திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, February 27, 2020

BEO பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க இயக்குநர் உத்தரவு!





ஆசிரியர்கள் தேவை!





Wearing of Photo Identity Cards compulsorily by all Government Servants - Instructions Published!


Sub: Ref: Public Services - Wearing of Photo Identity Cards compulsorily by all Government Servants - Instructions - reiterated - Regarding .

1. Government Order { Ms ).No.336 , Personnel and Administrative Reforms (Per - A ] 
    Department, Dated 26.03.1986.

2. Government Order ( Ms ).No.363, Personnel and Administrative Reforms ( A ) Department, 

     Dated 01.12.2004.

3. Government Letter No.3975/A/2005-1, Personnel and Administrative Reform ( A ) 

     Department, Dated 22.02.2005.

4. Government Letter No.47690/A2/2013-1, Personnel and Administrative Reforms ( A ) 

     Department, Dated 20.12.2013.

5. Government Letter No. 28939/A2/2017-1, Personnel and Administrative Reforms ( A ) 

     Department , Dated 05.09.2017.

6. Order of the High Court of Madras in W.P.No.15640 of 2018, Dated 16.07.2018. 

7. Letter No.20948/A2/2018-1, Personnel and Administrative Reforms ( A ) Department,        

     Dated 23.08.2018.

ஸ்கெட்ச் மற்றும் வண்ணப் பென்சில்கள் பயன்படுத்த தடை!

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஸ்கெட்ச் மற்றும் வண்ணப் பென்சில்கள் பயன்படுத்தக் கூடாது என தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு வருகிற மார்ச் 2ஆம் தேதி பொதுத் தேர்வு  தொடங்க உள்ளது. தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் மாணவர்களுக்கு தேர்வுத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, விடைத் தாளில் எந்தக் காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் வகையில் எந்த விஷயமும் இருக்க கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு அறையினுள் எடுத்து செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 26, 2020

பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி மின் விளக்குகளுக்கு தடை


அரசு மற்றும் தனியார்பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்டமின் விளக்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் , கலாச்சார விழாக்கள் நடத்தப்படுகிறது. அப்போது, நடன போட்டிக்கான மேடைகளில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்துவதால் மாணவ, மாணவிகளுக்கு கண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. 

 இந்த நிலையில் ,

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டிற்கான கல்வி ஆண்டு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிய உள்ளதால் தற்போதே பள்ளிகளில் ஆண்டு விழா தொடங்கி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு விழாவில் அதிகபடியான மின் வெளிச்சத்தால் மாணவர்களின் கண்கள் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் பள்ளிகளில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக்கள் நடைபெறும் போது, அதிக ஒளி கொண்ட அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. பரிந்துரைக்கப்பட்ட மின் சாதன அமைப்புகள் மட்டுமே அமைத்திடவேண்டும். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .

இந்த நடைமுறைகளை பின் பற்றாமல் விழாநடத்தி, பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நிர்வாகமுமே முழு பொறுப்பேற்க நேரிடும். எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டா ரக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு கவனத் துடன் விழாக்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் .

பள்ளி பொதுத்தேர்வு பணியில் ஊனமுற்ற , உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு விலக்கு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!


LIC Recruitment 2020 – Apply Online for 218 AE & AAO Posts

Name of the Post          : LIC AE & AAO Online Form 2020
Post Date                       : 25-02-2020
Total Vacancy                : 218

Brief Information: Life Insurance Corporation of India (LIC) has published notification for the recruitment of Assistant Engineer (AE) – Civil/ Electrical /Structural /MEP & Assistant Architect (AA) and Assistant Administrative Officer (AAO) Specialist vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.


Life Insurance Corporation of India (LIC)
AE & AAO Vacancies 2020
Application Fee
  • For Others: Rs.700/- (Application Fee-cum-Intimation Charges + Transaction Charges + GST) 
  • For SC/ST/PWD candidates: Rs.85/- (Intimation Charges + Transaction Charges + GST) 
  • Payment Mode: Through Online
Important Dates
  • Starting Date to Apply Online & Payment of Fee/ Intimation Charges: 25-02-2020
  • Last Date to Apply Online & Payment of Fee/  Intimation Charges: 15-03-2020
  • Last Date for Editing Application Details: 15-03-2020
  • Last Date for Printing Your Application: 30-03-2020
  • Date for Download of Call Letter for Online Preliminary Exam: 27-03-2020 to 04-04-2020
  • Tentative Date for Prelims Exam: 04-04-2020
Age Limit (as on 01-02-2020)
  • Minimum Age: 21 Years
  • Maximum Age: 30 Years
  • Age relaxation is admissible for SC/ST/OBC/ PWD/ ECO/ SSCO candidates as per rules.
Vacancy Details
Sl NoPost NameTotalQualification
1AE (Civil)29B.E/ B.Tech (Civil)
2AE (Electrical)10B.E/ B.Tech (Electrical)
3Assistant Architect04B. Arch
4AE (Structural)04M.Tech/ M.E (Structural)
5AE (MEP Engineer)03B. Tech/ B.E (Mechanical/ Electrical)
6AAO (Chartered Accountant)40Bachelor Degree & CA
7AAO (Actuarial)30Bachelor Degree (Any Discipline)
8AAO (Legal)40Bachelor Degree (Law)/ LLM
9AAO (Rajbhasha)08Master Degree (Hindi/ English)
10AAO (IT)50Degree (Engg)/  MCA or M.Sc(Computer Science)
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Apply Online Registration | Login
NotificationClick Here
Official WebsiteClick Here

இருபதுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மூடுவிழா?

TNEA Admission 2020: இந்த ஆண்டு இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் Engineering Admission 2020 நடைபெறாது என்று தெரிகிறது


பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்துக்கு விண்ணப்பிக்காததாதல், இந்தாண்டு இருபதுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நிறுத்தப் போவதாக தெரிகிறது.               

தமிழகத்தில் தற்போது சுமார் 533 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்து வெளியேறுகின்றனர். நல்ல மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குக்கூட சரியான வேலை கிடைக்காத சூழலே நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக இன்ஜினியரிங் கல்லூரிகள் மீதான மோகம் குறைந்து, மாணவர் சேர்க்கை கடுமையாக பாதித்தது.

இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில், 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தப்போவதாக தகவல்கள் வந்துள்ளது. பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, இன்ஜினியரிங் கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். அவ்வாறு இணைப்பு அந்தஸ்து பெற்றால் தான் மாணவர் சேர்க்கை நடத்த முடியும்.

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 ஆம் தேதியோ முடிவடைந்து விட்டது. தாமதக்கட்டணம் 25,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 21 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளது. மேலும், 10 கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கனவே அண்மைக்காலமாக பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது இணைப்பு அந்தஸ்து பெற விரும்பாததை வைத்து பார்க்கும் போது, 2020-21 கல்வியாண்டில் இருபதுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடுவிழா காணும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி!

Kalakshetra Montessori Recruitment 2020: கலாக்சேத்ரா பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு (Montessori Teacher), மாண்டிசோரி உதவியாளர் (Montessori Assistants) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation: சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்சேத்ரா பள்ளியில், மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் கலாக்சேத்ரா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் பெசன்ட் அருந்தைள் சீனியர் செகன்டரி பள்ளியில், மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3 காலியிடங்களும், மாண்டிசோரி உதவியாளர் பணிக்கு 4 காலியிடங்களும் நிரப்பப்படுகிறது.

Montessori Teachers:
மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பட்டப்படிப்பும் மாண்டிசோரியில் பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும். மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளது. மாண்டிசோரி ஆசிரியர் பதவிக்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.25,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Montessori Assistants:
மாண்டிசோரி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், மாண்டிசோரி அசிஸ்டெண்ட் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.13,000 முதல் ரூ.18,000 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.kalakshetra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Director,
Kalakshetra Foundation,
Thiruvanmiyur,
Chennai – 600 041.


Tuesday, February 25, 2020

Matric, CBSE பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை!

RTE Tamil Nadu Admission 2020: இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் சிபிஎஸ்இ பள்ளிகளையும் இணைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், சிபிஎஸ்சி பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில், ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கான கல்விக்கட்டணம் உள்ளிட்ட படிப்புச் செலவுகள் அனைத்தும் அரசே ஏற்கிறது.

இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறாத வகையைில், தனியார், மெட்ரிக் நர்சரி பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப்படவில்லை. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் தகுதியற்ற மாணவர்கள் இலவச கல்வி பெறும் சூழல் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

ஏற்கனவே, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று தமிழக அரசு கடந்தாண்டு தெரிவித்திருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 655 சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை.

இதனிடையே சில சிபிஎஸ்இ பள்ளிகளில், 25 இடஒதுக்கீடு முறையில் ஏழை மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்படுகிறது. ஆனால், அம்மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் அரசு செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தினாலும், சீருடை, புத்தகங்கள் போன்ற பிற செலவுக்கான தொகை அரசு வழங்குவதில்லை. மேலும், தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகை சுமார் 600 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் சச்சின்: அரசுப் பள்ளியை மேம்படுத்த ஆதரவு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியை சச்சின் டெண்டுல்கர் பார்வையிட்டுள்ளார்.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உதவி புரிகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 50 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக பள்ளி வளாகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவினை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வருகை தந்து பார்வையிட்டார். முன்னதாக பூங்காவிற்கு சச்சின் டெண்டுல்கர் வருகை தந்தபோது ‘வெல்கம் சச்சின்’ என்று பதாகைகளை ஏந்தியவாறு முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ள ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் மாத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் புனிதாமேரி, வல்லம் பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை மற்றும் தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் KVS கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விரைவில் மாணவர் சேர்க்கை!

KVS Admission 2020: கேந்திரிய வித்யலாயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை இம்மாத இறுதியில் வெளியாகிறது.


மத்திய அரசின் KVS கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விரைவில் மாணவர் சேர்க்கை!

Kendriya Vidyalaya Sangathan (KVS) எனப்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை இம்மாத இறுதியில் https://kvsangathan.nic.in இணையதளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு நாடு முழுவதும் சுமார் 1,137 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அதிகம் விரும்புவர். எனவே, தனியார் பள்ளிகளைக் காட்டிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மவுசு அதிகமாக இருக்கும்.

10,12 ஆம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் தட்டுபாடு! மாணவர்கள் வேதனை!!
பொதுத்தேர்வுகள் வருவதால் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க வேண்டாம்! மாநகராட்சி அட்வைஸ்!!
அந்த வகையில், நடப்பு 2020-21 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கை பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பு நீங்களாக, 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பை பொறுத்தவரையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மாணவர் சேர்க்கைக்கான உத்தேச நாட்கள்:
மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியாகும் நாள்: பிப்ரவரி 2020 கடைசி வாரம்
1 ஆம் வகுப்பு விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: மார்ச் 2020 முதல் வாரம்
1 ஆம் வகுப்பு விண்ணப்பம் முடியும் நாள்: மார்ச் 3வது வாரம்
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியல், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள்: மார்ச்/ஏப்ரல்
2 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நடைபெறும் நாள்: ஏப்ரல் 1&2 வது வாரம்
2 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள்: ஏப்ரல் 2&3 வது வாரம்

ஆசிரியர் - மாணவர் விதிதாசாரம் சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

Admission 2020-21: ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை (Student Teacher Ratio) சரிபார்க்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.      

ஆசிரியர் - மாணவர் விதிதாசாரம் சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாசாரத்தை சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் சரியாக பின்பற்றவில்லை, கணிதம், அறிவியல் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருபதுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மூடுவிழா?

இதனைத் தொடர்ந்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படுள்ளது. அதில், மனிதவளத் துறை வரையறுக்கப்பட்ட மாணவர் – ஆசிரியர் விகிதாச்சாரம் எந்த அளவில் உள்ளது என்பதை ஆய்வு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் பிப். 25, 26 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். கூடவே, ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயப் பிரிவு கண்காணிப்பாளர், வட்டாரக் கல்வி அதிகாரிகள் தேவையான புள்ளி விவரங்களுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, February 23, 2020

பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கட்டடப் பணிகள் - நிலையான பராமரிப்பு விதிமுறைகள்- (Standard Operating Procedures - SOP) - பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம் - அனைத்து பள்ளிகளுக்கு நடவடிக்கைகாக அனுப்பி வைத்திட மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்தல் - நடவடிக்கை - சார்பு



Saturday, February 22, 2020

தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் !!


பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மற்றும் டுடோரியல் சென்டர்களில் பயிலும் தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு கடந்த ஆண்டு வரை தனித் தேர்வு மையங்கள் கிடையாது.

இந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டாலும், இவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுத உள்ளனர். இதனால் தனித்தேர்வர்களுக்கென ஒரு வினாத்தாளும், மாணவர்களுக்கென ஒரு வினாத்தாளும் தயாரிக்கப்பட உள்ளது. குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தனித்தேர்வர்களுக்கென இந்த ஆண்டு தனி தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.

STATE GIRL CHILD PROTECTION DAY - அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 24 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்க தமிழக அரசு உத்தரவு ( உறுதிமொழி இணைப்பு)




பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி!

இபிஎப்ஓ (EPFO - Employees' Provident Fund Organisation) கீழ் பென்சன்தாரர்கள், ஒரு ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் லைப் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமாண பத்ரா முறையில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தத்தால் 64 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இது தொடர்பாக இபிஎப்ஓ பதிவிட்டுள்ள டுவீட்டில், ஒரு ஆண்டில் தங்களுக்கு வசதியான எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை சமர்பிக்கலாம். இந்த சான்றிதழ், சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த ஓராண்டு வரை செல்லும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கு முன்பு வரை, பென்சன்தாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவ. 1 முதல் நவ. 30 ம் தேதிக்குள் லைப் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அவ்வாறு லைப் சான்றிதழ் சமர்பிக்க தவறியவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதிய தொகை நிறுத்தப்படும்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய முறையால் பென்சன்தாரர்கள் நவம்பர் மாதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. தங்களுக்கு வசதியான நேரத்தில் சான்றிதழை சமர்பிக்கலாம். ஒருமுறை சமர்ப்பித்தால் அடுத்த 12 மாதங்களுக்கு அந்த சான்றிதழ் செல்லுபடியாகும்.

பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயம்தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களும் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வின் மூலமாக ஆசிரியர் பணி வழங்குவதற்கான தமிழக அரசு செய்த விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிளஸ் 2 முடித்து தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்து முடித்த அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மூலம், ஆரம்பப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புடன் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அலுவலக ஊழியர்கள் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயம்தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களும் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வின் மூலமாக ஆசிரியர் பணி வழங்குவதற்கான தமிழக அரசு செய்த விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பிளஸ் 2 முடித்து தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்து முடித்த அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மூலம், ஆரம்பப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புடன் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 20, 2020

PUBLIC EXAMINATION TIME TABLE - 2020


ஆசிரியர்கள் தேவை (PG, BT, S.Grade)

Walk-in Interview at School on 23-02-2020 (10 am to 1 pm) Send your Resume by email in Advance.

* Excellent Communication skills 
* Teaching experience in CBSE Preferred
* Freshers with fluency in English can also apply 
* Food and Accommodation available for outstation candidates 
* Salary is Negotiable.







Wednesday, February 19, 2020

DSE - மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம்கோரி இயக்குநர் உத்தரவு.


நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கீழ்கண்ட படிவத்தில் 

(அரசு/நகராட்சி தனித்தனியாக) பூர்த்தி செய்து (MS Excel ல் படிவம் ஆங்கிலத்தில்) w1sec.tndse@nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் , எந்தவொரு காலிப்பணியிடமும் விடுபடாமல் அனைத்து காலிப்பணியிட விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்றுமுதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க, தனி தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அவர்கள், இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 1ல், 'அரியர்' மற்றும் பிளஸ் 2 ஆகிய, இரண்டு தேர்வுகளுக்கும், ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டிய தனி தேர்வர்கள், கருத்தியல் தேர்வு நடக்கும் நாட்களுக்கு முன்பே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தின், முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, செய்முறை தேர்வு தேதியை தெரிந்து, அதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, February 17, 2020

வேலைவாய்ப்பு முகாம், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள அழைப்பு!!

23.02.2020 ஞாயிறு அன்று  திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்(ஆசிரியர்களுக்கு மட்டும் )

அன்புள்ள  பள்ளி  தாளாளர்கள், முதல்வர்கள் ,தலைமை  ஆசிரியர்கள்  அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

வருகின்ற 23.02.2020 ஞாயிறு திருப்பூர், காங்கேயம்  ரோடு  ராக்கியாபாளையத்தில்  உள்ள  CENTUARY FOUNDATION COLLEGE OF EDUCATION ல்  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .

இந்த  வேலைவாய்ப்பு  முகாமில்  கோவை ,திருப்பூர் ,ஈரோடு ,நீலகிரி ,திண்டுக்கல் ,தேனி  மாவட்டங்களை  ஒன்றிணைத்து  நடத்தப்படுகின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .

இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களும் ,BE முடித்த மாணவர்களும் (நீட் ,AIIMS ,ஜிப்மர் ,IIT  போன்ற  நுழைவுத்தேர்வுகளுக்கு  physics,chemistry maths பாடம்  எடுக்க  தகுதி  உள்ளவர்கள் .)தங்கள் கல்லூரி இறுதி ஆண்டு (BEd, MEd )படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள்  கொண்டு வரவும்.

  வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை 9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள் .

ADVERTISEMENT IN NEWS  PAPAER, LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும்  எங்களுடையது .


DEMO CLASS பார்க்கும்   வசதியுடன் .தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம் .மேலும் 2020-21  கல்வியாண்டு  முழுவதும்  candidate  support  கொடுக்கப்படும்.


SOME OF ENROLLED SCHOOLS:

VIDHYA VIKAS MATRIC HR SEC SCHOOL, KARAMADAI.
FRONTLINE ACADEMY GROUP OF SCHOOLS
MS VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
KIDS CLUB GROUP OF SCHOOLS
KUMUTHA MATRIC HR SEC SCHOOL
KOMARASAMY GOUNDER MATRIC HR SEC SCHOOL
PLATOS ACADEMY  HR SEC SCHOOL
SRC MEMORIAL MATRICULATION SCHOOL
KAMADHENU MATRIC HR SEC SCHOOL
PALANIYAPPPA MATRIC HR SEC SCHOOL
RAMAKRISHNA MATRIC HR SEC SCHOOL
BHARATHIDASANAR MATRIC HR SEC SCHOOL
BANNARI AMMAN PUBLIC SCHOOL
AALAYA ACADEMY&MONTESSORI SCHOOL
SPRINGDALE PUBLIC SCHOOL
VETRI VIKAAS GROUP OF SCHOOLS
VIJAY VIDHYALAYA GROU OF SCHOOLS
VIJAY VIDHYASHRAM GROUP OF INSTITUTIONS
BHARATHI GROUP OF SCHOOL
BHARATHI MATRIC  HR SEC SCHOOL
RAJALAKSHMII MATRIC HR SEC SCHOOL
GREEN PARK SMART SCHOOL
MARUTHI EXCEL MATRIC HR SEC SCHOOL
GLOBAL MATRIC HR SEC SCHOOL
RAJA NURSERY AND PRIMARY SCHOOL
VIRUKSHA INTERNATIONAL SCHOOL
SHANTHI VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
VINAYAGA MATRIC HR SEC SCHOOL
SRI SAKTHI INTERNATIONAL SCHOOL
BHARATHI VIDHYALAYA GROUP OF SCHOOLS GOBI
Sri Nachammal Vidyavani Senior Secondary School,
GEM INTERNATIONAL SENIOR SECONDARY SCHOOL,
SHREE VALLI MATRIC HR SEC SCHOOL 
KOVAI VIDHYASHRAM
JEYANTHI MATRIC HR SEC SCHOOL
PKP MATRIC HR SEC SCHOOL
GREENFIELD INTERNATIONAL SCHOOL, DHARAPURAM
SRI KAMATCHI AMMAN MATRIC HR SEC SCHOOL
PMG MATRIC HR SEC SCHOOL
SHANTHI JUNIORS

இடம் : CENTUARY FOUNDATION COLLEGE OF EDUCATION, KANGEYAM ROAD, RACKKIAPALAYAM, TIRUPPUR


தேதி :23.02.2020 (ஞாயிறு)
மேலும் தொடர்புக்கு
9788829179
9442568675

தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம்!!


நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.

இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.

அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன.

Saturday, February 15, 2020

TNPSC - தேர்வுகளில் 6 அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது தேர்வாணையம்!

TNPSC - தேர்வாணையம் தனது தேர்வு முறைகளில் இன்றியமையாத மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து செயல்படுத்தி வருகிறது . 

கடந்த 07. 02.2020ல் அன்று ஆதார் கட்டாயம் உள்ளிட்ட ஆறு முக்கியமான புதிய மாற்றங்களை முதற்கட்டமாக அறிவித்திருந்தது அதன் தொடர்ச்சியாக 14.02.2020 அன்றும் தேர்வு முறைகளில் செய்யப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து தேர்வாணையத் தலைவர் தலைமையில் தேர்வாணையக் குழுமம் கூடி விவாதித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அம்முடிவுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

1 . முதனிலை மற்றும் முதன்மை தேர்வு முறை அறிமுகம் : 

தொகுதி - 4 தொகுதி - 2A போன்ற தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டும் இதுவரை நடந்துவருகிறது . இனி வருங்காலங்களில் இத்தேர்வுகள் இருநிலைகளைக் கொண்டதாக அதாவது , முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளாக நடத்தப்படும்

2 . தேர்வு நேரங்களில் மாற்றம் :

தேர்வு எழுத வரும் தேர்வர்களின் மெய்த்தன்மை உறுதி செய்யவும், இதர தேர்வு விதிமுறைகளைத் தேர்வர்களுக்கு விளக்கும் விதமாகவும், தேர்வர்கள் இனி, 9.00 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருகை புரிதல் வேண்டும் தேர்வு நேரம் சரியாக 10.00 மணிமுதல் 01.00 மணிவரை மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும் 10.00 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் . தேர்வு நேரத்திற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். காலை மாலை இரு வேளைகளிலும் தேர்வு இருந்தால் மாலை நடக்க வேண்டிய தேர்வு பிற்பகல் 3. 00 மணிக்குத் தொடங்கும் .

3 . அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயம்                                 
இனி வரும் கொள்குறிவகைத் தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும் எந்தவொரு வினாவிற்கும் விடை அளிக்க இயலவில்லை! விடை தெரியவில்லை எனில் அதற்கு கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தினை கருமையாக்குவதுடன் மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு முறையே A,B,C,D மற்றும் E விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விவரங்களை தனியே பதிவு செய்து அதற்கான உரிய கட்டங்களை நிரப்ப வேண்டும் . தேர்விற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக தேர்வு நேரத்திற்குப் பிறகு 15 நிமிடங்கள் இப்பணிக்காக மட்டும் வழங்கப்படும் . எந்தவொரு கேள்விக்கும் மேற்கூறிய A,B,C,D மற்றும் E ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும் தேர்வு முடிந்ததும் எந்தவொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் இனங்கான இயலாதவாறு தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதி மற்றும் விடையளிக்கும் பகுதி ஆகியவற்றை தேர்வர்களின் முன்னிலையிலேயே தனித் தனியே பிரித்து தேர்வு அறையிலேயே சீலிடப்படும் சீலிடப்பட்ட உறை மீது அறையிலிருக்கும் சில தேர்வர்களிடம் கையொப்பம் பெறப்படும் .

4 . தேர்வரின் கைரேகைப் பதிவு .

தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையொப்பத்திற்கு பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும் .

5 . விடைத்தாள் பாதுகாப்பு : 

தேர்வுமையங்களிலிருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்துவர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு அதிநவீன தொழில்நுட்ப ஜி.பி. எஸ் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்படும். இந்நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்

6 . தகவல்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிக்க வசதி :       

தேர்வாணையத்திற்கும், நேர்மையான முறையில் தேர்வுக்குத் தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கும் தேர்வர்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதி செய்யவும், தகவல் பரிமாற்றத்தினை மேலும் எளிமைப்படுத்தவும் தேர்வாணைய இணைய தளத்தில் ஒரு சிறப்பு தகவல் தளம் விரைவில் உருவாக்கப்படும் தேர்வாணையம் அவ்வப்போது கொண்டுவரும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னூட்டங்களைப் பெறவும் தேர்வர்கள் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை தேர்வாணையத்துடன் பகிர்ந்துகொள்ளவும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு தகவல் அளிக்கும் தேர்வர்களின் இரகசியத்தன்மை காக்கப்படும்.

Wednesday, February 12, 2020

DTEd - First & Second Year Examination Time Table 2020

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான இரண்டாம் ஆண்டு தேர்வு 03.06.2020 புதன் கிழமையும், முதலாமாண்டு தேர்வு 04.06.2020 வியாழக்கிழமையும் தொடங்கி கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெறும் .

Thursday, February 6, 2020

FLASH NEWS :- பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி மாற்றம்!! புதிய செயலாளராக தீரஜ் ராஜ் நியமனம்


நிரந்தரப் பணியிடம் - பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!!


முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

பள்ளிக் கல்வி இயக்ககம்
பத்திரிக்கை செய்தி

      அரசு , நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது . அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 9 - 2 - 2020 மற்றும் 10 - 2 - 2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது .

              பணிநாடுநர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிய பணியிட ஒதுக்கீடு ஆணை பெற்றுக் கொள்ள உரிய அத்தாட்சி சான்றுடன் வருகைப் புரியுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள் .