
குஜராத்தில் பேருந்துடன் டிராக்டர் மோதிய விபத்தில் 9 பேர் பலியாயினர்.
குஜராத் மாநிலத்தின் குட்ஜ் மாவட்டத்தில் பேருந்து ஒன்றுடன் டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் 9 பேர் பலியாயினர்.
குஜராத்தின் குட்ஜ் மாவட்டத்தில் பாச்சோ நகரத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள். ஏற்கனவே 9 பேர் இறந்த நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment