திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, December 30, 2019

Flash News விடுமுறை முடிந்து ஜனவரி 4 அன்று பள்ளிகள் திறக்கப்படும்!!

2 ஆம் தேதி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணும் பணி 3 ஆம் தேதியும் தொடரும் என்பதால் பள்ளிகளை அன்றைய தினம் திறந்து வைப்பது சிரமம் என்பதால் மறுநாள் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று பள்ளிக்கல்வி இயக்குநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Friday, December 27, 2019

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: ரூ.304 கோடி வழங்க கல்வித் துறை கடிதம்!!

சட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் சோக்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணமாக ரூ.304 கோடி வழங்குமாறு அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளிகளின் நுழைவு நிலை வகுப்புகளில் (எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை) ஏழை, எளிய குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 

அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும். இதையடுத்து இட ஒதுக்கீடு வழங்கிய தனியாா் பள்ளிகளுக்கு மாநில அரசின் சாா்பில் வழங்கப்படும்

தமிழகத்தில் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டு முதல் இந்தத் திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சோக்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் பெற்றோா் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள அதேவேளையில் மற்றொருபுறம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

தனியாா் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் குழந்தைகளைச் சோப்பதால் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவா் சோக்கை குறைந்து வருவதாக அவா்கள் தெரிவிக்கின்றனா். இருப்பினும் ஆங்கிலக் கல்வி மீதான பெற்றோரின் மனநிலை உள்ளிட்ட சில காரணங்களைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு தொடா்ந்து நிதியுதவி செய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2013-2014-ஆம் கல்வியாண்டில் 49 ஆயிரத்து, 864 மாணவா்களும், 2014-15-ஆம் ஆண்டில் 86 ஆயிரத்து 729 மாணவா்களும், 2015-16-இல் 94 ஆயிரத்து 811 மாணவா்களும், 2016-17-இல் 97 ஆயிரத்து 506 மாணவா்களும் தனியாா் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டின் கீழ் சோக்கை பெற்றுள்ளனா்.

அதேபோன்று 2017-18- ஆம் கல்வியாண்டில் 90 ஆயிரத்து 607 மாணவா்களுக்கும், 2018-19-இல் 66,269 மாணவா்களுக்கும் சோக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 2017-18 வரை ஐந்து கல்வியாண்டுகளில் தனியாா் பள்ளிகளில் சோக்கப்பட்ட மாணவா்களுக்கான கல்விக் கட்டணமாக ரூ. 401.98 கோடி அரசின் சாா்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2018-19- ஆம் ஆண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோந்த மாணவா்கள் 66,269 போ உள்பட தனியாா் பள்ளிகளுக்கு ரூ.304 கோடி வழங்க பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

TET ’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்


‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ‘டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது.அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் ‘டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து ‘டெட்' தேர்ச்சி பெறா தவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ‘டெட்' தேர்வுக்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது.

எனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் 'டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது.அதனால் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த முடிவாகியுள்ளது. அதற் கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.

மறுபுறம் தங்கள் வாழ்வாதாரம் கருதி கருணை அடிப்படையில்பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்பு பயிற்சி வழங்கி தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் என ஆசிரியர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை: தொடக்கக் கல்வி இயக்ககம்

அரையாண்டு விடுமுறையில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது தொடா்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு டிச.24-ஆம் தேதி முதல் ஜன.2-ஆம் தேதி வரை அரையாண்டுத் தோவு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்கள் மாணவா்கள் தங்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
மேலும் இந்த விடுமுறை நாள்கள் மாணவா்கள் தங்கள் நண்பா்களுடன் விளையாடி புத்துணா்ச்சி பெறுவதாக அமைய வேண்டும்.

 ஆனால், சில தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக இயக்குநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அரையாண்டு விடுமுறை நாள்களில் எக்காரணம் கொண்டும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறியுள்ளாா்.

Thursday, December 26, 2019

TET - 1,747 ஆசிரியா்களுக்கு சிறப்புத் தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறாத 1,747 ஆசிரியா்களுக்கு சிறப்புத் தகுதித் தோ்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியா் பணியில் சேர ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவா்கள் ‘டெட்’ எழுதி தோ்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது. அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியா்கள் ‘டெட்’ தோ்ச்சி பெறாமல் உள்ளனா்.
   
இதைத் தொடா்ந்து தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் பரவியது. மேலும் சம்பள நிறுத்தம், நோட்டீஸ் வழங்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் பள்ளிகளில் பல ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி பல மாணவா்களின் வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளனா். வகுப்பறையில் அவா்கள் ஒரே பாடத்தை நடத்திவிட்டு, தகுதித் தோ்வில் அனைத்து பாடங்களையும் எழுதும்போது சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதை மனதில் வைத்தும், ஆசிரியா்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதியும் இந்தத் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையால் ஆசிரியா்கள் குடும்பத்தினா் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனா்.
   
எனவே டெட் தோ்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் தொடா்ந்து பணியாற்றுவதற்கான வழிமுறைகளை அரசு தெரிவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து ‘டெட்’ தோ்ச்சி பெறாதவா்களுக்கு சிறப்பு தகுதித்தோ்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியா்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ‘டெட்’ தோ்வுக்கான பயிற்சியும் அரசு சாா்பில் அளிக்கப்பட்டது. எனினும், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற அரசு உதவி பள்ளிகளில் கணிசமானவா்கள் உள்ளனா். 

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. எனினும், டெட் தோ்ச்சி பெறாதவா்களை தொடா்ந்து பணியில் வைத்திருக்க முடியாது. அதனால், ‘டெட்’ தோ்ச்சி பெறாத ஆசிரியா்களுக்கு மட்டும் சிறப்புத் தகுதித் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சியும் அவா்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தனா்.

Wednesday, December 25, 2019

Teacher Wanted ( Technical Teacher Certificate - Drawing )

ஆண்,  பெண் - இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.01.2020

HAPPY CHRISTMAS TO TEACHERSCLUB VIEWERS


SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்

நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (savings account) என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும் அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.

      SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம் எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .

  SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால் SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை

1. கவரிங் லெட்டர்
2. பேங்க் புக் ஜெராக்ஸ்
3. ஆதார் அட்டை நகல்
4. பான் கார்டு நகல்
5. ஆன்லைன் பே ஸ்லிப்

இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் ...


Saturday, December 21, 2019

தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து லீக் போலீசில் புகார் தர கல்வித்துறை முடிவு!!


தமிழக பள்ளி கல்வித்துறை பாட திட்டத்தில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 11ல் துவங்கி நடந்து வருகிறது. டிச., 23ம் தேதி அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இந்நிலையில் அரையாண்டு தேர்வில் பல்வேறு பாடங்களின் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகி விட்டன.

ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள்கள் டிச. 17 18ல் 'யூ டியூப்' வழியாக வெளியாகின. நேற்று நடந்த 10ம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாளும் சமூக வலைதளங்களில் நேற்று காலை வெளியானது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தால் தயாரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.

இந்த வினாத்தாள்கள் தேர்வுக்கு முன் வெளியாகி வருவதால் தேர்வு துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.இதையடுத்து வினாத்தாள் வெளியாகும் சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மார்ச்சில் நடத்தப்பட உள்ள பொதுத்தேர்வில் வினாத்தாள் வெளியாகாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.

BE - PART TIME STUDIES ANNA UNIVERSITY ANNOUNCED LAST DATE TO APPLY

படிப்புகள்:காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி:* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்* எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி:* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங்

படிப்பு காலம்: 3.5 ஆண்டுகள் - 7 செமஸ்டர்கள்
வகுப்பு நேரம்: வார நாட்களில் மாலை 6.15 முதல் 9.15 வரை, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் முழுநேரம்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துறையில் 3 ஆண்டுகள் கொண்ட் டிப்ளமா படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எந்த வயதினரும் சேர்க்கை பெறலாம். குறைந்தபட்ச உடல் தகுதி எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31, 2019
விபரங்களுக்கு: www.annauniv.edu

அடுத்த மாதம் 4, 5, 11, 12 தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாம்.

ஜனவரி மாதம் 4, 5, 11, 12 தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாகு அறிவித்துள்ளார்.

TNPSC ANNUAL PLANNER 2020 PUBLISHED!!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அரசு வேலையை லட்சியமாகக் கொண்ட தேர்வர்கள் இந்த ஆண்டு பணி வாய்ப்பை இழந்தவர்கள் இப்போதே திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டால் அரசுப்பணி உறுதியாகும். திட்டமிட்டு படிப்பதற்கு இந்த அட்டவணை பயனளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.



Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019 - Online Application

Friday, December 20, 2019

ஆசிரியருக்கு மதிப்பீடு டெஸ்ட் கல்வித்துறை நடவடிக்கை

பள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போல, கற்பிக்கும் விதம் தொடர்பாக ஆசிரியர்களையும் சுய மதிப்பீடு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இம்முறையில் மதிப்பீடு செய்யப்பட உள்ளனர். இதற்காக, 'எமிஸ்' கல்வி இணையதளத்தில் ஆசிரியர்களின், 'பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் தான் கற்பிக்கும் வகுப்பு, பாடத்தை தேர்வு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.பாட புத்தகம், மற்றும் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை மேற்கொள்ளுதல், கற்றல் செயல்பாட்டில் அனைத்து குழந்தைகளையும் ஒருசேர ஈடுபடுத்துதல், குழந்தைகள் வகுப்பறை சூழலை ரசிக்கும் வகையில் கற்றல் செயல்பாடுகளை திட்டமிடல், பாடகுறிப்புகள் தயார் செய்தல், கற்றல் திறன் குறைந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துதல், சரியான உதாரணம் கூறுதல் போன்ற கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்.

இதன்மூலம் ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணித்து, மதிப்பீடு செய்யலாம். தொடர்ந்து மதிப்பீடுகள் குறையும்பட்சத்தில், ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை., மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை முதல் ஜன.2 வரை விடுமுறை.

உள்ளாட்சி தேர்தல்,  கிறிஸ்துமஸ் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தகவல்.

டிச.23, 24, 26, 31 விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு.

உயர்கல்வி - பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் நான்கு விடுமுறை அறிவிப்பு

மாநிலத்தின் 27 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்றும் தெரிவிக்கிறேன்.  27.12.2019 மற்றும் 30.12.2019 அன்று.  மேற்கண்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற மாணவர்களின் 2. வாக்குகளை வாக்களிப்பதற்காகவும், வரவிருக்கும் பண்டிகைகளின் பார்வையிலும்.  25.12.2019 அன்று கிறிஸ்துமஸ் மற்றும் 01.01.2020 அன்று புத்தாண்டு கொண்டாட்டம், பல்கலைக்கழக / கல்லூரிகளின் மாணவர்களுக்கு நான்கு (4) கூடுதல் விடுமுறைகளை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  அதன்படி, இந்த நிறுவனங்கள் 21.12.2019 முதல் 01.01.2020 வரை மூடப்பட்டு 02.01.2020 அன்று பல்கலைக்கழகம் / கல்லூரிகளை மீண்டும் திறக்க வேண்டும்.  பல்கலைக்கழகம் / கல்லூரிகள், சனிக்கிழமைகளில் / பிற விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்துவதன் மூலம் நான்கு விடுமுறைகளுக்கு (23.12.2019, 24.12.2019, 26.12.2019 மற்றும் 31.12.2019) ஈடுசெய்யக்கூடும் என்பதையும் நான் குறிப்பிடுகிறேன்.

Thursday, December 19, 2019

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பிஎச்.டி. படிப்பு சேர்க்கை : விண்ணப்பிக்க ஜன. 4-ஆம் தேதி கடைசி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) படிப்பில் சேர்க்கை  பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திறந்தநிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


பல்கலைக்கழகத்தில் யுஜிசி மற்றும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் முழு நேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலாண்மை படிப்புகள், கல்வி, முதியோா் கல்வி, பொருளாதாரம், தொடா் கல்வி, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், தமிழ், மின்னணு ஊடக கல்வி, புவியியல், வரலாறு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், குற்றவியல் நடைமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளலாம்.

 யுஜிசி இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவா்களும் சேர்க்கை  பெற முடியும். முழு நேர ஆராய்ச்சி மாணவா்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை w‌w‌w.‌t‌n‌o‌u.​a​c.‌i‌n என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க 2020 ஜனவரி 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.

DEE - ஆசிரியர்கள் / மாணவர்கள் எண்ணிக்கை 31.08.2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இயக்குநர் உத்தரவு.


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 ன் படியும், பார்வை 2 - ல் காணும் அரசாணையின்படியும், ஒவ்வொரு ஆண்டும் காலமுறை தோறும் (Periodically) ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்வது போன்று இவ்வாண்டும் 31.08.2019 - ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்வது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 1 முதல் 8 படிவங்களில் ஆகஸ்டு - 2019 பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் எவ்வித தவறுக்கும் இடமின்றி விவரங்களைப் பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்குறித்த படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது கீழ்குறித்த அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது .

1. ஆகஸ்டு - 2019 பள்ளி மாதாந்திர அறிக்கை ( பள்ளியின் மாணவர் வருகைப் பதிவேட்டினை ஒப்பிட்டு பார்த்து ) அடிப்படையிலும் மற்றும் EMIS அடிப்படையிலும் மாணவர்கள் பதிவின்படி படிவங்களில் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் .

2 . தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களை அந்தந்த வகுப்புகளுக்கு மொத்தமாகக் கணக்கிட்டு வகுப்புவாரியாக அளிக்கப்பட வேண்டும்.

3 . இருமொழி , மும்மொழி என சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு படிவங்களில் தனியாக விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .

4 . பார்வையில் காணும் அரசாணையின்படி ஆசிரியர் / மாணவர்கள் விகிதாச்சாரம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு ஆசிரியருடன் உபரி / ஆசிரியரின்றி உபரி / கூடுதல் தேவை ஆகியவை அளிக்கப்பட வேண்டும் .

5 . படிவங்களில் அளிக்கப்படும் விவரங்கள் தவறானவை எனப் பின்னாளில் கண்டறியப்பட்டால் அதற்கு சம்மந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பாவர் .

6 . மாணவர் எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் கொண்ட குழு பள்ளியினை பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும் .

 7 . படிவம் - 5 மற்றும் படிவம் - 6ல் சார்ந்த பள்ளியில் ஆசிரியருடன் உபரியாக உள்ள ஆசிரியர் பெயர் அன்னார் அப் பள்ளியில் சேர்ந்த நாள் மற்றும் ஓய்வு பெறும் நாள் ஆகியவை எவ்வித தவறுமின்றி பூர்த்தி செய்யப்பட வேண்டும் .

8 . ஒன்றிய அளவில் ஒட்டு மொத்தமாக ( வட்டாரக் கல்வி அலுவலர்கள் சேர்த்து ) பள்ளிகள் மற்றும் நிர்வாக வாரியாக விவரங்கள் பெறப்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர்கள் கையொப்பம் பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் மேலொப்பம் செய்யப்பட வேண்டும் .

9 . மேற்படி ஒன்றிய அளவில் பெறப்பட்ட விவரங்களை பள்ளிகள் மற்றும் நிர்வாக வாரியாக கல்வி மாவட்ட அளவில் தொகுத்து சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் கையொப்பம் இடப்பட வேண்டும் .

10 . தொடக்கப் பள்ளி / நடுநிலைப்பள்ளிகள் தனித் தனியாக இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரம் , ஆசிரியருடன் உபரி , ஆசிரியரின்றி உபரி மற்றும் கூடுதல் தேவை விவரங்கள் வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் தனியாக அளிக்கப்பட வேண்டும் .

மேற்குறித்த 6 - படிவங்களை கீழ்க்குறித்த கால அட்டவணையின்படி அந்தந்த மாவட்டங்கள் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்படி பணியினை முடித்து வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து புத்தக வடிவில் தயார் செய்தும் குறுந்தகட்டில் பதிவு செய்தும் 31 . 12 . 2019க்குள் தனி நபர் மூலம் இவ்வியக்ககத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணய பணிக் கால அட்டவணை விவரம் : 


Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education


TET தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு!


அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 ன் பிரிவு 23(1)ல், மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்படத் தகுதி பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2008 , 2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாமல் அரசு உயுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாணை நிலை எண் . 181 பள்ளிக்கல்வி ( சி2 ) த் துறை நான் 15.11. 2011 முதல் ஐந்தாண்டுகளுக்குள் ( TET ) தேர்ச்சி பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நான்கு முறை தமிழக அரசால் தகுதித் தேர்வு TET நடத்தி வாய்ப்புகள் வழங்கப்பட்டும் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பாணைகளின் அடிப்படையில் ஊதியம் விடுவிக்கப்பட்டு நாளது தேதி வரை ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது . எனவே மேற்காண் 1747 ஆரிரியர்கள் சார்ந்த விபரங்களை பூர்த்தி செய்து கீழ்காண் படிவத்தில் 20.12.2019 அன்று மதியம் 100 மணிக்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Wednesday, December 18, 2019

பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!!

பத்திரிக்கை செய்தி

உள்ளாட்சி தேர்தல் - 2019 தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், வட்டார ஊராட்சி உறுப்பினர்கள், சிற்றுராட்சி உறுப்பினர்கள் மற்றும் சிற்றுராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது .

மேற்காணும் தேர்தலுக்காக 13595 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 15.12.2019 அன்று முதற் கட்ட பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளாதது தெரிய வந்துள்ளது.

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வருகை தராத 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவனா மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை


அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கவனமுடனும், சரியான முறையிலும் மதிப்பீடு செய்ய வேண்டும் என அறிவுரை கூறப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மற்ற ஆசிரியர்களை கொண்டு மறுகூட்டலுக்கு உட்படுத்த வேண்டும்.

மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கவேண்டும் - ஜனவரி முதல் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு !


நாட்டு மக்கள் உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை வலியுறுத்தி திறன் இந்தியா இயக்கம் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார் . 

அதன்படி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப பாடவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யு . ஜி . சி) உத்தரவிட்டு இருக்கிறது .

உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தில் ஓடுதல், யோகா, நீச்சல் உள்பட ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி  நிறுவனங்கள் தேர்வு செய்து, மாணவர்களை அதில் உட்படுத்த வேண்டும். அதற்கென்று தனியாக ஒரு மையத்தை அமைத்து, ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்பதை உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இதை விரைந்து அமல்படுத்திட வேண்டும். மேற்கண்ட தகவல் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தழிழ் மற்றும் தமிழனின் பெறுமைகள்



DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு!


சிறந்த அறிவியில் ஆசிரியர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகைப் பாடப்பிரிவுகளில் 7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்பு எடுத்திடும் தகுதி வாய்ந்த சாதனைகள் புரிந்துள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர் . மொத்தம் 10 ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது .

இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பித்திட மாதிரி விண்ணப்பப் படிவம் தொடர்பான விதிகள் www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தகவலினைத் தெரிவித்து சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது 2019 - 2020 வழங்க ஏதுவாக அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகைப் பாடப்பிரிவுகளில், பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு 5 பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 15.09. 2019 அன்று மாலை 5.30 மணிக்குள் இணைஇயக்குநர் (தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது .

பார்வை 4-ல் காணும் அறிவியல் நகரம், உயர்கல்வித்துறை துணைத்தலைவர் அவர்களின் கடிதத்தில் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30-12-2019 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே, உடனடியாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு இத்தகவலினை தெரிவித்து பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 24.12.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் இணைஇயக்குநர் (தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது .

சி.பி.எஸ்.இ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று அறிவித்தார். அதன்படி, பிப்., 15ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. பிப்., 26 வரை, தொழிற்கல்விமற்றும் விருப்ப பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், பிப்ரவரி, 27ல் துவங்குகின்றன. பிப்., 27ல் ஆங்கில மொழி தாள் தேர்வு நடத்தப்படுகிறது. பின், படிப்படியாக முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளன.பிளஸ் 2வுக்கு, மார்ச், 30ல் தேர்வுகள் முடிகின்றன. தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, மூன்று மணி நேரம் நடக்க உள்ளன.

10ம் வகுப்புபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்., 15ல் துவங்க உள்ளது. பிப்., 20 வரை விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. அதன்பின், பிப்., 22ல் மொழி பாட தேர்வுகள் துவங்க உள்ளன.முக்கிய பாடங்களுக்கான தேர்வு, மார்ச், 4 முதல் நடத்தப்படுகிறது; மார்ச், 20ல் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இந்த தேர்வுகள், காலை, 10:30 முதல் பகல், 1:30 மணி வரை நடத்தப்பட உள்ளன.

Tuesday, December 17, 2019

WOMEN AND CHILD SAFETY


2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இந்த வாரம் வெளியீடு - TNPSC.!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாலும், அடுத்த ஆண்டு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதாலும் அதிக எண்ணிக்கையிலான பதவிகளுக்கு போட்டித்தேர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இந்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


Monday, December 16, 2019

வேலைவாய்ப்பை பாதிக்காத புதிய படிப்புகள்; துணைவேந்தர் வலியுறுத்தல்

வேலைவாய்ப்புக்களை பாதிக்காத வகையில் கல்லுாரிகளில் புதிய படிப்புகள் துவங்க வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இப்பல்கலையில் நடந்த கல்விப் பேரவை கூட்டத்தில் பேராசிரியர் கண்ணன், பி.எஸ்சி., மரைன் சயின்ஸ் அன்ட் ஹாஸ்பிட்டாலிட்டி&' என்பதை மரைன் ஹாஸ்பிட்டாலிட்டி சயின்ஸ் என மாற்றம் செய்ய தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இதற்கு சிண்டிகேட் உறுப்பினர் தீனதயாளன், &'இதுபோன்று மாற்றம் செய்யும்போது சம்மந்தப்பட்ட பாடத்திட்டத்தில் கட்டாய பகுதிகள் உரிய அளவில் இடம் பெற வேண்டும்&' என்றார்.பேராசிரியர் பொன்னுசாமி, &'எம்.ஏ., பொருளியல் பாடம், &'பொருளியல் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்&' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் மதுரையில் ஒரு கல்லுாரியின் மாணவிகள் பலர் வேலை வாய்ப்பை இழந்தது சர்ச்சையானது&' என்றார்.

துணைவேந்தர் கிருஷ்ணன் பேசியதாவது: 

அந்த படிப்புக்கு கட்டாயப் பகுதிகளை யு.ஜி.சி., குறிப்பிட்டிருக்கும் சதவீதம் சேர்க்க வேண்டும். புதிய படிப்பு துவங்குவதற்கு முன் இதை கல்லுாரிகள் கவனிக்க வேண்டும்.

இதுகுறித்து பல்கலை &'போர்டு ஆப் ஸ்டடிஸ்&' கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். டி.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., போன்றவை அந்த படிப்புக்களை அங்கீகரித்துள்ளனவா அல்லது அதற்கு இணையான சான்று பெறமுடியுமா என கல்லுாரிகள் கண்காணித்து மாணவர் எதிர்காலம் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கல்லுாரி முதல்வர்கள் பட்டியல் கல்வியியல் பல்கலை உத்தரவு

முதல்வர்களின் பெயர், அவர்களின் கல்வி தகுதி பட்டியலை தாக்கல் செய்யுமாறு, பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகள், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிமுறைகளின் கீழ் செயல்பட வேண்டும். அதேபோல, பாடத் திட்டம், தேர்வு முறை, பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றில், கல்வியியல் பல்கலைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.அந்த வகையில், அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியான முதல்வர்களை பணி அமர்த்த, கல்லுாரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது.

ஆனால், பல கல்லுாரிகளில் முதல்வர்களுக்கு சரியான கல்வி தகுதி இல்லை என்றும், சில கல்லுாரிகளில் முதல்வர்களே இல்லை என்றும், புகார்கள் எழுந்துள்ளன. 

இதையடுத்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 

தங்கள் கல்லுாரிகளில் பணியாற்றும் முதல்வர்களின் பெயர், கல்வி தகுதி, அவர்களின் நியமனத்துக்கு, பல்கலையில் பெற்ற அனுமதி கடிதம் போன்றவை குறித்த விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் போர்க்கப்பல் மாணவர்கள் பார்க்க அனுமதி

துாத்துக்குடியில் கடற்படை தினத்தையொட்டி மாணவர்கள் பொதுமக்கள் போர்க்கப்பலை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிச. 4ல் இந்திய கடற்படைதினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டிச.14 மற்றும் 15ல் மாணவர்கள் துாத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திற்கு வரும் கடற்படை போர்க்கப்பலை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிச.14ல் பகல்1:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும் பள்ளி மாணவர்கள் பார்க்க அனுமதி. டிச.15ல் உயர் கல்வி மாணவர்கள் பொதுமக்கள் காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரையிலும் பார்க்கலாம்.

போர்க்கப்பலை பார்க்க வரும் மாணவர்கள் பள்ளி சீருடையில் பள்ளி முதல்வர் தலைமையாசிரியரின் முத்திரையிட்ட மாணவர் பட்டியலுடன் வரவேண்டும். அவர்களுடன் ஆசிரியர்கள் வரவேண்டும். பொதுமக்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் ஆதார் அட்டைகளை கொண்டு வரவேண்டும். அலைபேசி பை காமிராக்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. 

விபரங்களுக்கு 73562 18196 என்ற எண் ,enccomcentvlnavy@nic.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, December 15, 2019

கர்ப்பிணி ஆசிரியர்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த ஆசிரியர்கள் உரிய ஆவணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெறவும்.

SBI ATM கார்டுகள் இனி செல்லாது! அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

நாடு முழுவதும் வங்கியின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது. 

அதே போல், ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது மறைமுகமாக கேமரா பொருத்தி பின்கள் மற்றும் கார்டின் விவரங்களை அறிந்து எளிதாக பணம் திருடப்படுகிறது.

இதனை தடுப்பதற்காக அனைத்து வங்கிகளும்,இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் எளிதாக ஹேக் செய்ய முடியும் என்பதால், பாதுகாப்பு கருதி எஸ்பிஐ ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படிசிப் பொருத்தப்படாத அனைத்துக் கார்டுகளையும் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடக்கவுள்ளதாகவும், அதன் பின்பு பழைய சிப் பொருத்தப்படாத கார்டுகளை ஏடிஎம் மற்றும் எந்தவிதப் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியாது எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

புதிய ஏடிஎம் கார்டுகளை வாங்க வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது எஸ்பிஐ யோனோ ஆப், ஆன்லைன் பேங்கிங் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் முன் உங்களது வீட்டு முகவரி சரியாக உள்ளதா என்பதையும் சரிப்பார்த்துக் கொள்ளவும். மேலும் வங்கிகளில் நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பவர்கள் நீங்கள் எந்த கிளையில் கணக்குத் தொடங்கினீர்களோ அங்கு சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

1முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பீடு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் விதம் தொடர்பாக சுய மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பள்ளி மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவது போன்று ஆசிரியர்களிடமும் சுய மதிப்பீடு மேற்கொள்ள கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் சென்று  ஆசிரியர்கள் தங்களின் பெயர், யூசர்நேம் ஆகியவற்றை பதிவு செய்து ‘பெர்பாமன்ஸ் இன்டிகேட்டர்’ பிரிவில் சென்று ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடத்தை தேர்வு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் அதை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாட புத்தகம் மற்றும் அது தொடர்புடைய கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை மேற்கொள்ளுதல், கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் எல்லா குழந்தைகளையும் ஒரு சேர ஈடுபடுத்துதல், குழந்தைகள் வகுப்பறை சூழலை ரசிக்கும் வகையில் கற்றல் செயல்பாடுகள் திட்டமிடுதல், அனைத்து குழந்தைகளாலும் எதிர்பார்க்கப்படும் வகையில் கற்றல் முடிவு அமையும் வகையில் பாட குறிப்புகள் தயார் செய்தல், கற்றல் திறன் குறைந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துதல், பாடத்தில் உள்ள உள்ளடக்கத்தை குழந்தைகளுக்கு சரியான எடுத்துகாட்டுகளுடன் புரிய வைத்தல் உள்ளிட்ட 8 அம்சங்கள் தொடர்பாக கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்.

இதில் ஒரு கேள்விக்கு நான்கு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புக்கு கீழ், நெருக்கமாக, பூர்த்தி செய்தல், மீறுகிறது என்பது ஆகும். இதன் மூலம் ஆசிரியர்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்படும் என்றும், தொடர்ந்து மதிப்பீடுகள் குறைவாக இருப்போருக்கு பயிற்சி அளித்தல், அவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் போன்றவையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைமை ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பிற்கு அரையாண்டுத் தேர்வுகள் இன்று முதல் டிசம்பர் 23 தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. 

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 11ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது. அரையாண்டு தேர்விற்கு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியாக வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

9ம் வகுப்பு அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், வினாத்தாள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமும் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அன்றைய பாடத்துக்கான வினாத்தாள் கட்டுக்களை வினாத்தாள் பயிற்று மையத்தில் மட்டுமே பொறுப்பான ஆசிரியர் அல்லது பணியாளரை அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டும்.

வினாத்தாள்களை பெற்றுக் கொண்ட நேரம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு தேர்வு அறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் நாளில், ஒரு அறைக்கு 10ம் வகுப்பில் 10 மாணவர்களும், 12ஆம் வகுப்பில் 10 மாணவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
தினசரி வினாத்தாள் இணை தலைமை ஆசிரியரின் நேரடி பார்வையில் வழங்கப்பட வேண்டும்.

9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் பொதுத்தேர்வு போலவே கண்டிப்புடனும், தேர்வு முறைகேடுகள் இல்லாத வகையிலும் நடைபெற வேண்டும். புகார்கள் செய்யப்பட்டால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 10, 12ம் வகுப்பு அரையாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை தேர்வுத் துறை விடுத்துள்ளது.

இலவச மடிக்கணினி பெற 16-ஆம் தேதி கடைசி நாள்.!!


2017-18 மற்றும் 2018-19 -ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற 16-ஆம் தேதி கடைசி நாள்.

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 16ஆம் தேதிக்குள் கூடுதலாக இலவச மடிக்கணினிகள் தேவைப்பட்டால் அவற்றை பெறுவதற்கு தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மடிக்கணினிகள் மீதம் இருந்தால் அது குறித்த விவரங்களை 17ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்

உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி மாணவர்கள் 16ஆம் தேதிக்குள் இலவச மடிக்கணினி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 14, 2019

தமிழகத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!!

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட அரசுப் பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். ஏற்கெனவே இந்தியாவில் 1094 கேந்திர வித்யாலய பள்ளிகளும், வெளிநாடுகளில் மூன்று பள்ளிகளும் அமைந்துள்ளன.


இந்தப் பள்ளிகள் அனைத்தும் மத்திய அரசுப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பொதுவான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுவதால் வேறு பள்ளிகளுக்கு மாறினாலும் குழந்தைகளின் கல்வித் தரம் இதனால் பாதிப்படைவது இல்லை.

நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை நிறுவப் போவதாக 2019 ஆம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் அமைய உள்ள 4 பள்ளிகளில் கோவை , மதுரை , சிவகங்கை ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.