திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, March 24, 2020

பிற வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க கட்டணம் கிடையாது - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

அடுத்த 3 மாதங்களுக்கு பிற வங்கியின் ஏடிஎம்- ல் இருந்து டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்தாலும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில்  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாடு முழுவதும் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. நடப்பு நிலவரங்களை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.

பொருளாதார நிதி தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆக குறைக்கப்படுகிறது. 

ரூ.5 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது.  ஜூன் 30ஆம் தேதி வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும். 

பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, சுங்கவரி போன்ற பல்வேறு கணக்குகளை தாக்கல் செய்ய தொழிற்துறைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.  

அடுத்த 3 மாதங்களுக்கு பிற வங்கியின் ஏடிஎம் - ல் இருந்து டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்தாலும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது.

No comments:

Post a Comment