சிபிஎஸ்இ வினாத்தாளை வெளியிட்டது ஆசிரியா்கள் என டெல்லி போலீஸ் தகவல்.
மத்திய அரசு கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 28-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணிததேர்வு ஆகியவற்றின் வினாத்தாள் டெல்லி உள்பட வட மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னா், சிபிஎஸ்இ வினாத்தாளை 2 ஆசிரியா்கள் தான் வெளியிட்டுள்ளதாக சிபிஐ விசாரணையில் கண்டுப்பி்டிக்கப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்கு சிபிஎஸ்இ வினாத்தாளை 2 ஆசிரியா்கள் போட்டோ எடுத்துள்ளனா். போட்டோ எடுத்த வினாத்தாளை பயிற்சி மைய உரிமையாளருக்கு 2 பேரும் அனுப்பியதாகவும் மேலும், கையெழுத்து வடிவிலும் வினாத்தாள் மற்றும் விடைகள் வெளியானதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் 2 ஆசிரியா்கள் மற்றும் தனியார் பயிற்சி மைய உரிமையாளா் ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment