திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, April 25, 2018

24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அறிவிப்பு

இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவை பட்டப் படிப்புகள் வழங்கத் தகுதி இல்லாதவை எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(1) இன் படி, மத்திய அல்லது மாநில அரசு சட்டத்தால் உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்கள், யுஜிசி சட்டம் பிரிவு (3) கீழ் அனுமதிக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் உருவாக்கப்படும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே பட்டப் படிப்புகளுக்கான பட்டத்தை வழங்க முடியும்.
இந்தச் சட்டங்களின்படி உருவாக்கப்படாமல், யுஜிசியின் அங்கீகாரம் பெறாமல் நாடு முழுவதும் இயங்கி வரும் 24 கல்வி நிறுவனங்கள் போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்படுகின்றன. அக்கல்வி நிறுவனங்கள் பட்டங்கள் வழங்கத் தகுதியில்லாதவை என யுஜிசி அறிவித்துள்ளது.
போலி பல்கலைக்கழகங்கள் எவை?
1. மைதிலி பல்கலைக்கழகம் (விஷ்வவித்யாலயா), பிகார்.
2. கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், தரியாகஞ்ச், தில்லி.
3. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தில்லி.
4. தொழில்படிப்பு (வொக்கேஷனல்) பல்கலைக்கழகம், தில்லி.
5. ஏ.டி.ஆர். சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், புதுதில்லி.
6. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புதுதில்லி.
7. விஸ்வகண்ணா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம், 
     புதுதில்லி.
8. அதியாத்மிக் விஷ்வவித்யாலய, ரோஹினி, தில்லி.
9. பதகன்விசர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சமூகம், பெல்காம்,      கர்நாடகா.
10. புனித ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கேரளம்.
11. ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாகபுரி.

12. இந்திய மாற்று மருந்து நிறுவனம், சவுரிங்கிசாலை, கோல்கத்தா.
13. இந்திய மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தகுர்புகுர் , கோல்கத்தா.
14. வரணசேயா சம்ஸ்க்ருத விஷ்வவித்யாலய, வாராணசி.
15. மஹிலா கிராம வித்யபீடம் (விஷ்வவித்யாலய - மகளிர் பல்கலைக்கழகம்),              அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.
16. காந்தி ஹிந்தி வித்யபீடம், அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.
17. தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர்,              உத்தரப்பிரதேசம்.
18.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை பல்கலை.),                   அலிகார், உத்தரப்பிரதேசம்.
19. உத்தரப்பிரதேஷ் விசுவ வித்யாலய, மதுரா, உத்தரப்பிரதேசம்.
20. மஹரானா பிரதாப் சிக் ஷா பரிஷத், பிரதாப்கர், உத்தரப்பிரதேசம்.
21. இந்திரபிரசாதா ஷிக் ஷ பரிஷத், நொய்டா (பகுதி-2) உத்தரப்பிரதேசம்.
22. நவபாரத் ஷிக்ஷ பரிக்ஷத், ரூர்கேலா.
23. வேளாண் மற்றும் தொழில்நுட்ப வடக்கு ஒடிஸா பல்கலைக்கழகம், மயூர்பஞ்,           ஒடிசா.
24. ஸ்ரீ போதி உயர் கல்வி அகாதெமி, புதுச்சேரி.

No comments:

Post a Comment