மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க அது இன்னும் பரவும்: கமல்ஹாசன்
மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க அது இன்னும் பரவும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இது குறித்து மேலும் கூறியதாவது:- “ காவிரி மேலாண்மை வாரியம் உயிர், பயிர், காலம், சம்மந்தமானது இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு வரவில்லை, அழைப்பு வந்தால் கலந்துகொள்வோம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை, ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு” இவ்வாறு அவர் கூறினார். அதிமுக உண்ணாவிரதம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், எங்கள் கட்சிக்கு உண்ணாவிரதத்தின் மேல் நம்பிக்கையில்ல” என்றார்.
No comments:
Post a Comment