
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் தக்ஷின் தினஜ்பூர் மாவட்டத்தில் இன்று காலை 2.24 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
நில நடுக்கத்தின் மையப்புள்ளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment