
உத்தர பிரதேசத்தில் நின்ற லாரி மீது வாகனம் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
லகிம்பூர்,
உத்தர பிரதேசத்தில் லகிம்பூர் கேரி பகுதியில் சரக்கு ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 17 பயணிகளுடன் ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று அந்த வழியே வந்தது. அது நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment