கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளதால் இன்று பணிஓய்வு பெறும் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு.
திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Tuesday, March 31, 2020
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஜூன் 30 வரை செல்லும். மத்திய அரசு அறிவிப்பு
பிப்ரவரி 1முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. ஆவணங்களை செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமங்கள், தகுதிச் சான்றிதழ் ஜூன் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என மாநில அரசுகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பிப்ரவரி 1 முதல் காலாவதியாகின்ற ஓட்டுநர் உரிமம், பெர்மிட்டுகள் மற்றும் பதிவு போன்ற ஆவணங்கள் செல்லுபடி ஆகும் காலத்தை ஜூன் 30-ம் தேதி வரை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நீட்டித்துள்ளது.
நாட்டில் நிலவுகின்ற தேசிய அளவிலான ஊரடங்கு மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? கருத்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளிடம், அரசு தரப் பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுதும்,21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு வகை பாட திட்டங்களில், பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி. எஸ்.இ., பாட திட்டத்திலும், பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்புக்கான சில பாடங்களுக்கு, தேர்வகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தமிழக பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுதேர்வுகள், இந்த மாதம், 27ல் நடத்தப்பட இருந்தநிலையில், அந்த தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.
மீண்டும் ஏப்., 15 முதல்பொது தேர்வை நடத்தலாம் என, ஏற்கனவே திட்டமிடப்பட்டது.ஆனால், கொரோனா வின் கொடூர தாக்கத்தால், ஏப்ரலில் நிலைமை முழுதுமாக கட்டுப்பாட்டில் வந்து விடுமா என்பது, சந்தேகமே என்ற நிலை உருவாகி உள்ளது.
மேலும், ஏப்ரலில் ஊரடங்கு முடிந்தாலும், உடனே தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தான் தேர்வை துவங்கலாம்.
ஆனால், நாடு முழுதும் அனைத்து துறைகளிலும், மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அதிகபட்ச நிதி தேவைப்படும்.
எனவே, இந்த ஆண்டு மட்டும் பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வை ரத்து செய்யலாம் என்றும், அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கலாம் என்றும், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
இந் நிலையில் , காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்யலாம் என்றும், சிலர்கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளிடம், அரசு தரப்பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், இதுபோன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டதா; அப்போது, எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும், ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை செயலகம் அறிவுறுத்தி உள்ளது.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்.14-ம் தேதி வரை நீட்டிப்பு - உயர்கல்வித்துறை உத்தரவு
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெவித்துள்ளது.
ஊரடங்கால் ஏப்ரல் 14-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் பேராசிரியர்கள், பணியயாளர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கி நிதி கையிருப்பு; அமைச்சகம் வேண்டுகோள்
சம்பள தேதி நெருங்குவதால், அனைத்து பொதுத்துறை வங்கிகளும், தேவையான நிதி கையிருப்பு வைத்திருக்குமாறு, மத்திய நிதித்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை முதல், இம்மாதம், 10ம் தேதி வரை, பல்வேறு நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும். இதையடுத்து, வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். மேலும், விவசாயிகள், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையும், இந்த காலகட்டத்தில், வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்யப்படும்.
எனவே, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, தேவையான நிதி கையிருப்பு வைத்திருக்குமாறு, அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும், மத்திய நிதித்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சிறு பயிர் கடன்கள் மீதான வட்டி மானியம், மே மாதம், 31 வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா எதிரொலி: தெலுங்கானா அரசு ஊழியர்கள் சம்பளம் குறைப்பு.
தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளில் உயரதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்., 14 வரையில், 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 'மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் முதல்வர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு,தெலுங்கானாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி, தெலுங்கானா அரசில் முதல்வர், மற்றும் அமைச்சரவை, எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள், மாநில நிறுவனத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவிர ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பளக் குறைப்பு இருக்கும். மற்ற பிரிவு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளக் குறைப்பும், நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, 10 சதவீத சம்பள குறைப்பும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் சம்பள குறைப்பு இருக்கும். .இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, March 30, 2020
பாரத் ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டி குறைப்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்
பொதுத்துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்தது.
இதனால் ரெப்போ விகிதம் 0.75 சதவீதம் குறைந்து 4.40 சதவீதமாக குறைந்து இருக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.90 சதவீதம் குறைந்து 4 சதவீதமாக உள்ளது.
இதன் பலனை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதால் வீடு, வாகன கடன் வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி வெளிக்காரணிகள் சார்ந்த கடன் வட்டியையும், ரெப்போ ரேட் சார்ந்த கடன் வட்டியையும் 0.75 சதவீதம் குறைத்து இருக்கிறது.
இதனையடுத்து இந்த இரண்டு வட்டி விகிதங்கள் முறையே 7.05 சதவீதமாகவும், 6.65 சதவீதமாகவும் குறைகிறது.
இதே போன்று பல்வேறு சில்லரை மற்றும் மொத்த டெபாசிட் வட்டி விகிதங்களையும் இவ்வங்கி 0.20 சதவீதம் முதல் 1 சத வீதம் வரை குறைத்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் வரும் 1-ந் தேதி (புதன்கிழமை) அமலுக்கு வருகின்றன.
கல்லுாரி தேர்வுகள் மே மாதம் தள்ளிவைப்பு?
'பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பருவ தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம்' என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலால், உலகம் முழுவதும், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பள்ளிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் மற்றும்தமிழகத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கான தேர்வுகளையும், திட்டமிட்ட தேதியில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏப்., 14 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதன் பிறகும், இயல்பு நிலை திரும்புமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவு, ஏப்ரலில் முடிந்தாலும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. அதேபோல, தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, சிறிது அவகாசம் தேவைப்படும். எனவே, பருவ தேர்வுகளை, மே மாதத்திற்கு தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள், அதிகம் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Sunday, March 29, 2020
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டது. மராட்டியத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது. சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பொதுமக்களில் சிலர் கடைப்பிடிப்பது இல்லை. தெருக்களில் அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. வைரஸ் பரவல் பற்றிய அச்சம் இல்லாத நிலை உள்ளது.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேபோன்று, விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்த கூடாது. இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்- ரயில்வே துறை
ரயில்வே முன்பதிவு மையத்தில் எடுத்த பயணச்சீட்டுகளை மார்ச் 27ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால், டிக்கட் டெபாசிட் ரசீது படிவத்தை நிரப்பிக் கோட்டத் தலைமை வணிக மேலாளர், மண்டலத் தலைமை அதிகாரிக்கு ஜூன் 21ஆம் தேதி வரை கொடுத்து மீதித் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகு ரத்து செய்யப்படும் அனைத்துப் பயணச்சீட்டுகளுக்கும் முழுத் தொகையும் திருப்பிக் கொடுக்கப்படும். ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகள் மார்ச் 27 ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால் மீதித் தொகை, அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மார்ச் 27ஆம் தேதிக்குப் பின் ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு முழுத் தொகையும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக, முன்பதிவு செய்த பயணியருக்கு, வழக்கமான பரிவர்த்தனை வழியாக, முழு டிக்கெட் கட்டணமும், அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று விடும்.
ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்தவர்கள், 'கவுன்டர்'கள் மூடப்பட்டுள்ளதால், நேரில் செல்ல வேண்டாம். ஏப்., 15ல் இருந்து, கவுன்டர்களில் கட்டணத்தை திரும்ப பெறலாம்.
Friday, March 27, 2020
வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:-
அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும். பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைக்கப்படுகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
ரிசர்வ் வங்கி தீவிரமாக களத்தில் உள்ளது. சிறு, குறு பொருளாதார வட்டங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை.
அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்
எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கும்3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு.
கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க உத்தரவு; இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது என கூறினார்.
Thursday, March 26, 2020
விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும் : நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது
என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
* மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில்
காப்பீடு செய்யப்படும்.
* வீடுகள் தோறும் கூடுதலாக 3 மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு
வழங்கப்படும்.
* 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன், அடுத்த 3 மாதங்களுக்கு
கூடுதலாக 5 கிலோ கோதுமை வழங்கப்படும்.
* 100 நாள் வேலை திட்டத்தின் கூடுதலாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
* முறைசாரா தொழிலாளர்களுக்காக ரூ.2 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும்
* விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன்
யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய்
வழங்கப்படும்.
* 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.
* முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக
வழங்கப்படும்.
* இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்.
* 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து
ரூ.202 ஆக உயர்வு.
* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக
சிலிண்டர் ழங்கப்படும் .
* 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்கு
கூடுதலாக வழங்கப்படும்.
* ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.
* வருங்கால வைப்பு நிதியின் 75 சதவீதம் அல்லது 3 மாத சம்பளத்தில், எது
குறைவோ அதை முன் பணமாக எடுத்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு; முதல் அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மார்ச் 31ந்தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்பின்னர் கடந்த 24-ந் தேதி நாட்டு மக்களுக்கு 8 மணியளவில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தொடர்ந்து 21 நாட்கள் முடக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார். 144 தடை உத்தரவு தமிழகத்தில் மார்ச் 31ந் தேதி வரை இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிப்பது என முடிவாகியுள்ளது.
இதேபோன்று, வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தொடர் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் பண வசூலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
உணவகங்கள், மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அவற்றுக்கு நேர வரம்பு எதுவும் குறைக்கப்பட வில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
யாரும் பசியில் இருக்கக் கூடாது”ஏழைகள், தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவி -நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.
நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.
பதிவு செய்த 3.5 கோடி கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அவர்களின் நல நிதியை (ரூ .31,000 கோடி) பயன்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும்.
உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற சுமார் 8 கோடி குடும்பத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசம்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இரு நிறுவனங்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) பங்களிப்பை இந்திய அரசு செலுத்தும், இது 24 சதவீதமாக இருக்கும், இது அடுத்த 3 மாதங்களுக்கு இருக்கும்.
வருங்கால வைப்பு நிதியில் 75% திரும்பியளிக்கத்தேவையில்லாத தொகையை பெற்றுக்கொள்ளும் வசதியின் மூலம் 4.8 கோடி ஊழியர்கள் பலனடைவர் என கூறினார்.
நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவ்து:-
80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த 3 மாதத்திற்கு தலா 1 கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும் என கூறினார்.
கொரோனா ரூபாய் நோட்டால் பரவுமா?
கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவாது என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கிகள் சார்பில், ரூபாய் நோட்டுகளை கையாளும் நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ரூபாய் நோட்டுகள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவாது. இதை, உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.
வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, ஏ.டி.எம்., மையங்களில் நிரப்பும் பணியில் ஈடுபடும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரூபாய் நோட்டுகளால், வைரஸ் பரவாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, March 25, 2020
21 ஊரடங்கு காலத்தில் 80 கோடி மக்களுக்கு கிலோ ரூ.2 க்கு கோதுமை ரூ.3 க்கு அரசி
ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கும் 21 நாட்களில் நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், கொரோனா வைரசை தடுத்து நிறுத்தவும் மற்றும் நாம் பாதுகாப்புடன் இருப்பதற்கும், சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும். ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில், புதுடெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று, இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தகவல் தொடர்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அமைச்சர்கள் அமரும் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி விடப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான 21 நாள் ஊரடங்கின் போது நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. கிலோவுக்கு ரூ.27 மதிப்புள்ள கோதுமை ஒரு கிலோவுக்கு ரூ.2 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.37 மதிப்புள்ள அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.3 வீதமும் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டத்திற்கு பிறகு இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
"உலகின் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு அமைப்பான பொது விநியோக முறை (பி.டி.எஸ்) இன் கீழ் 80 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கிலோ ரூ.27 மதிப்புள்ள கோதுமை ரூ.2 க்கும் ரூ.37 மதிப்புள்ள அரிசி கிலோ ரூ.3 க்கும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் என கூறினார்.
1 முதல் 9 வகுப்பு வரை ஆல்பாஸ் - முதல்வர் அறிவிப்பு!!
சூழல் நிலவுவதால் 1 முதல் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவிப்பு.
மேலும் பனிரெண்டாம் வகுப்பில் கடைசி தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் அறிவிப்பு.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து புதுச்சேரியில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்க கோரி பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
இதுபற்றி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கடந்த 24ந்தேதி நடந்த 12ம் வகுப்பு பொது தேர்வை எழுத முடியாமல் போன மாணவ மாணவியர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இன்று (25.03.2020) முதல் kalvi tv official You Tube சேனலில் 10ஆம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் ஒளிபரப்பு!
https://www.youtube.com/channel/UCTMjO0AVI__8bnjTiK3JyPw
KIND ATTENTION TO SSLC STUDENTS :
KIND ATTENTION TO SSLC STUDENTS :
வீட்டை விட்டே வெளியே வர முடியாத இன்றை சூழலில் இன்னும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எஞ்சியுள்ளன. ஆண்டு முழுவதும் மாணவர்கள் படித்த பாடங்களை நினைவுபடுத்துவதும், திருப்புதல் செய்வதும் பொதுத் தேர்வுக்கு முன்னர் அவசியமானதாகும். எனவே, நமது தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இன்று (25.03.2020) முதல் சிறப்பு நிகழ்வாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனுக்காக பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2. TCCL - 200
3. VK DIGITAL - 55
4. AKSHAYA CABLE - 17
மேலும் கல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ You Tube சேனலான kalvitvofficial என்ற தளத்தில் அன்றாடம் ஒளிபரப்பப்படும் பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும். எனவே மாணவர்கள் பார்த்து பயனடையும்படி இச்செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
kalvitvofficial - you tube சேனல்.
- கல்வித் தொலைக்காட்சி
ஊரடங்கை மீறி தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - தமிழக அரசு
தமிழகமெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், உயரதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தர தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தாம்பரம் சானடோரியம், மதுரை தோப்பூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனாவுக்காக மருத்துவமனை அமைகிறது.
சென்னை ஆவடியில் வெளிநாட்டிலிருந்து வந்த 32 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய 3 நபர்கள், அரசு உத்தரவை மீறி வெளியே சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் மீதும், கோயம்பேடு பகுதியை சேர்ந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
மதுரையில் ஊரடங்கை மீறி பைக்கில் சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஊரடங்கு உத்தரவு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய குற்றவியல் சட்டம் 270ஆவது பிரிவு படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வீரியமிக்க வைரஸ் பரவலுக்கு, தெரிந்தே எவர் ஒருவர் காரணமாக இருப்பது உறுதி ஆனால், 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
அரசின் உத்தரவை மீறி, ஆபத்தான வைரஸ் தொற்று பரவுவதற்கான செயலில் ஈடுபட்டாலோ அல்லது அலட்சியமாக நடந்து கொண்டாலோ, இந்திய குற்றவியல் சட்டம் 269ஆவது பிரிவின் கீழ், 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தனிமை முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டவர்கள், அரசின் உத்தரவுக்கு கீழ் படியாமல் இருந்தால், இந்திய குற்றவியல் சட்டம் 271 வது பிரிவு படி, 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாசாலை காவல் உதவி ஆய்வாளர் ரசீத், சாலையில் வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து வெளியே வராதீர்கள் என கோரிக்கை விடுத்தார். மேலும், உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வெளியே யாரும் வராதீர்கள். உங்களை வீட்டில் தான் இருக்க சொல்கிறோம். வேறு எதுவும் உங்களிடம் கேட்கவில்லை. தற்செயலாக தெரியாமல் வந்தால் கூட திரும்பி போய் விடுங்கள் எனக் கும்பிட்டு கேட்டுக்கொள்கிறார்.
வங்கிகளின் பணி நேரம் குறைப்பு மதியம், 2:00 மணி வரை தான் இயங்கும்!
வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, வங்கிகள் மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும்' என, தமிழகத்தின், மாநில அளவிலான வங்கிகள் குழு அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழகத்தின், மாநில அளவிலான வங்கிகள் குழு, நேற்று வெளியிட்ட, பொது வணிக தொடர்ச்சி திட்ட விபரம்:
நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவும் நிலையில், அவை வங்கிகளில் பரவாமல் இருக்க, சரியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்தவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதற்காக, பொது வணிக தொடர்ச்சி திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி: -
* தமிழகத்தில் உள்ள வங்கிகள், அடுத்த அறிவிப்பு வரும் வரை, பணம் செலுத்துதல்,
பெறுதல், காசோலை பரிவர்த்தனை, அரசு பரிவர்த்தனை மேற்கொள்ளுதல்
போன்ற வற்றை, காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை மேற்கொள்ளலாம்
* பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல், ஏ.டி.எம்., இயந்திரம், பணம் செலுத்தும்
இயந்திரம் போன்ற சேவைகள், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும்
* பெட்டிகளில் போடப்படும் காசோலைகள், 'ஆன்லைன்' பரிவர்த்தனை
போன்ற சேவைகளும் கிடைக்க, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
* ஊழியர்கள் எண்ணிக்கையை பொறுத்து, 50 சதவீத ஊழியர்கள் அலுவலகம் வரவும்,
மீதமுள்ளோர், வீட்டில் இருந்து பணி புரியவும், வங்கி கிளைகள் நடவடிக்கை
மேற்கொள்ளலாம்
* கூட்டம் அதிகம் உள்ள வங்கிகள், தேவையெனில், போலீஸ்பாதுகாப்பு பெற்றுக்
கொள்ளலாம்
* பாதிப்புக்குள்ளான பகுதிகள், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என, அரசு
அறிவித்திருந்தால், அந்தப் பகுதி வங்கிகளை, அரசின் அடுத்த உத்தரவு வரும்
வரை மூடலாம்.
இது தொடர்பான அறிவிப்புகளை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வீடுகளில் நேரடியாக வழங்கப்படும் - 1,000/- உதவித்தொகை
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கூறியதாவது :
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடை களிலும் குறைந்தபட்சம் 350 முதல் ஆயிரம் குடும்ப அட்டைகள் வரை உள்ளன. எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள 1000 ரேஷன் கடைகளில் வாங்குவதற்கு கூட்டம் ஒரே நேரத்தில் குவியும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த உத வித்தொகையை வாங்க பொது மக்கள் யாரும் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டாம்.
கூட்டுற வுத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் மூலம், பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பணத்தை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்காக, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உரிய பதிவேடுகளை கொண்டு வந்து, பணத்தை கொடுத்து விட்டு கையொப்பம் பெற்றுச் செல்வார்கள். எந்த குடும்பமும் விடுபடாத வகையில், உரிய நாட்களுக்குள் வழங்குவ தற்கான ஏற்பாடுகளை முறையாக திட்டமிட் டிருக்கிறோம். எனவே, அனைவருக்கும் நிச்சயம் 1000 வீடு தேடி வரும். அதேபோல், அடுத்த மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்கள், கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே, பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது. ரேஷன் பொருட்களை எப்போது வேண்டுமா னாலும் சென்று பெற்றுக் கொள்ளலாம். கூட்டம் சேராமல் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கி, அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
Tuesday, March 24, 2020
இந்தியாவில் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு; பிரதமர் மோடி உரை
இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி இன்றிரவு 8 மணியளவில் உரையாற்ற தொடங்கினார். அவர் பேசும்பொழுது, மக்கள் ஒரு நாள் ஊரடங்கை ஏற்று கடைப்பிடித்தது, நாட்டு முன் மற்றும் மனித குலத்திற்கு முன் தோன்றும் எந்தவொரு பிரச்சனைக்கு எதிராகவும் போராட, இந்தியர்களாகிய நாம் எப்படி ஒன்றிணைந்தோம் என்பது வெளிப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு இந்தியனும் பொறுப்புடன் பங்காற்றி ஒரே நாடாக நாம் இதனை நிறைவேற்றி உள்ளோம்.
கொரோனா வைரசை தடுத்து நிறுத்த மற்றும் பாதுகாப்புடன் இருப்பதற்கு சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும். ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள். உங்களது வீடுகளில் இருங்கள்.
இந்தியா இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை 3 வாரங்கள் தொடர்ந்து முடக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பார்வை - 1ல் கண்டுள்ள அரசாணைக்கிணங்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே 31.03.2020 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் தொடர்பான விடைத்தாட்கள் மைய மதிப்பீட்டுப் பணிகளும், மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்திவைக்கப் படுகின்றன. இம்மதிப்பீட்டு பணிகள் 07.04.2020 அன்று தொடங்கப்படும்.
இது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். விடைத்தாள் சேகரிப்பு மையம் மற்றும் மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதையும், விடைத்தாட்கள் பாதுகாப்பினையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும் .
சிறப்புக் குழந்தைகள்(SPECIAL CHILD )உள்ள தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு (SPECIAL LEAVE) ஆறு நாட்கள் அனுமதித்து அரசாணை எண் -39/ நாள்-23.03.2020 வெளியீடு
1. சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு
சிறப்பு தற்செயல் விடுப்பு சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை ( Special
Children ) கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க
மேற்கொள்ளும் சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின்
பெற்றோர்களான அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல்
விடுப்பு இதய தெய்வம் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின்
நல்லாசியுடன் , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி
வழங்கப்படும் .
2. The Government after careful consideration direct that Special Casual Leave for
six days in a calendar year be granted to Government servants having Children
with special needs , on production of a supportive document obtained either from
the competent authority under the Rights of Persons with Disabilities Act 2016
(Central Act 49 of 2016 ) or from a Registered Medical Practitioner attending to the
child certifying that he / she is a special child suffering from disability that requires
parental support for daily life activities .
3. Necessary amendment to Fundamental Rules will be issued separately .
பிற வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க கட்டணம் கிடையாது - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
அடுத்த 3 மாதங்களுக்கு பிற வங்கியின் ஏடிஎம்- ல் இருந்து டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்தாலும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாடு முழுவதும் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. நடப்பு நிலவரங்களை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.
பொருளாதார நிதி தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆக குறைக்கப்படுகிறது.
ரூ.5 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது. ஜூன் 30ஆம் தேதி வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும்.
பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, சுங்கவரி போன்ற பல்வேறு கணக்குகளை தாக்கல் செய்ய தொழிற்துறைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.
அடுத்த 3 மாதங்களுக்கு பிற வங்கியின் ஏடிஎம் - ல் இருந்து டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்தாலும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது.
கொரோனா மிகவும் வேகமாக பரவுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட இருக்கின்றன.
இதனால் நேற்று முதலே மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி வருகின்றனர்.
மக்கள் வெளியேற கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் வீடற்ற, ஆதரவற்ற மக்களின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்களுக்கு நிவாரண பணிகளை அறிவித்துள்ள நிலையில் ஆதரவற்ற மக்களுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.
மாவட்டங்கள் முழுவதும் பொது சமையற்கூடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சூடான, சுகாதாரமான உணவை ஆதரவற்றோர்களுக்கு அவரவர் வாழும் இடங்களுக்கே சென்று வழங்க ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
கொரோனா மிகவும் வேகமாக பரவுகிறது. மக்களின் நலன் கருதி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். பயணத்தை தவிர்க்கவும்.
பல்வேறு நோய்கள் ஏற்கனவே இருந்தாலும் மதுரையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு பேரவையில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். முதல்-அமைச்சர் பழனிசாமி, சபாநாயகர் தனபால் மற்ற எம்.எல்.ஏக்கள் கரொவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.
Saturday, March 21, 2020
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.! இன்னும் 10 நாட்களில் நடக்கபோகும் மாற்றம்.!
குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
இந்தாண்டு ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் அதற்கு முன்னோட்டமாக ஒரே மாநிலம் ஒரே ரேஷன் எனப்படும் உள்மாநில பெயர்வுத் திறன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்தக் ரேஷன் கடையிலும் அரிசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமல்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தன.
இந்த நிலையில், ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு" திட்டம் ஏப். 1 முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ். தெரிவித்துள்ளார். ஏப். 1 ஆம் தேதி முதல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என அமைச்சர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)