்ளூர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம், பொன்னேரி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு, கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்துப் பேசியது:தமிழகத்தை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வித் துறைக்கு அவர், அதிக நிதி ஒதுக்கீடு செய்தார்.
தமிழகத்திலுள்ள பள்ளியில் பயிலும் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளன. 15 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதற்கான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதன்கிழமை (பிப். 27) தொடங்கி வைக்க உள்ளார்.மேலும், கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வி தொடங்கப்பட உள்ளது. அதன் மூலம் படிக்கும்போதே வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும். 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி மற்றும் இணையதள சேவை செய்து தரப்படும் என்றார் அவர்.முன்னதாக, பொன்னேரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்து, மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு அட்டைகளை அவர் வழங்கினார்.
விழாவுக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்379 பயனாளிகளுக்கு, ரூ. 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 570 -க்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். விழாவில் பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் புகழேந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு
மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையம் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறவும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறவும் நெட் தேர்வு நடத்தப்படுகிறது.இதில் கலை, அறிவியல் படிப்புகளை உள்ளடக்கிய 70-க்கும் அதிகமான படிப்புகளுக்கான நெட் தேர்வை இப்போது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.
அதுபோல, வேதி அறிவியல், பூலோகம், சுற்றுச்சூழல், கடல்சார் மற்றும் கோள்கள் சார்ந்த அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல், உயிர் அறிவியல் போன்ற படிப்புகளுக்கான நெட் தேர்வை சி.எஸ்.ஐ.ஆர். நடத்துகிறது.2019 ஆம் ஆண்டுக்கான இந்த சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.தேர்வுக் கட்டணத்தைப் பொருத்தவரை பொதுப்பிரிவினர் ரூ. 1000 செலுத்த வேண்டும். அதுபோல ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ. 500 என்றளவிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு.
லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்தல், தமிழகத்தில், ஏப்ரலில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பட்டியல்பொது தேர்தலின் போது, ஓட்டு பதிவுக்கான பணிகள், ஓட்டுஎண்ணிக்கை போன்றவற்றில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, மாவட்ட வாரியாக பெயர், பதவி விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கு, அ.தி.மு.க., தரப்பில், எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆசிரியர் சங்கங்களின் சில நிர்வாகிகளும், ஆசிரியர்களும்,தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன், எந்த முடிவும்எடுக்கவில்லை.தரவில்லைஇந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விபரங்களுடன், விண்ணப்பம் பெற, பள்ளி கல்வி துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு வாரமாக, மாவட்ட வாரியாக, பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தேர்தல் பணிக்கு விண்ணப்பம் அளிக்கவில்லை.இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம் :
இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்காத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.அவர்களிடம், தேர்தல் பணியை புறக்கணிப்பது ஏன் என்பதற்கு, உரிய பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, அவசர நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, முதற்கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியது அவர்களின் கடமை. கடமையை செய்யாமல், 'டிமிக்கி' கொடுத்தால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.பதவி உயர்வுகள் நிறுத்தம்பொது தேர்வு மற்றும் பொது தேர்தல் காரணமாக, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு, நாளை மறுநாள் துவங்க உள்ளது.
தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, நாடு முழுவதும், லோக்சபா தேர்தலும் நடக்க உள்ளது.இந்நிலையில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள, பதவி உயர்வுக்கான பட்டியல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த பின், பதவி உயர்வு நடவடிக்கைகளை துவக்க, பள்ளி கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tuesday, February 26, 2019
விமான நிலையத்தைப் போல எழில்மிகு தோற்றத்துடன் ஒரே வளாகத்தில் புறநகர், மாநகர், தனியார் ஆம்னி பஸ்களை இயக்கும் வசதி
சென்னை அருகே கிளாம்பாக்கத் தில் விமான நிலையத்தைப் போல உலகத் தரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் நவீன தொழில்நுட்பத்தில் பிரம் மாண்டமாக கட்டப்படுகிறது.
சென்னை மாநகர் மக்கள் தொகை 80 லட்சம். தினசரி வந்து செல்வோர் 20 லட்சம். மொத்தம் ஒரு கோடி பேரின் சாலை, குடிநீர் போன்ற அடிப் படைத் தேவைகளுடன் பொதுப் போக்குவரத்தையும் மேம்படுத்த வேண்டியதிருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் தெற்கு ஆசியாவிலே மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம் செயல்படுகிறது. அண்மையில் மாதவரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் திறக்கப் பட்டது.
அங்கிருந்து ஆந்திர மார்க்கமாகச் செல்லும் பேருந் துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில் ரூ.394 கோடியில் தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் புழங்கும் வகையில் விமான நிலையத்தின் தரத்துக்கு ஈடாக புதிய புறநகர் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது.
இதற்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். கோயம்பேட்டில் அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தனித்தனியாக பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனால், கிளாம்பாக்கத்தில் அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. எழில்மிகு தோற்றம் மட்டுமல்லாமல், அனைத்து வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுரஅடியில் நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித் தளங்கள், தரைதளம், முதல் தளம் என கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் அடித் தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் இரண்டாவது அடித்தளத்தில் 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் இருக்கும். தரைதளம் மற்றும் முதல்தளத்தில் பயணிகளுக்கான வசதிகளும் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட போக்குவரத்துப் பணி யாளர்களுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
தரைதளத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற் கான பகுதி, 49 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், 20 பயணச்சீட்டு வழங்குமிடங்கள், மருத்துவ மையம், மருத்துவமனை, தாய்ப் பால் ஊட்டும் அறை, ஏடிஎம் மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்களைக் கண்காணிக்கும் அறை, தரைதளத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண், பெண் கழிப் பறைகள், 34 சிறுநீர் கழிப்பிடம், 74 முகம் கழுவுமிடம் ஆகியன கட்டப்படுகின்றன.
முதல் தளத்தில் 100 ஆண்கள், 40 பெண்கள் தங்குமிடம், 340 ஓட்டுநர்கள் தங்குமிடம், 35 கடை கள், கழிப்பிடம் ஆகியன இடம் பெறுகின்றன. ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை முறையில் இந்த புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் மின்சாரம், சுகாதாரம், தீ தடுப்பு, காற்றோட்டம் ஆகிய வசதிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 14 ஏக்கரில் பேருந்துகள் நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. இந்த இடத்தில் ஒரேநேரத்தில் 130 அரசுப் பேருந்துகளும், 85 தனியார் ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்படும்.
இப்புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு மற்றும் நகரின் முக்கியமான பகுதிகளுக்குச் செல்ல வசதியாக 5 ஏக்கரில் மாநகரப் போக்குவரத்து நிலையமும் 3,500 மாநகரப் பேருந்துகள் வந்து செல்ல மேற்கூரையுடன்கூடிய நடைமேடையும் அமைக்கப் படுகிறது. மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையம் செல்ல லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள் வசதி செய்யப்படுகிறது. 18 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் எரிபொருள் நிரப்பும் நிலையம், புறக்காவல் நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின்நிலையம் என அனைத்து வசதிகளும் ஒருங்கே அமைக்கப்படுகிறது.
“இப்பேருந்து நிலையத்தை ஈரோடு ஒப்பந்ததாரர் அடுத்த 18 மாதங்களில் கட்டி முடிப்பார்” என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பேருந்து நிலைய வளாகத்தின் நான்கு புறமும் பசுமையான சூழல் ஏற்படுத்துவதுடன், இங்கிருந்து வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடை கிரகிக்கும் வகையில் ஏராளமான மரங்கள், செடிகள் நடப்படுகின்றன. பேருந்துகளை நிறுத்தி வைக்கவும் எதிர்கால மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் 15 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. “வண்டலூரில் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.150 கோடியில் தனியாக மேம்பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசனைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த சி.ஆர்.நாராயண ராவ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை உலகத் தரத்தில் வடிமைத்துக் கொடுத்திருப்பதாக அதன் நிறுவன இயக்குநர் சி.ஆர்.அரவிந்த் தெரிவித்தார். 6 லட்சத்து 40 ஆயிரம் சதுரஅடியில் நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித்தளங்கள், தரைதளம், முதல்தளம் என கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி
பொது தேர்வை முறைகேடின்றி நடத்தும் வகையில், 23 உயர் அதிகாரிகளுக்கு, மாவட்ட தேர்வு கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மார்ச், 6ல், பிளஸ் 1; மார்ச், 14ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வு துவங்க உள்ளது. இந்த தேர்வுகள், ஏப்., 29ல் முடிகின்றன.இந்நிலையில், தேர்வை முறைகேடின்றி நடத்தும் வகையில், கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக, இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் என, 23 உயர் அதிகாரிகளுக்கு, மண்டலம் மற்றும் மாவட்ட அளவில், தேர்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும், இன்றே அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, தேர்வுக்கான முன்னேற்பாட்டை கவனிக்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மற்றும் தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோர் உத்தரவிட்டுஉள்ளனர்.
அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர் துவக்கி வைத்தார்!
சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டத்தை ஆளுநர் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி இணைந்து இந்த காலை உணவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததது.
இதனையடுத்து சென்னையில் அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சென்னை மாநகராட்சி இணைந்து காலை உணவை வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிகழச்சியின் போது பேசிய ஆளுநர் பன்வாரிலால், மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மதிய உணவு திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து கல்வி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு தேர்வு
சென்னை: ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு தேர்வு, ஏப்ரல், 27ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பி.எஸ்சி., கேட்டரிங் படிப்பில் சேர்வதற்கு, தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு, ஓட்டல் மேலாண்மைக்கான தேசிய கவுன்சிலிங் சார்பில், ஏப்., 27ல் நடத்தப்பட உள்ளது.இந்த ஆண்டு, ஓட்டல் மேலாண்மை நுழைவுத் தேர்வை, கணினி முறையில், தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், மார்ச், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, ஓட்டல் மேலாண்மை கவுன்சில் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை , www.nta.ac.in மற்றும், www.ntanchm.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
Thursday, February 21, 2019
நெட் தேர்வு அறிவிப்பு உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான நெட் (NET) ஜூன் 2019 தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நெட் தேர்வு அறிவிப்பு உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான நெட் (NET) ஜூன் 2019 தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) எனப்படும் தேசிய தேர்வு அமைப்பு, உயர்கல்விக்கான தகுதித் தேர்வுகளை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. மத்திய மனிதவளத்துறையின் கீழ் செயல்படும் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
இந்த அமைப்பு பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி களுக்கு தகுதியானவர்களை நியமனம் செய்ய உதவும் தகுதித் தேர்வாக நெட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்துகிறது. தற்போது உதவி பேராசிரியர் பணிக்கும் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் கல்வி மற்றும் உதவித் தொகை பெற உதவும் ஜூன்-2019 நெட் தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.
அறிவியல் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ளலாம். கணினி அடிப்படையிலான இந்த தேர்வு வருகிற ஜூன் மாதம் 20,21 மற்றும் 24 முதல் 28-ந்தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு வருகிற மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது, மார்ச் 30-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஹால்டிக்கெட் மே 15-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்ய முடியும்.
தேர்வு முடிவுகள் ஜூலை 15-ந் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நெட் தேர்வுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் இணைய தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டு உள்ளது. விரிவான விவரங்களை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) எனப்படும் தேசிய தேர்வு அமைப்பு, உயர்கல்விக்கான தகுதித் தேர்வுகளை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. மத்திய மனிதவளத்துறையின் கீழ் செயல்படும் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
இந்த அமைப்பு பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி களுக்கு தகுதியானவர்களை நியமனம் செய்ய உதவும் தகுதித் தேர்வாக நெட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்துகிறது. தற்போது உதவி பேராசிரியர் பணிக்கும் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் கல்வி மற்றும் உதவித் தொகை பெற உதவும் ஜூன்-2019 நெட் தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.
அறிவியல் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ளலாம். கணினி அடிப்படையிலான இந்த தேர்வு வருகிற ஜூன் மாதம் 20,21 மற்றும் 24 முதல் 28-ந்தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு வருகிற மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது, மார்ச் 30-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஹால்டிக்கெட் மே 15-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்ய முடியும்.
தேர்வு முடிவுகள் ஜூலை 15-ந் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நெட் தேர்வுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் இணைய தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டு உள்ளது. விரிவான விவரங்களை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
10ம் வகுப்பு தனி தேர்வர் 25 முதல் ஹால் டிக்கெட்
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, வரும், 25ம் தேதி முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும்' என, தேர்வு துறை அறிவித்துள்ளது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தனி தேர்வர்களாக விண்ணப்பித்தவர்கள், தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் என, அனைவருக்கும், வரும், 25ம் தேதி முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், 25ம் தேதி, பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று, தேர்வு மைய கண்காணிப்பாளர் அல்லது தலைமை ஆசிரியரை அணுகி, செய்முறை தேர்வு தேதியை, தெரிந்து கொள்ள வேண்டும்.
செய்முறை பயிற்சி வகுப்புகள், எந்த பள்ளியில் நடந்ததோ, அதேபள்ளியிலேயே, செய்முறை தேர்வும் நடத்தப்படும்.வரும், 26 முதல், 28 வரையிலும், செய்முறை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்வில் பங்கேற்க அனுமதியில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம்
அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின் மென்திறன்மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல் போன்றவை தொடர்பாக, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, நேற்று முன்தினம், ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர், இ.பி.எஸ்., முன்னிலையில், உயர் கல்வித் துறை முதன்மை செயலர், மங்கத்ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குனர், ஜனகா புஷ்பநாதன் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ராஜு, அன்பழகன், உதயகுமார் பங்கேற்றனர்.
Wednesday, February 20, 2019
அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம்
அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை, அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் அனுப்பியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலை பள்ளிகளில், 1998ல், &'கம்ப்யூட்டர் சயின்ஸ்&' பாட பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பாடங்களை நடத்த, முதலில், &'டிப்ளமோ - கம்ப்யூட்டர் சயின்ஸ்&' படிப்பை முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்த பட்டதாரிகள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.தற்போது, 2,500 பேர் பணியாற்றும் நிலையில், காலியாக உள்ள, 814 இடங்களுக்கு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.இதற்கு, எம்.எஸ்சி., முதுநிலை படிப்புடன், பி.எட்., படிப்பு முடித்தவர்களை மட்டுமே நியமிக்க, முடிவு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில், &'கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடத்தில், 814 காலி இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வி துறையின், புதிய அரசாணையின் படி, தேர்வு நடத்தி, நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்&' என, கூறப்பட்டுள்ளது.
Tuesday, February 19, 2019
UPSC Recruitment 2019 – Apply Online for Civil Services Exam
Name of the Post : UPSC Civil Services (Prelims) Online Form 2019
Post Date : 19-02-2019
Total Vacancy : 896
Brief Information: Union Public Service Commission (UPSC) has published notification for the recruitment of Civil Service (Pre.) Exam 2019 vacancies on permanent basis. Those Candidates who are Interested to the following vacancy and completed all Eligibility Criteria can read the notification & apply online.
Union Public Service Commission (UPSC)
Advt No-04/2019-CSP
Civil Service (Prelims) Exam 2019
| |
Application Fee
| |
Important Dates
| |
Age Limit (as on 01-08-2019)
| |
Qualification
| |
Vacancy Details | |
Post Name | Total |
Civil Service (Prelims) Exam | 896 |
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online | |
Important Links | |
Apply Online | Part-I | Part-II |
Official Website | Click here |
கே.வி., பள்ளி, அட்மிஷன் மார்ச் 1ல் பதிவு துவக்கம்
சென்னை: கேந்திரிய வித்யாலயா எனப்படும், கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, மார்ச், 1ம் தேதி, &'ஆன்லைன்&' பதிவு துவங்குகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 1,199 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், தமிழகத்தில், 48 பள்ளிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 14 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, &'ஆன்லைன்&' விண்ணப்ப பதிவு, மார்ச், 1 காலை, 8:00 மணிக்கு துவங்க உள்ளது. மார்ச், 19 மாலை, 4:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வு செய்யப்படும் மாணவர் விபரம், மார்ச், 26ல் வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல், ஏப்., 9; மூன்றாவது பட்டியல், ஏப்., 23ல் வெளியாகும்.
ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர், மத்திய அரசு பணியில் உள்ளவர்கள், மாநில அரசு பணியில் உள்ளவர்கள், தேசிய அளவில், மத்திய அரசின் விருது பெற்றவர்களின் பிள்ளைகள் மற்றும் கே.வி., பள்ளிகளின் முன்னாள், இந்நாள் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும், தலா, 10 பேரை சிபாரிசு செய்யலாம். அவர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இதற்கான விதிமுறைகளை, kvsangathan.nic.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Saturday, February 16, 2019
Friday, February 15, 2019
FCI AG, Steno & Other Post Online Form 2019
FCI Various Post Recruitment 2019(Food Corporation of India)Post Name – Junior Engineer | Assistant Grade-II| Steno| Typist | |||||
Important Dates :Start Date – 23.February.2019Last Date of Application – 25.March.2019Admit Card – Before 15 days of the ExaminationExam Date – Available Soon | Application Fee:
General/OBC – Rs. 500/-
| ||||
Location :All Over India | Age Limit :(As on 01/01/2019)JE| AG-II (Hindi) – 28 yearsSteno| Typist – 25 yearsAG-III – 27 years | ||||
Apply OnlineLink Will be Available 23 February 2019 | |||||
Vacancy DetailsPost Name – Junior Engineer | Assistant Grade-II| Steno| TypistNumber of Posts – 4103 posts (Tentative)Zone, Post and Category wise vacancy detail –North Zone – 1999 posts• Junior Engineer (Civil) – 46 Posts• Junior Engineer (Electrical Mechanical Engineering) – 30 Posts• Steno Grade-II- 43 posts• AG-II(Hindi)- 22 posts• Typist (Hindi)- 16 posts• AG-II (General)- 256 posts• AG-III (Accounts)- 287 posts• AG-III (Technical)- 286 posts• AG-III (Depot)- 1013 postsSouth Zone – 540 posts• Junior Engineer (Civil) – 26 Posts• Junior Engineer (Electrical Mechanical Engineering) – 15 Posts• Steno Grade-II- 07 posts• AG-II(Hindi)- 15 posts• Typist (Hindi)- 03 posts• AG-II (General)- 159 posts• AG-III (Accounts)- 48 posts• AG-III (Technical)- 54 posts• AG-III (Depot)- 213 postsEast Zone – 538 posts• Junior Engineer (Civil) – 26 Posts• Junior Engineer (Electrical Mechanical Engineering) – 10 Posts• Steno Grade-II- 09 posts• AG-II(Hindi)- 03 posts• Typist (Hindi)- 12 posts• AG-II (General)- 106 posts• AG-III (Accounts)- 87 posts• AG-III (Technical)- 224 posts• AG-III (Depot)- 61 postsWest Zone – 735 posts• Junior Engineer (Civil) – 14 Posts• Junior Engineer (Electrical Mechanical Engineering) – 09 Posts• Steno Grade-II- 09 posts• AG-II(Hindi)- 04 posts• Typist (Hindi)- 04 posts• AG-II (General)- 124 posts• AG-III (Accounts)- 65 posts• AG-III (Technical)- 153 posts• AG-III (Depot)- 353 postsNE Zone – 291 posts• Junior Engineer (Civil) – 02 Posts• Junior Engineer (Electrical Mechanical Engineering) – 08 Posts• Steno Grade-II- 08 posts• AG-II(Hindi)- 01posts• Typist (Hindi)- 04 posts• AG-II (General)- 112 posts• AG-III (Accounts)- 22 posts• AG-III (Technical)- 03 posts• AG-III (Depot)- 131 postsPay Scale –
Junior Engineer – Rs. 11,100/- to Rs. 29,950/-
|
Subscribe to:
Posts (Atom)