திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, April 20, 2018

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி சந்திரபாபுநாயுடு உண்ணா விரத போராட்டம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி சந்திரபாபுநாயுடு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். 
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி சந்திரபாபுநாயுடு உண்ணா விரத போராட்டம்

தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 20.6.2014 அன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அறிவித்தார்.  நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து இன்னும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதனைக்கண்டித்து, சந்திரபாபுநாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விலும் ஆந்திர மாநில எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை முடக்கினர். 

மத்திய அரசைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர்  தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்து வருகிறார். 

அந்த வகையில், வரும் ஏப்ரல் 20-(இன்று) தனது பிறந்தநாளன்று ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து சந்திரபாபுநாயுடு உண்ணா விரத போராட்டத்தை துவங்கியுள்ளார். விஜயாவாடாவில் நடைபெறும் இந்த ஒருநாள் உண்ணா விரத போராட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர். 

No comments:

Post a Comment