திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, April 22, 2018

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நாளை முதல் ஒரு வாரம் நடக்கிறது

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நாளை முதல் ஒரு வாரம் நடக்கிறது
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரம் நடக்கிறது. இதனையொட்டி மாணவர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு 65 ஆயிரத்து 562 விபத்துகள் ஏற்பட்டு 16 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்தனர். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள்தான் அதிகம்.

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.

தொடக்க விழாவில் சென்னை தீவுத்திடலில் இருந்து காந்தி சிலை வரையிலும், இதர மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.

இதில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், வாகன விற்பனையாளர்கள், டிரைவர்கள், என்.எஸ்.எஸ். மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட பல தரப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.

24-ந் தேதி அனைத்து இருசக்கர வாகன முகவர்கள், நான்கு சக்கர வாகன டிரைவர்கள் கலந்து கொள்ளும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த பேரணியை அவரவர் அலுவலகங்களில் நடத்த உள்ளனர்.

25-ந் தேதி அதிக வேகம், அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடிபோதையில் வாகனம் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

26-ந் தேதி பள்ளி மற்றும் கல்லூரி பஸ் டிரைவர்கள், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கணினி மென்பொருள் தனியார் நிறுவன டிரைவர்கள் கலந்து கொள்ளும் இலவச மருத்துவ முகாம் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படுகிறது.

27-ந் தேதி சுங்கச்சாவடி மையங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகிறது. வாகனத்தின் பின்புறங்களில் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விழிப்புணர்வு அறிவுரை வழங்கி சோதனை செய்யப்படுகிறது.

28-ந் தேதி மாநிலம் முழுவதும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊர்க்காவல் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

29-ந் தேதி சாலை பாதுகாப்பு குறித்த செயலாக்கப் பணிகள் மேற்கொள்ளுதல், தலைக்கவசம் அணியாமல் பயணித்தல் உள்ளிட்ட பல விதிமீறல்கள் குறித்த சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment