காந்திநகர்,
குஜராத்தில் இன்று மாலை 4.56 மணியளவில் லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் தெதியப்படா, சாக்பரா மற்றும் ராஜ்பிப்லா ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் யாருக்கும் காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை.
இது காந்திநகரில் இருந்து தெற்கே 213 கி.மீட்டர் தொலைவில் பரூச் அருகே மையம் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment