சம்பள தேதி நெருங்குவதால், அனைத்து பொதுத்துறை வங்கிகளும், தேவையான நிதி கையிருப்பு வைத்திருக்குமாறு, மத்திய நிதித்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை முதல், இம்மாதம், 10ம் தேதி வரை, பல்வேறு நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும். இதையடுத்து, வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். மேலும், விவசாயிகள், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையும், இந்த காலகட்டத்தில், வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்யப்படும்.
எனவே, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, தேவையான நிதி கையிருப்பு வைத்திருக்குமாறு, அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும், மத்திய நிதித்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சிறு பயிர் கடன்கள் மீதான வட்டி மானியம், மே மாதம், 31 வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment