ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கும் 21 நாட்களில் நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், கொரோனா வைரசை தடுத்து நிறுத்தவும் மற்றும் நாம் பாதுகாப்புடன் இருப்பதற்கும், சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும். ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில், புதுடெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று, இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தகவல் தொடர்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அமைச்சர்கள் அமரும் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி விடப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான 21 நாள் ஊரடங்கின் போது நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. கிலோவுக்கு ரூ.27 மதிப்புள்ள கோதுமை ஒரு கிலோவுக்கு ரூ.2 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.37 மதிப்புள்ள அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.3 வீதமும் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டத்திற்கு பிறகு இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
"உலகின் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு அமைப்பான பொது விநியோக முறை (பி.டி.எஸ்) இன் கீழ் 80 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கிலோ ரூ.27 மதிப்புள்ள கோதுமை ரூ.2 க்கும் ரூ.37 மதிப்புள்ள அரிசி கிலோ ரூ.3 க்கும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் என கூறினார்.
No comments:
Post a Comment