திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, April 14, 2018

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் முகவரி மாற்றம் அறிவிப்பு

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தற்போதுள்ள டிபிஐ வளாகம், சென்னை – 06 என்ற முகவரிலிருந்து ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடம் (தரைத்தளம்), 571 அண்ணாசாலை நந்தனம், கால்நடை மருத்துவமனை வளாகம், சென்னை -35 என்ற புதிய முகவரியில் மாற்றப்பட்டுள்ளது.


பேருந்து எண் : 29b, 47A, 147A


டிப்ளமா தேர்வுக்கு பதிவு துவக்கம்


தொடக்க கல்வி ஆசிரியர் பதவிக்கான, டிப்ளமா தேர்வுக்கு, வரும், 16ம் தேதி முதல், தனித்தேர்வர்கள் பதிவு செய்ய லாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர தேவையான, டிப்ளமா படிப்புக்கான தேர்வு, ஜூன், 4 முதல், 21 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், ஏப்., 16 முதல், 21 வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தங்கள் விபரங்களை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம் - ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்

 ''கோடை விடுமுறை, வரும், ௨௧ல் துவங்குகிறது. மீண்டும் ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை, துவக்கிவைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில், 60 கோடி ரூபாய் செலவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர் வரை, அனைத்து கல்வியும் பயிலும் வகையில், 463 கோடி ரூபாய் செலவில், இன்டர்நெட் வசதி செய்யப்படுகிறது.

வரும்,21 முதல் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எந்த பள்ளியாக இருந்தாலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மே, 2ல் பள்ளிகளில் சேர்க்கை துவங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டம் மே, 1க்குள் தயாராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது?

தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், கல்வி ஆண்டு துவக்கத்தில், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். 

2017க்கு முன் வரை, ஜூலை மற்றும் ஆகஸ்டில், இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. 2017 முதல், கோடை விடுமுறையின் போதே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளதால், மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

மேலும், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியும் பாதிக்கப்படாமல், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த முறை, அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, கவுன்சிலிங்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment