திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, October 30, 2019

அடுத்த 24 மணி நேரதத்தில் உருவாகிறது மகா புயல் : 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரதத்தில் புயலாக மாறும் இதற்கு மகா ( MAHA ) என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருவனந்தபுரத்திற்கு தென்மேற்கே 220 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Tuesday, October 29, 2019

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

தினந்தோறும் நமது உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை எந்த வகையில் உணவில் சேர்க்கப்பட்டிருந்தாலும் ஒதுக்கி வைத்து விடுகிறோம் அல்லது தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் வெறும் நறுமணத்திற்காக மட்டும் நாம் கறிவேப்பிலையை உணவில் சேர்க்கவில்லை. அதன் சத்துக்களுக்காகவும் தான். 

அப்படி சேர்க்கப்படுகிற கறிவேப்பிலையை தினமும் பச்சையாக சமைக்காமல் அப்படியே சாப்பிட்டு வந்தால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று தெரியுமா?

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் 15 கறிவேப்பிலை இலைகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் தேவையற்ற கெட்டக் கொழுப்புகள் எல்லாக் கரைய ஆரம்பித்து விடும்.

வயிற்றை சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து தொப்பையை முழுவதுமாகவே குறைத்து விடும்.

கறிவேப்பிலையுடன் தினமும் ஒரு பேரீச்சம்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை நீங்கும். இப்படி சாப்பிட்டு வருவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும்.

இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

அடிக்கடி சளி, இருமல், ஆஸ்துமா கொண்டவர்கள் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் சளி வெளியேறி விடும்.

காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. 

வடமாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வது குறைந்து, வறண்ட வானிலை நிலவியது. சில இடங்களில் வெயில் கொளுத்தியது. தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 70 மிமீ மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா, குமரிக்கடல் ஒட்டிய பகுதியில் காற்றழுத்தம் நிலை கொண்டு இருப்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால், தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் மிதமான மழை பெய்யும். 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் 29, 30, 31ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 28, 2019

ஆகஸ்ட் மாதத்தில் 13 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகி இருப்பதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கான காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) பதிவு செய்து கொண்டவர்களின் அடிப்படையில் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.

2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக 1.49 கோடி புதிய ஊழியர்கள் இந்தக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இஎஸ்ஐசி, அதில் புதிதாக இணைபவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2019 ஆகஸ்ட் மாதம் வரையில் ஊழியர்கள் காப்பீட்டு திட்டத்தில் மொத்தமாக 2.97 கோடி புதிய ஊழியர்கள் இணைந்துள்ளனர். அதேபோல், செப்டம்பர் 2017 முதல் 2018 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 83.35 லட்சம் ஊழியர்கள் அதில் இணைந்துள்ளனர்.ஊழியர்களின் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான, வருங்காலவைப்பு நிதி திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 11.71 லட்சமாக இருந்தது. 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 61.12 லட்சம் புதிய ஊழியர்கள்வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ளனர். 2017 செப்டம்பர் முதல் 2018 மார்ச் வரையில் 15.52 லட்சம் புதிய ஊழியர்கள் இதில் இணைந்துள்ளனர்.

2017 செப்டம்பர் முதல் 2019 ஆகஸ்ட் வரையில் மொத்தமாக2.75 கோடி புதிய ஊழியர்கள் இபிஎஃப் திட்டத்தில் இணைந்துள்ளனர். வெவ்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்தபுள்ளிவிவரங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதை துல்லியமான புள்ளிவிவரங்களாக கொள்ள முடியாது என்று தேதிய புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. மட்டுமல்லாமல், இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்ட துறைகளின்கீழ் உருவாகி வந்த வேலைவாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே இவற்றை வேலைவாய்ப்பு குறித்த முழுமையான தரவுகளாக கொள்ள முடியாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் ஜூலை மாதம் இருந்த எண்ணிக்கையை விட ஆகஸ்ட் மாதத்தில் புதிய வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.ஜூலை மாதத்தில் 14.49 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிய நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அவை 13 லட்சமாக குறைந்துள்ளன.

4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதால், அரசு ஊழியர்கள் தங்கள் விரும்பும் புதிய/பழைய மாவட்டத்தில் பணி மாறுதல் பெற விண்ணப்பங்கள் 5.11.2019 மாலை 5 மணிக்குள், வந்து சேர வேண்டும்- சுற்றறிக்கை வெளியீடு



Friday, October 25, 2019

ஒரே ஆடியோ; 2 நாளில் 2 ஆயிரம் ஆணை ரெடி'- சாட்டையைச் சுழற்றிய கலெக்டருக்குக் குவியும் பாராட்டு

     திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, அதிரடி காட்டுவதில் பெயர் போனவர். அதனாலேயே பயமின்றி மாவட்ட மக்கள் கலெக்டரிடம் நேரடியாகவும், வாட்ஸ் அப், மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கின்றனர். புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை எடுத்து அதிரடி காட்டுவார். இந்த அதிரடி நடவடிக்கையால் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கலெக்டரை கொண்டாடி வருகின்றனர்.

       சமீபத்தில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் வட்டார வளர்ச்சி தொடர்பாக வாட்ஸ் அப் ஆடியோ மூலம் அலுவலர்களை கண்டித்திருந்தார் கலெக்டர். அந்த ஆடியோவில், “ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாகச் செயல்படுத்துவது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. திங்கட்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம். ஒண்ணு நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா, இல்ல நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கணும். திங்கட்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கவில்லையென்றால் அன்னைக்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்டு செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

       நீங்கள் தவறு செய்வதைப் பார்த்துக்கொள்ள, நான் இங்கு உட்காரவில்லை. தப்பு செய்பவர்களுக்குக் காவல் காப்பவன் நான் இல்லை” என்று பேசியிருந்தார். இந்த வாட்ஸ் அப் ஆடியோவால், ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆடிப்போனார்கள். கலெக்டரின் எச்சரிக்கையை அடுத்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள், எனத் திருவண்ணாமலை ஊரக வளர்ச்சித்துறையே இரண்டு நாள்களாக இரவு பகல் பாராமல் அலுவலகத்திலேயே தங்கி வேலை பார்த்து, 2000 பயனாளர்களுக்கு வீடுகட்டும் ஆணையைத் தயார் செய்து சம்பந்தப்பட்ட பயனாளர்களிடம் ஒப்படைக்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

           இதுகுறித்து மாவட்ட மக்களிடம் பேசினோம். “கலெக்டர் சார் இந்த மாவட்டத்துக்கு வந்ததிலிருந்து மக்களுக்கான பணியை நேரடியாக இறங்கிச் செய்கிறார். மாவட்ட மக்களிடம் எளிமையாகப் பழகுகிறார். எங்களைப் போன்று ஏழ்மையானவர்களின் வீட்டிற்கு வந்து எங்களோடு சரிசமமாக அமர்ந்து நாங்கள் சமைத்த உணவுகளைச் சாப்பிடுகிறார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்குப் பணம் இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்கிறார். பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகளுக்குப் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.

        புகார்களை போன் மூலம் தெரிவிக்க அழைத்தால் அவரே போன் எடுத்து குறைகளைக் கேட்டு அறிகிறார். சில சமயங்களில் போன் எடுக்கவில்லை என்றால், மீண்டும் அவரே அழைத்து குறைகளைக் கேட்கிறார். இப்படி பலவற்றை எங்களுக்குச் செய்கிறார்” என்றனர். மேலும் அவர்கள், “ 
கலெக்டருக்கு நாங்கள் முழு சப்போர்ட் அளித்து வருகின்றோம். கலெக்டருக்கு எதிராக அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். கலெக்டரை மாவட்டத்தை விட்டு அனுப்புவதற்குக் குறியாகவே செயல்படுகின்றனர். கலெக்டருக்கு ஆதரவாக நாங்கள் வீதிக்கு வந்து போராடத் தயாராக இருக்கின்றோம்” என்றனர்.

       இதுகுறித்து கலெக்டர் கந்தசாமியிடம் பேசினோம். ``என்னுடைய கடமையைச் செய்கிறேன் அவ்வளவுதான். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாகவும், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ஆணைகளை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் தொடர்ந்து எனக்குப் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையிலேயே நான் நடவடிக்கை எடுத்தேன். 2 நாள்களில், 2000 வீடுகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றால், அதிகாரிகள் பணியைச் சரியாகச் செய்திருந்தால் மாவட்டத்தில் குடிசை வீடுகளே இல்லாமல் செய்து இருக்கலாம்.

         அதிகாரிகள் தங்களது கடமையைச் சரியாகச் செய்தால், நான் ஏன் அவர்களைக் கேள்வி கேட்கப் போகிறேன். தற்போது ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் பணியில் தீவரம்காட்டி பணிகளைச் செய்து முடிக்கின்றனர். இது பாராட்டுக்குரியது என்பதால் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் தவறுகள் நடந்து புகார் வந்தால், நடவடிக்கை கண்டிப்பாக பாயும்” என்று முடித்துக்கொண்டார்.

Thursday, October 24, 2019

அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம் கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தகவல்


9.30 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு ரூ. 300 கோடியில் 2020 ஜனவரி முதல் எலக்ட்ரானிக் முறையில் மாற்றப்படும் ,''என, கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார்.

தேனியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

அரசின் அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் சமர்ப்பிக்கும் பணிகளை சுலபமாக முடிக்க மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வழக்கமாக சம்பள பில் தயாரித்து வங்கியில் பணம் பெற 15 நாட்கள் ஆகும்.இப்புதிய திட்டத்தில் காலையில் பில் சமர்ப்பித்தால் மாலையில் வங்கி கணக்கில் பணம் ஏறிவிடும். 

இத் திட்டம் முதற்கட்டமாக சென்னை, அரியலுார், சேலம், கரூர், மதுரை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இம்மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும்.மாநிலம் முழுவதும் 9.30 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டோம். இனி அவர்களின் பணிப்பதிவேடுகள் குறித்து ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டரில் தெரிந்து கொள்ளலாம். ஓய்வு பெறும் நாளிலே, பணப்பலன்களை தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரி முதல் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு, இனி எலக்ட்ரானிக் எஸ்.ஆர்., ஆக செயல்படும். இத் திட்டத்திற்காக ரூ.300 கோடி அரசு செலவிடுகிறது.'விப்ரோ' உள்ளிட்ட மூன்று தனியார் நிறுவனங்கள் 5 ஆண்டுகள் பராமரிக்கும். இதனால் அரசின் வரவு செலவு எளிதாகவும், வெளிப்படை தன்மையாகவும் செயல்படும், என்றார். 

அரசு பள்ளி ஆசிரியைக்கு அதே பள்ளியில் படிக்கும் மாணவன் கத்திக்குத்து - ஆசிரியை கவலைக்கிடம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மார்த்தாண்டம் அருகே உள்ளஆலஞ்சோலை என்ற பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்தஅரசு பள்ளி ஆசிரியை ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஆலஞ்சோலை அரசு பள்ளி ஆசிரியை மெர்லின் சைனி என்பவர் இன்று மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

மாணவன் கத்தியால் குத்தியால் படுகாயமடைந்த ஆசிரியை மெர்லின் சைனி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் விரைவில் அவர் குணமடைவார் என்றும் கூறப்படுகிறது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மாணவனை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Wednesday, October 23, 2019

மத்திய அரசு பணிக்கான SSC CGL தேர்வுகள் அறிவிப்பு! டிகிரி முடித்திருந்தால் போதும்..

SSC: எஸ்.எஸ்.சி தேர்வாணையம் SSC CGL Exam அறிவித்துள்ளது. SSC CGL Exam 2019 மற்றும் SSC CGL Exam Notification பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL தேர்வுகளை அறிவித்துள்ளது. SSC CGL Exam தேர்ச்சி பெற்றால், மத்திய அரசு வேலை ரெடி.!

இது தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.sscsr.gov.in ல் தேர்வு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மொத்தம் 34 விதமான பணிகளுக்குத் SSC CGL தேர்வுகள் நடைபெறுகிறது.

உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் போன்ற பல்வேறு விதமான பணிகளில் SSC CGL Exam தேர்ச்சிப் பெற்றால் சேரலாம். அசிஸ்டெண்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ. 1,51,100 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது.

SSC CGL Exam எழுத வயது வரம்பு:

SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பதவிக்கு ஏற்றார் போல் மாறுபடுகிறது. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு SSC CGL Exam எழுதுவதற்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

SSC CGL Exam கல்வித்தகுதி:

அசிஸ்டெண்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிஏ படிப்பு கூடுதல் தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல், இளநிலை புள்ளியியல் அலுவலர் பணிக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 12 வகுப்பில் கணித பாடம் அடங்கியிருக்க வேண்டும்.

SSC CGL தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப்பதிவு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கியுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி விண்ணப்பப்பதிவு முடிவடைகிறது. இதற்கான விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனிலோ, நேரடியாக வங்கியின் மூலமாகவோ செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்ளாகவும், வங்கியின் மூலமாக செலுத்துவோர், நவம்பர் 29 ஆம் தேதிக்குள்ளாகவும் செலுத்த வேண்டும். SSC CGL Exam 2019 முதல் நிலைத் தேர்வுகள் அடுத்த வருடம் மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் உள்ளது. தெற்கு மண்டல SSC க்கான அலுவல் முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, 2 nd Floor, EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai, Tamil Nadu-600006.

SSC CGL 2019 தேர்வு எழுதுவதற்க்கான முழுமையான கல்வித்தகுதி, பணி முறை, தேர்வு பாடத்திட்டம், கால அட்டவணை உள்ளிட்ட முழு விபரங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:

Staff Selection Commission Official Notification
 For SSC CGL 2019 Exam:

முக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்தது. 

(அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக்செய்யவும்) இதற்கு முன்பு முதல்நிலைத் தேர்வில் முதல் தாளில் இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக திறனறிவு பாடம் புகுத்தப்பட்டது. மேலும், நீக்கப்பட்ட மொழிப்பாடம் பொது அறிவு பகுதியுடன் இணைக்கப்பட்டது.


இதற்கு மொழி ஆர்வலர்கள், தேர்வர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, டி.என்.பி.எஸ்.சி தரப்பில் இருந்து, குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றியமைத்தற்கான காரணம் குறித்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த செய்தியை காண இங்கு க்ளிக் செய்யவும். இருப்பினும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்ய்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி நேற்று (அக்டோபர் 21) புதிதாக அறிவிக்கை ஒன்று வெளியிட்டது. அதன்படி, குரூப் 2 பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டத்தின் வினாத்தாள் மாதிரி இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வு அதாவது பிரிமலனரி தேர்வு:

முதல்நிலைத்தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட புதிய பாடத்தின்படியே தான் இருக்கும். இருப்பினும், எந்த பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் VIII, IX ஆகியவற்றில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும்.



முதன்மை தேர்வு (அ) மெயின் தேர்வு :

இதுவரையில் முதன்மை எழுத்துத் தேர்வானது ஒரே தேர்வாக, அதாவது ஒரே தாளாக இருந்து வந்தது. தற்போது அதனை தாள் 1, தாள் 2 என இரண்டாகப் பிரித்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தாள் 1 பட்டப்படிப்பில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தாள் 2 பட்டப்படிப்பு தரத்தில் உள்ளது. மிகமிக முக்கியமாகத் தாள் 1 ல் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தாள் 2 மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



TNPSC Group 2 New Syllabus தாள் 1:

தாள் 1 இல் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல் என்ற தலைப்பில் 2 கேள்விகளும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் என்ற தலைப்பில் 2 கேள்விகளும் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 4 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Group 2 New Syllabus தாள் 2:

தாள் 2 கேள்விகள் பட்டப்படிப்பு தரத்தில் கேட்கப்படும். மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடக்கும். சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், கடிதம் வரைதல் என மொத்தம் 5 தலைப்புகள் உள்ளது. ஒவ்வொன்றில் இருந்தும் 3 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 20 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 15 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைகிறது.

-தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!!


Direct recruitment for the post of Forest Watcher - For attention of Candidates


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும்!

வழக்குத் தொடுத்த ஆசிரியர்கள், கலந் தாய்வில் பங்கேற்க ஏதுவாக அவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை ('எமிஸ்') இணையதளத்தில் பதி வேற்ற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங் கேற்க ஏதுவாக அவர்களின் விவ ரங்களை கல்வி மேலாண்மை தக வல் முகமை ('எமிஸ்') இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதியில் வெளியாகும். கலந்தாய்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Monday, October 21, 2019

15 மாவட்டங்களுக்கு Orange Alert எச்சரிக்கை! மிக கனமழை பெய்யும்!

தமிழ்நாட்டில்  தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் தென்மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், கடலூர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தர்மபுரி, ஈரோடு,தேனி, கிருஷ்ணகிரிமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில்  மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் , திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. 


நாகர்கோவிலில் 8 செ.மீ., பெருஞ்சாணி அணையில் 7 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மகாராஷ்டிரா, கேரளா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரபிக்கடல் பகுதியில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thursday, October 17, 2019

ISRO Recruitment 2019 – Apply Online 327 Scientist/Engineer Posts



ISRO inviting the Scientist/Engineer job online applications from 15.10.2019 to 04.11.2019. The interested and eligible candidates can able to apply for this job easily. 
Do not miss the wonderful career opportunity in Indian Space Research Organisation. The detailed information on ISRO latest job notification 2019 has been given below. The job hunters are requested to read below the ISRO job selection process, eligibility, salary, age limit and applications fee in our Tamilan Jobs website. Aspirants stay tuned in this page for upcoming changes in ISRO Scientist/Engineer job 2019. For more accurate information on this ISRO job notification, check their official website https://www.isro.gov.in.

SRO Recruitment 2019 Notification Highlights

OrganizationIndian Space Research Organisation
Starting Date15.10.2019
Job typeCentral Government Jobs
Job LocationAll Over India
Vacancies327
Apply modeOnline
Official Websitehttps://www.isro.gov.in
Last Date04.11.2019

Indian Space Research Organisation (ISRO) Job Vacancy Details

Indian Space Research Organisation (ISRO) has released the following vacancy details with their recent recruitment. They give huge surprise to the candidates. They invites 327 Candidates to fill their vacancies. You can check their job vacancy details by below.
Total Vacancies: 327

ISRO Recruitment 2019 Detailed Vacancies

Indian Space Research Organisation requires following posts to fill their vacancies. Check the latest job vacancy details below ISRO 2019.
Post Code No.Name of PostNo. of Post
BE001Scientist/Engineer – SC (Electronics)131
BE002Scientist/Engineer -SC (Mechanical)135
BE003Scientist/Engineer-SC (Computer Science)58
BE008Scientist/Engineer-SC (Electronics) – Autonomous Body03
Total327

ISRO 327 Scientist/Engineer Eligibility Details

As per the recent Indian Space Research Organisation (ISRO) notification 2019, the eligibility details for the Scientist/Engineer job has given below. Its is very important to check you qualification for this opportunity. If you have less qualification, you may not able to apply for this career. Here below you can find age limit and educational qualification required for ISRO Scientist/Engineer job 2019.

ISRO Notification 2019 Educational Qualification

Candidates are requested to check their education qualification required for various Indian Space Research Organisation (ISRO) job opportunities.
BE/ B.Tech or equivalent in First Class with an aggregate minimum of 65% marks or CGPA 6.84/10

ISRO Scientist/Engineer Age limit

To apply Indian Space Research Organisation job, the candidates required to attain following age limit. The notified aged candidates only can able to apply for the job vacancy. check the age limit details below.
For Gen/ UR Candidates – 35 Years
Age Relaxations
  • SC/ST: 5 Yrs
  • OBC: 3 Yrs
  • Persons with Disabilities: 10 Yrs
  • SC/ST PWD: 15 Yrs
  • OBC PWD: 13 Yrs
For more reference kindly check the ISRO official notification 2019.

ISRO Application fees, Exam fees, Salary & Selection Process

Application Fees – Nil

As per the latest ISRO Notification 2019, there is no application fees to apply this 327 Scientist/Engineer job vacancy. So The candidates go for another step.

Salary details

Indian Space Research Organisation (ISRO) 327 Scientist/Engineer Job salary details has been given below. The candidates can check various salary information below.
Selected candidates will be appointed as Scientist/Engineer ‘SC’ in Level 10 of Pay Matrix and will be paid minimum basic pay of Rs. 56,100/- p.m. In addition, Dearness Allowance [DA], House Rent Allowance [HRA] and Transport Allowance are payable as per extant rules on the subject. The employees will be governed by the New Pension Scheme. Further medical facilities for self and dependents, subsidised canteen, limited quarters facility (in lieu of HRA), Leave Travel Concession, Group Insurance, House Building Advance etc are admissible as per Central Government orders.

Selection Process

Indian Space Research Organisation (ISRO) may follow the following process to select the candidates. For Accurate information check the official website.
  1. Written exam
  2. Personal Interview
  3. Document Verification

How to apply for Indian Space Research Organisation (ISRO)  Recruitment for Scientist/Engineer Job?

Step 1: Visit ISRO official website – https://www.isro.gov.in
Step 2: Search for Scientist/Engineer notification link in careers/ Advertisements/ News page.
Step 3: Download or view the official notification in their official website itself.
Step 4: Check and verify your eligibility to ISRO Recruitment 2019. If you are not eligible for the job notification, ignore and leave space for others.
Step 5: Go through online application link “Apply Now”
Step 6: Create your registration on ISRO and Fill all correct details.
Step 7: Apply for the 327 Scientist/Engineer job by clicking apply button
Step 8: Upload your scanned copy of photo and signature to their application form
Step 9: Ensure the given details are correct and accurate.
Step 10: Submit the application
Step 11: Make the payment, if ISRO asks. Others wise ignore this step
Step 12: Take print your application form for future use.

Indian Space Research Organisation (ISRO) Important dates for Scientist/Engineer Vacancies

The following important dates need to be remembered by the Indian Space Research Organisation (ISRO) candidates.
Starting Date for Submission of Application15.10.2019
Last date for Submission of Application04.11.2019
Date of Examination12.01.2020

Download Indian Space Research Organisation (ISRO) official Notification 2019 and Online Apply

ISRO Notification 2019: click here!
ISRO Recruitment Apply Online: Click here!