11வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐதராபாத்,
11 வது ஐபிஎல் போட்டியின் 20வது லீக் ஆட்டம் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும்(பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது.
அதே போல் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 வெற்றிகளையும், ஒரு தோல்வியும் அடைந்து 6 புள்ளிகளுடன் உள்ளது.
இந்நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
No comments:
Post a Comment